மலச்சிக்கலை குணப்படுத்த ஆலிவ் எண்ணெயை பயன்படுத்துவது எப்படி?

0
1301

நாட்டில் பலபேருடைய பிரச்சனை காலையில் காலைக் கடனை தொடங்குவதிலேயே ஆரம்பித்துவிடும். மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் இந்த நாட்டில் அதிகம்.
மலசிக்கலை சாதாரணமாக எண்ணிட முடியாது. இதுவே தலைவலியாக உங்களுக்கு அமைந்துவிடும். மூல நோய்கள், நச்சுக்கள் அதிகமாகை உடல் பருமன், வாய்வுத் தொல்லை, எரிச்சல், தலைவலி என பல பாதிப்புகளைத் தரும்.

மலச்சிக்கல் வருவதற்கு காரணம் என்ன? சரியான உடல் உழைப்புகள் இல்லாதவர்களுக்கு, எப்போதும் கொழுப்பு மற்றும் கார்போ உணவுகளையே சாப்பிடுவது, மேலும் புரதம் மற்றும் நார்ச்சத்து உணவுகள் பக்கமே போகாமல் இருப்பதெல்லாம் மலச்சிக்கல் வருவதற்கு காரணம்.

இன்னும் மிக முக்கிய காரணம் நீர் அதிகம் குடிக்காமல் இருப்பது. மலச்சிக்கல் போக்குவதற்கு அந்த காலத்தில் ஒவ்வொரு வார இறுதியில் குழந்தைகளுக்கு விளக்கெண்ணெய் ஒரு மூடி கொடுத்து விடுவார்கள். இதனால் வயிறு சுத்தமாகி நச்சுக்கள் வெளியேறி குடல் செயல்பாடுகள் துரிதமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். ஆனால் இந்த காலத்தில் சுத்தமான விளக்கெண்ணெய் வருவதில்லை. எல்லாம் கலப்படமாகத்தான் இருக்கிறது.

ஆலிவ் எண்ணெயால் உங்கள் மலச்சிக்கலை போக்கலாம். ஆலிவ் எண்ணெய் நிறைய விட்டமின் ஈ மற்றும் ஆன்டி ஆக்ஸீடென்டுகள் கொண்டுள்ளது. ஆலிவ் எண்ணெயிய எப்படி மலச்சிக்கலை குணப்படுத்தலாம் எனப் பார்க்கலாம்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு :

தேவையானவை :

எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய்- 3 ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

இந்த இரண்டையும் கலந்து குடிக்க வேண்டும். காலையில் குடிப்பது மிகவும் நல்லது. இதனை குடித்த பின் டீ, கபை போன்ற்றவற்றை குடிக்க கூடடஹு.

ஆலிவ் எண்ணெய் மற்றும் யோகர்ட் :

தேவையானவை :

யோகர்ட்- 1 கப்
ஆலிவ் எண்ணெய்- 1 டேபிள் ஸ்பூன்

தயாரிக்கும் முறை :

யோகார்டில் ஆலிவ் எண்ணையை கலந்து குடிக்க வேண்டும். வெறும் வயிற்றில் ஒரு நாளைக்கு 3 தடவை குடிக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here