12 ராசிகளுக்கும் இந்த ஆடி மாதம் எப்படி இருக்கும்?

0
492

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். இந்த மாதத்தில் சூரியன் கடகம் ராசியில்
அமர்கிறார். தமிழ் ஆண்டின் 4வது மாதமான ஆடி, தட்சிணாயனப் புண்ணிய காலத்தின்
தொடக்கமாகவும் உள்ளது

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வழிபட்டால் வீட்டில் செல்வம் சேரும். ஆடி கடைசி வெள்ளிக்கிழமை மகாலட்சுமிக்கு உகந்த வரலட்சுமி விரதம் இருப்பது கூடுதல் பலன்களை தரும். இந்த் மாதத்தில் 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்

அரசாங்க பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும், அரசு ஒதுக்கீட்டில் வீடு
கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும், எல்லா செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.
படிப்பில் மேன்மை நிலை உண்டாகும், வீடு கட்டும் எண்ணம் நிறைவேறும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும், சம்பளம் அதிகரிக்கும். கலைகளில் ஆர்வம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் தொல்லை உருவாகும். பரம்பரை தொழிலில் முன்னேற்றம் ஏற்படும், தொழில் நிமித்தமாக வெளிநாடு செல்வீர்கள். வாகனங்களை பராமரிப்பு செய்து கொள்வது நல்லது. முயற்சிகள் வெற்றியடையும்.

ரிஷபம் :

உத்தியோகத்தில் இடம் மாற்றம் உண்டாகும், அடிக்கடி பக்கத்து ஊருக்கு பிரயாணம்
செய்யும் நிலை உண்டாகும். பிதுரார்ஜித சொத்தில் பங்கு கிடைக்கும், குல தெய்வ
கோயிலுக்கு செல்வீர்கள். தகவல் தொடர்பு சிறப்படையும், மனதில் குதுகலம் உண்டாகும்.
குடும்பச் செலவுக்காக கடன் வாங்குவீர்கள், கௌரவம் பாதிக்கப்படும். வீட்டை
அழகுபடுத்துவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் உல்லாசப் பயணம் செல்வீர்கள். மனதில்
இனம் புரியாத பயம் உண்டாகும், ராகு மூன்றாமிடத்தில் இருப்பதால் சிந்தனையில்
தடுமாற்றம் உண்டாகும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மிதுனம் :

வருமானம் அதிகரிக்கும், பேச்சில் அதிகாரம் தூள் பறக்கும்.. செவ்வாய் எட்டாமிடத்தில்
இருக்கிறார் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், திடீர் என்று பணம் கிடைக்கும்..

நீண்ட நாட்கள் கிடைக்காமல் பாக்கி இருந்த பணம் வசூலாகும், சமயோசிதமாக பேசி
காரியம் சாதித்துக் கொள்வீர்கள்.. தொழிலில் முன்னேற்றம் உண்டாகும், செல்வ நிலை
சிறப்படையும். பெண்களால் நன்மை உண்டாகும் 16ம் தேதிக்குப் பின்னர் வீட்டுக்கு
வேண்டிய பொருட்களை வாங்குவீர்கள்.

தொழில் கூட்டாளிகளுடன் நல்லுறவு நீடிக்கும், தொழிலுக்காக அடிக்கடி பிரயாணம்
செய்யும் நிலை உண்டாகும்.. வருமானம் அதிகரிக்கும். எதிர்பாராத வகையில் பணம்
கிடைக்கும்.

கடகம் :

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் பதவி உயர்வு
கிடைக்கும்.

வீடு வாங்கி விற்ப்பவர்கள் நிலை முன்னேற்றமடையும், உறவினர்களினால்
நன்மை உண்டாகும்.தாய் மாமனால் நன்மை உண்டாகும், புத்திக் கூர்மை அதிகர்க்கும்.
சொத்துக்களின் சேர்க்கை அதிகரிக்கும், படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்..

சுக்கிரன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் வீடு மாற்றம் செய்யும் நிலை ஏற்படும். கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், கடன் வாங்கும் நிலை உண்டாகும். தேவையற்ற மனக் குழப்பம் உண்டாகும். . கேது உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில் இருப்பதால் நண்பர்களுடன் தகராறு உண்டாகும்.

சிம்மம்

செலவுகள் அதிகரிக்கும், வீண் அலைச்சலால் அசதி உண்டாகும். மின்சார சாதனங்களை கையாளும் பொழுது மிகவும் கவனமாக இருக்கவும், சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும். புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுக்காக செலவுகள் செய்ய வேண்டியிருக்கும், அக்கம்பக்கத்தாரால் நன்மை உண்டாகும், மனதில் சந்தோஷம் உண்டாகும்.. மனதில் சந்தோஷம் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் பண வரவு கணிசமாக இருக்கும்.பொழுது போக்கு விஷயங்களில் கவனம் அதிகரிக்கும், பரம்பரை விவசாய நிலம் கிடைக்கும். தூக்கம் அதிகரிக்கும். எதிரிகளால் தொல்லை உண்டாகும்.

கன்னி

அரசு அதிகாரிகளுக்கு சம்பளம் அதிகரிக்கும், மூத்த சகோதரருடன் சச்சரவு உண்டாகும்.. புதிதாக நிலம் வாங்குவீர்கள், உறவினர் வீட்டு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.
மனதில் நினைப்பவை எல்லாம் தடையில்லாமல் நடக்கும், குடும்பத்தில் சந்தோஷம்
அதிகரிக்கும், வங்கி சேமிப்பு உயரும். மனைவிக்காக செலவுகள் அதிகரிக்கும் 16ம்
தேதிக்குப் பின்னர் திருமணம் ஆகாதவர்களுக்கு வரன் நிச்சயமாகும்.. படிப்பு மந்தமாகும், வீட்டை பராமரிப்பு செய்வீர்கள். செயல்கள் எல்லாம் சிறப்படையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

துலாம்

அரசாங்க வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு வேலை கிடைக்கும், தொழில் நிலை
சிறப்படையும். . புதிதாக நிலம் வாங்குவீர்கள், படிப்பில் கவனம் அதிகரிக்கும், தொழில்
சம்பந்தமான படிப்பில் முன்னேற்றம் ஏற்படும். உறவினர்களிடையே நல்ல பெயர்
கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீர்கள் 16ம் தேதிக்குப் பின்னர் மனைவிக்காக
செலவுகள் அதிகரிக்கும். நண்பர்களுடன் தகராறு உண்டாகும், அடிக்கடி வெளியூருக்கு
செல்லும் நிலை உண்டாகும். எல்லா முயற்சிகளும் சிறப்படையும். புதிதாக வீடு கட்டும் யோகம் உண்டாகும்.

விருச்சிகம்

அப்பாவின் சொத்து கிடைக்கும், பரம்பரையாக செய்துவந்த தொழில் சிறப்படையும்.
நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனம் தேவை, வீடு மாறும் நிலை ஏற்படும். உயர் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும், வியாபாரம் விருத்தியடையும். குழந்தைகளின்படிப்பு செலவுகள் அதிகரிக்கும், வங்கி சேமிப்பு கரையும். 16ம் தேதிக்குப் பின்னர் பெண்களால் நன்மை உண்டாகும்..தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்க்கவும், பண வருமானத்தில் தாமதம் உண்டாகும்.. அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் சஞ்சலம் உண்டாகும்.

தனுசு

அப்பாவுடன் சச்சரவு செய்ய வேண்டாம், செயல்களில் கவனம் தேவை. கோபமான
பேச்சுகளை தவிர்க்கவும், வீட்டு வாடகை மூலம் வருமானம் உண்டாகும். யாருக்கும்
கடன் கொடுக்க வேண்டாம். உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு நீண்ட நாள்
ஆசைகள் நிறைவேறும், லாபம் அதிகரிக்கும். சுக்கிரன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார்
கடவுள் அருள் அதிகரிக்கும் 16ம் தேதிக்குப் பின்னர் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். வேலைப்பளு அதிகமாக இருக்கும், பண வரவும் சரளமாக இருக்கும். கடவுள் பக்தி அதிகரிக்கும்.. குடும்பத்தின் மொத்த வருமானம் அதிகரிக்கும்.

மகரம்

கூட்டுத் தொழில் சிறப்படையும், அடிக்கடி நீண்ட தூரம் பிரயாணம் செல்லும் நிலை
உண்டாகும்ச. சகோதரர்களால் நன்மை உண்டாகும், மனதில் கோபம் அதிகரிக்கும்.
சில்லறை வியாபாரம் சிறப்படையும், தாய் மாமனால் நன்மை உண்டாகும்.. எல்லா
செயல்களும் வெற்றியடையும், வெளிநாட்டு தொழில் தொடர்புகள் சிறப்படையும். விலை உயர்ந்த பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்ளவும் 16ம் தேதிக்குப் பின்னர் ஆடம்பரப் பொருட்களை வாங்குவீர்கள். செலவுகள் அதிகரிக்கும், தொழில் காரணமாக வெளியூருக்கு செல்வீர்கள்.. நண்பர்களால் நன்மை உண்டாகும். மனதில் லேசான தடுமாற்றம் ஏற்படும்.

கும்பம் :

புதிய வேலை கிடைக்கும், உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். தேவையற்ற
செலவுகளில் கவனம் தேவை, வெளியூர் பயணம் நன்மையைத் தரும். தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும், . பண வரவு அதிகரிக்கும், கடவுள் அனுக்கிரகம் துணை இருக்கும்..

கணவன் மனைவி அன்னியோன்னியம் அதிகரிக்கும் 16ம் தேதிக்கு பின்னர் ஆடை
ஆபரணங்களை கவனமாக கையாளவும். வங்கி சேமிப்பு அதிகரிக்கும், மனதின்
எண்ணங்கள் நிறைவேறும்.. எதிரிகளின் தொல்லை நீங்கும். குல தெய்வக் கோயிலுக்கு
வேண்டுதலை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்

போட்டிகளில் வெற்றி கிடைக்கும், அப்பாவினால் ஆதாயம் உண்டாகும்.உடன்
பிறப்புகளுக்கு உதவுவீர்கள், வீட்டு வாடகை மூலம் வருமானம் கிடைக்கும். புதன்
ஐந்தாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் வியாபாரம் சிறப்படையும், ஷேர் மார்க்கெட்
முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும்.

உங்கள் ராசிநாதன் குரு உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தில் இருக்கிறார் எதிர் பாராத இடத்திலிருந்து பணம் கிடைக்கும், பேச்சில் இனிமை அதிகரிக்கும். கடன் வாங்கும் நிலை உண்டாகும், 16ம் தேதிக்கு பின்னர் வாழ்க்கைத் துணையின் உதவி கிடைக்கும். செயல்கள் சிறப்படையும், சொந்தத் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். ஆன்மீகப் பயணம் செல்வீர்கள்,லாபம் அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here