சிவன் கோவிலுக்குள் போறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுகிட்டி போங்க!

0
3492

ஒவ்வொரு கோவிலிலும் ஒரு ஐதீகம் பின்பற்றப்படுகிறது. சிவன் கோவிலுக்குள் இப்படித்தன வணங்க வேண்டும் என்று விதிமுறை உள்ளது. சிவன் கோவிலில் பின்பற்றப் படும் சில அம்சங்கள் நம்முடைய எண்ணங்களை நெறிப்படுத்துகின்றது. எப்படி சிவன் கோவிலில் வணங்க வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்.

முதலில் கோவிலில் சண்டைகள், பிரச்சனைகளை பேசுவதை தவிர்க்க வேண்டும்.அங்கு இறை சம்பந்தப்பட்ட விஷயங்களை தவிர வேறெதும் பேசுதீர்கள். சிவன் கோயிலில் நுழைந்தவுடன் காணப்படும் கோபுரம் ராஜகோபுரம் என்று சொல்லப்படுகிறது. எப்போதும் கோபுரத்தை தரிசனம் செய்துவிட்டுதான், கோவிலுக்குள் நுழைய வேண்டும். கோபுர தரிசம் கோடி புண்ணியம் என்பார்கள்.

கோயிலின் உள்ளே நுழைந்தவுடன் தெரிவது பலிபீடம். அதனருகில் சென்று கீழே விழுந்து நமஸ்கரித்துவிட்டு உள்ளே செல்ல வேண்டும். இதற்கு அர்த்தம் காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் ஆகியவற்றை அந்த இடத்தில் பலி கொடுத்து விட்டு செல்வது என்று பொருள். அடுத்து இருப்பது கொடிக்கம்பம்.

இந்த கொடிக்கம்பத்தை வணங்கிவிட்டு, நந்தியை வணங்கி, அதன் பின்தான் சிவனை வணங்க செல்ல வேண்டும்.

சன்னதியில் முதலில் அருள் தரும் விநாயகரை வணங்கிவிட்டு மூலவரை வணங்க உட்பிரகாத்திற்குள் செல்ல வேண்டும். சிவனிட்ம பிராத்தனை செய்த பின் பிரகாரத்தில் உள்ள சுப்ரமண்யர், அம்பிகை, துர்க்கை, தட்சிணாமூர்த்தி, பைரவர் ஆகியோரை ஒன்றன் பின் ஒன்றாக வழிபட வேண்டும்.

இறுதியாக சண்டிகேசுவரருக்கு முன் நின்று இன்று கோவிலுக்கு வந்தேன், தரிசனம் பெற்றேன் என்று மனதில் சொல்லிக் கோண்டு, இரு கைகளையும் மெதுவாக தட்டி விட்டு வெளியே வர வேண்டும்.

கோயிலை விட்டு வெளியே வரும் போது சிறிது நேரம் அமர்ந்து விட்டு வர வேண்டும். அமர்ந்து எழும்போது, பின்னாடி தட்டி விட்டு வர வேண்டும். அதாவது சிவன் சொத்து எதனையும் கொண்டு செல்லவில்லை என்பதே அர்த்தம்.

அதன் பின் மீண்டும் கொடிக்கம்பத்தில் வணங்கிவிட்டு வரவேண்டும். இப்படித்தன சிவன் கோவிலில் சென்று வணங்கும் முறை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here