ஆரஞ்சுத் தோலை இப்படி செஞ்சு குடிச்சா உங்க எடையை குறைக்கலாம்1!

0
41

கொழுப்பை கரைக்க என்னன்னமோ செய்து பார்த்தாலும் உடல் எடை இம்மியும் நகர மாட்டேங்குது என்று கவலைப்படுபவர்கள் இங்கு இல்லாதவர்கள் குறைவு.

சிக்ஸ் பேக் எல்லாம் ஆசை இல்லைங்க. இந்த தொப்பை குறைஞ்சா போதும். சிம்ரன் ஸ்லிம்லாம் கூட வேண்டாம், இடுப்பு கொழுப்பு கரைஞ்சா போதும்னு புலம்பறவங்கள நிறைய பேர். அப்படி நீங்களும் நினைச்சுட்டு இருந்தா இப்போ கை கொடுத்துக்கோங்க. ஏன்னா உங்களுக்கு இந்த சிம்பிள் ரெசிபி உதவும்.

ஆரஞ்சு தோல் துவர்ப்பு சக்தி கொண்டது. துவர்ப்பு சக்தி இருக்கும் உணவுப் பொருட்கள் கொழுப்பை முழுவதும் கரைக்கும் ஆற்றல் படைத்தவை. அப்படி ஆரஞ்சுத் தோலை வைத்து எப்படி உங்கள் எடையை குறைக்கலாம் எனப் பார்க்கலாம். அதற்கு முன் அது எப்படி உடல் எடையை குறைக்க உதவுகிறது என பார்க்கலாம்.

 

ஆரஞ்சு தோல் எப்படி உடல் எடையை குறைக்கிறது?

அதிக நார்ச்சத்து கொண்டவை . உடல் எடையை குறைப்பதில் நார்ச்சத்து முக்கிய பங்கு கொண்டிருக்கிறது. அதிகம் சாப்பிடும் உணர்வை தடுப்பதால், அளவுக்கு அதிகமாக சாப்பிடும் எண்ணம் தோன்றாது.

கொழுப்பை எரிக்கும் :

ஆரஞ்சின் தோலில் அதிக விட்டமின் சி இருக்கின்றது. இவை கொழுப்பை எரிக்கிறது. இது வயிற்றுக் கொழுப்பை கரைக்கும் பண்புகளிய
கொண்டுள்ளது.

கலோரி குறைக்கிறது :

ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது இதனால் சர்க்கரை வியாதி தடுக்கப்படுகிறதோடு, கலோரியும் ஏறாமல் உடல் எடை கட்டுக்குள் கொண்டு வரமுடியும்.

ஆரஞ்சுத் தோலைக் கொண்டு எப்படி உடல் எடையை குறைப்பது என இந்த ரெசிபியை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

தேவையானவை :

ஆரஞ்சு தோல்- 2ஸ்பூன்

ஏலக்காய் – 1

நீர்- 11/2 கப்

செய்முறை :

ஆரஞ்சு தோலை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒன்றரை கப் அளவுள்ள நீர் எடுத்து அதில்
2 ஸ்பூன் ஆரஞ்சு தோல், ஏலக்காய் கலந்து கொதிக்க விடுங்கள். நீர் நல்ல கொதி வந்ததும் அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி
வைத்துவிடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து அந்த நீரை வடிக்கட்டி அதில் தேன் சேர்த்து குடிக்கவும்.

எப்போது குடிக்க வேண்டும்?

நேரமிருந்தால் காலை மாலை என இருவேளை குடிக்கலாம். அல்லது மாலை வேளை மட்டும் குடிக்கலாம். ஆரஞ்சுத் தோலை பொடி செய்து மில்க் ஷேக், சாலட்டுகளிலும் கலந்து சாப்பிடுங்கள்.

இப்படி தவறாமல் குடிக்கும்போது உடல் எடையில் நல்ல மாற்றம் காண்பீர்கள் முயற்சித்துப் பாருங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here