ஜாதிக்காயை எப்படி உங்க அழகை மெருகேத்த பயன்படுத்தலாம் ?

0
7990

ஜாதிக்காய் நம்முடைய பழைய அழகுக் குறிப்புகளில் மறக்காம சொல்லப்படுற
ஒரு முக்கிய பொருள்.

கைக் குழந்தைகளை குளிப்பாட்டி விடும் போது, ஜாதிக்காய் இல்லாமல்
குளியல் பொடி செய்திருக்க மாட்டார்கள் நம்முடைய பாட்டிக்கள்.

குழந்தையாய் இருக்கும் போது ஜாதிக்காய் பொடியில் செய்யப்பட்ட குளியல்
பொடியை பயன்படுத்தினல பிற் காலத்தில் பெண்களுக்கு உடலில் தேவையற்ற
முடி வளர்ச்சி இருக்காது. சருமம் மிருதுவாக பட்டுப் போல் இருக்கும்.

ஜாதிக்காய் முகப்பரு, அதிக முடி வளர்ச்சி, கரும் புள்ளி போன்ற பல சருமப்
பிரச்சனைகளை நீக்கும். அதனை எப்படி சரும அழகிற்கு பயன்படுத்தலாம்
எனப் பார்க்கலாம்.

கருமை நிறம் மறைய :

தேவையானவை :

ஜாதிக்காய் பொடி
எலுமிச்சை சாறு
தயிர்

தயாரிக்கும் முறை :

ஜாதிக்காய் பொடி 1 ஸ்பூன், எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் மற்றும் 2 ஸ்பூன்
தயிர் ஆகிய அளவில் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள்.
இந்த கலவையை முகம், கழுத்து போன்ற கருமை அதிகம் இருக்கும்
பகுதிகளில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். முகத்தின் கருமை நிறம்
மாறி பிரகாசமாக இருக்கும்.

எண்ணெய் சருமத்திற்கு :

உங்களுக்கு எப்பவும் எண்ணெய் வடியற முகமா? ஜாதிக்காய் உங்களுக்கு
அற்புத தீர்வு தருகின்றது.

தேவையானவை:

தேன்
சமையல் சோடா
ஜாதிக்காய்
எலுமிச்சை சாறு

செய் முறை :

மேலே சொன்னவற்றை எல்லாம் சேர்த்து கலந்து முகத்தில் தடவுங்கள். 10
நிமிடத்தில் முகத்தை கழுவ வேண்டும்.

சுருக்கங்கள் போக்க :

தேவையானவை :

ஜாதிக்காய்
தயிர்
தேன்.

தயாரிக்கும் முறை :

இந்த மூன்றையும் தேவையான அளவு எடுத்துக் கொண்டு, கலந்து
கொள்ளுங்கள். இந்த கலவையை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் மாஸ்க்
போல் போட்டு 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால்
சுருக்கங்கள் மறைந்து இளமையான முகம் கிடைக்கும்.

முகப்பருக்கள் நீங்க :

தேவையானவை :
ஜாதிக்காய் பொடி
சந்தனம்
பால்

செய்முறை :

ஜாதிக்காய் பொடி, சந்தனம் மற்றும் பால் ஆகிய மூன்றும் சம அளவில்
எடுத்து கலந்து, முகப்பருக்கள் உள்ள இடத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள்.
முகப்பருக்கள் வராமலும் இந்த குறிப்பு பயன் தரும்.

சரும டோனர் :

தேவையானவை :

ஜாதிக்காய் பொடி
தேங்காய் பால்

தயாரிக்கும் முறை :

தேங்காய் பால் கால் கப் எடுத்து, அதில் 1 ஸ்பூம் ஜாதிக்காய் பொடியை
கலந்து, முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும். இது சருமத்தை
மேலும் மெருகூட்ட உதவுகிறது. குளிர் காலத்தில் சரும வறட்சியை தடுத்து
சருமத்தை பொலிவாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here