பூசணிக்காய் எப்படி உடல் எடையை குறைக்கும்? இதப் படிங்க!!

0
870

சைவ உணவுகளில் வெண்டைக்காயும் பூசணிக்காயும் தவிர்க்க முடியாது. பூசணியில் செய்யும் மோர் குழம்பு, கூட்டு போன்ற்றவை சுவையில் அலாதியாக இருக்கும். சிலருக்கு பூசணி ஆகாது வாய்வு பிடிப்பு என்பார்கள். ஆனால் பெருங்காயம், செர்த்து சமைக்கும் போது வாயுத் தொல்லை உண்டாகாது.

பூசணிக்காயின் சதைப் பற்று, விதை, அதனுடைய எண்ணெய் போன்றவைகளும் உணவு சம்பந்த தயாரிப்புகளில் பயன்படுகின்றன. இவைகளைக் கொண்டு, கேக், டாப்பிங், பல உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.

பூசணிக்காய் உடல் நலத்திற்கு நன்மைகள் தருகின்றது . முக்கியமாக பூசணிக்காய் உடல் எடை குறைய உதவுகிறது என்ற விஷயமே நமது புருவத்தை உயர்த்தச் செய்கிறது.

உடல் எடை குறைப்பு என்பது நாம் செய்யும் பயிற்சி, உழைப்பு மற்றும் உண்ணும் உணவு பொறுத்தே அமைகிறது. டயட் என்று வந்தால் உடனே நாள் கணக்காய் பட்டினி கிடப்பது இல்லை. கொழுப்பை கரைக்கும் உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது முக்கியம். வ்வாறு ஏன் பூசணியை நாம் சாப்பிட வேண்டும் என்பதற்கான காரணங்கள் பார்க்கலாம்

கலோரி :

மிகக் குறைவான கலோரியை கொண்டிருப்பதால் உடலில் குளுகோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருக்கும். மேலும் பசி உணர்வை கட்டுப்படுத்துவதால் அதிகம் சாப்பிடுவதை தடுக்கும்.

நார்ச்சத்து :

அதிக நார்ச்சத்து கொண்டுள்ளது. இதிலுள்ள டயட்ரி நார்ச் சத்து பசி உணர்வை கட்டுப்படுத்துவதோடு, கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டது.

நோய் எதிர்ப்பு சக்தி :

பூசணிக் காயில் உள்ள பீட்டா கரோடின் மற்றும் விட்டமின் சி உங்கள் நோய் எதிர்ப்பு செல்களை அதிகப்படுத்டுவதால் உடல் வலுப் பெறும். நோய்கள் தாக்குவது குறையும்.

மன அழுத்தம் :

நல்ல மன நிலையை தரும் உணவாக பூசணியை சொல்கிறார்கள். மன அழுத்தத்திற்கு காரணமான ஹரமோனை கட்டுக்குள் வைக்கிறது. ஹேப்பி மூட் நிலையை உங்களுக்கு தரும்.

பூசணியை எவ்வாறு டயட்டில் சேர்ப்பது?

பூசணி சூப் :

பூசணியை பொடியாக நறுக்கி நீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிக்கட்டி அதனுடன் மிளகு, உப்பு கலந்து குடித்தல பூசணி சூப் ரெடி. பொசணியை அரைத்தும் சூப் செய்யலாம்.

பூசணி விதை :

அதோடு பூசணி விதையை வெயிலில் காய வைது பொடி செய்து கொள்ளுங்கள். இதனை மற்ற பொரியல், குழம்பு வகைகளில் ஒரு ஸ்பூன் அளவு சேர்த்து சமைத்து, சாப்பிடுவதாலும் உடல் எடை குறையும்.’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here