முடி சரியாவே வளர மாட்டேங்குதா? இந்த பாட்டி வைத்தியமான கற்றாழை மருந்து ட்ரை பண்ணுங்க!

0
1440

முடி அடர்த்தியில்லை. போதிய நீளமில்லை என்பது பலபேருடைய இருக்கும் கவலைகளில் இதுவும் ஒன்றாகிப் போனது. ஏதாவது ஃபக்ஷன் அல்லது கல்யாணத்திற்கு போகும்போது தான் நம் அடர்த்தி அல்லது நீளமில்லாத முடி கண்களை உறுத்தும். அதுவரை கண்டு கொள்ள மாட்டோம்.

யாராவது முடி நீளமா, அலை மாதிரி வச்சிருந்தா கண்ல ஏக்கம் தெரியும். அப்படி முடி வளர்ச்சியை அதிகப்படுத்த என்னவெல்லாம் செய்யலாம் என எல்லாவற்றையும் ஒரு கைப் பார்க்கலாம் என நினைபவரகளுக்கு கற்றாழை ஒரு பிரசாதம்.

கற்றாழை முடி வளர்ச்சியை மிகச் சிறப்பாக ஊக்குவிக்கும் தன்மை கொண்டது. ஆன்டி செப்டிக் பண்புகள் கொண்டது. பொடுகு, தொற்று போன்றவற்றை களைந்து விடும். கற்றாழையை பயன்படுத்தும் முறை முக்கியம். கற்றாழை முடியின் தன்மையை மிருதுவாக்கும். கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்தும். அதனைப் பயன்படுத்தும் முறையை எப்படி எனப் பார்க்கலாம்.

கற்றாழை மருந்து :

தேவையானவை :

ஆமணக்கு கொட்டை

கற்றாழை ஜெல்
தேங்காய் எண்ணெய்

ஆமணக்கு கொட்டைகளை ஓட்டை உடைத்து எடுத்துக் கொள்ளுங்கள். அந்த விதைகளிய இடித்து மசித்துக் கொள்ள வேண்டும். அதில் லேசாக சூடு படுத்திய தேங்கய எண்ணெயில் கலந்து கொள்ளுங்கள்.

பின்னர் கற்றாழையின் கொழ கொழவென இருக்கும் சதைப்பகுதியை பிரித்து எடுத்து, அதனை நன்றாக கழுவி, எண்ணெயுடன் கலந்து கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் ஒன்று போல் கலந்து அந்த எண்ணெயை ஒரு வித வெண்மையாக இருக்கும்.

இதனை தலைப் பகுதியில் ஸ்கால்ப்பில் தடவுங்கள். லேசாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள்.

இப்படி வாரம் மூன்று நாட்கள் செய்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளரும். இவற்றுடன் முட்டையை சேர்த்துக் கொள்வதும் நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here