உங்களை அழகியாக ஜொலிக்க வைக்கும் வெள்ளரிக்காய் நீர்!!

0
63

வெள்ளரிக்காய் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல, அழகிற்கும் சிறந்த பொருளாக விளங்குகிறது. இது விட்டமின் சி அதிகம் நிறைந்தது.
நீர்ச்சத்து கொண்டது.

இத்தகைய வெள்ளரிக்காய் தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் நீங்க இளமையுடன் வாழலாம். அதுபோலவே, வெள்ளரிக்காயை அழகிற்கு பயன்படுத்தும் போது மிளிரும் சருமங்களை பெற்று இளமையோடு இருப்பது உறுதி.

வெள்ளரிக்காய் கருவளையம், சுருக்கம், நிறம் கூட என பல்வேறு பிரச்ச்சனைகளுக்கு பயன்படுத்தலம. வெள்ளரிக்காய் நீர் என்பது வெள்ளரிக்காயிலிருந்து பெறப்படும் நீரே. அது மிக அதிக சத்துக்களைக் கொண்டது. அதனை எப்படி தயாரிப்பது, எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என இந்த கட்டுரையில் காணலாம்.

வெள்ளரிக்காய் நீர் :

மிக எளிதான முறைதான். வெள்ளரிக்காயை அரைத்து அதிலிருந்து வடிகட்டிக் கொள்ளும் நீரைத்தான் நாம் இங்கு அழகிற்காய்
பயன்படுத்தப் போகிறோம்.இதில் தண்ணீர் கலக்கக் கூடாது. வெறும் வெள்ளரிக்கயைலிருந்து போறப்படும் சாறுதான் அதிக அடர்த்தியுடன்
விட்டமின் சி, ஈ, கொலாஜன் போன்ற சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

சுருக்கங்களுக்கு :

1 ஸ்பூன் வெள்ளரிக்காய் நீரில் சில துளி தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் முகத்தை கழுவவும். தினமும் செய்து வந்தால் 10 வருடம் குறைந்தது போலிருப்பீர்கள். சுருக்கமா? எங்கே போச்சு?

குளிக்கும்போது :

நீங்கள் குளிக்கும் ஒரு பக்கெட் நீரில் ஒரு கப் வெள்ளரி நீர் கலந்து குளியுங்கள். நிறம் கூடுவதை காண்பீர்கள். தேகம் பொன் போல் ஆகும்.

சருமம் மிளிர :

வேறெதுவும் சேர்க்க வேண்டாம். வெறும் வெள்ளரிக்காய் நீரை தினமும் முகத்தில் தடவி வந்தால், உங்கள் முகம் டாலடிக்கும். பரிசுத்தமான மிருதுவான சருமத்தை உணர்வீர்கள்.

கருவளையம் :

கருவளையத்தில் இந்த வெள்ளரிக்காய் நீரை தினமும் தடவி காய்ந்ததும் கழுவி வந்தால், கருவளையம் காணாமல் ஆச்சரியப்படுவீர்கள்.

நிறம் அதிகரிக்க :

வெள்ளரிச் சாறு, தர்பூசணிச் சாறு இரண்டையும் சம அளவு எடுத்து காய்ச்சாத பாலுடன் கலந்து முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவ வேண்டும். 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை செய்தால் சரும நிறம் கூடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here