தலை முடி நீளமாகவே வளர மாட்டேங்குதா? பிரவுன் சர்க்கரையை இப்படி பயன்படுத்துங்க!!

0
345

இன்றைய மிக பரபரப்பான நாட்களில், தலை முடி பராமரிப்பது கஷ்டம்தான். ஏறக்குறைய எல்லாருமே வெளியே வேலைக்காக செல்பவர்கள். வெளியில் இருக்கும் மாசு மற்றும் வேறு பிரச்சனைகளால் தலை முடி பாதிக்கப்பட்டு பிரச்சனைகள் உண்டாகிறது.

வாரத்தில் ஒரு நாள் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதே நாம் கஷ்டமாக நினைக்கிறோம். ஷாம்புவோடு சிம்பிளாக வேலையை முடிக்க வேண்டுமென நினைக்கிறோம். ஆனால் அதனால் முடிகளுக்கு உண்டான பாதிப்புகளை முடி வளராமல் எலிவால் போலிருக்கும்போதுதான் உணர்கிறோம்.

இந்த கட்டுரையில் பழுப்பு சர்க்கரை மற்றும் எளிதில் கிடைக்கக் கூடிய பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த ரெசிப்பிகள் எப்படிமுடியை நீளமக வளரச் செய்கிறது என பார்க்கலாம். கொண்டு ஸ்க்ரப் தயார் செய்வதை பற்றி பார்க்கலாம்.

பிரவுன் சர்க்கரையால் கிடைக்கும் நன்மைகள் :

தலையில் கிருமித் தொற்றை தடுக்கிறது. அழுக்கு, பிசுபிசுப்பு, அதிக எண்ணெய் இறந்த செல்கள் போன்றவற்றை நீக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது, உச்சந்தலையை ஈரப்பதத்துடன் வைக்கிறது. வறட்சி, அரிப்பு, பொடுகு, முடி சுருள்வது போன்றவை தடுக்கப்படுகிறது.முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.

நீளமாக முடி கிடைக்க

தேவையான பொருட்கள்:

பழுப்பு சர்க்கரை- 2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் -3 டேபிள் ஸ்பூன்

காய்ச்சாத பால் – 5-8 டேபிள் ஸ்பூன்

பயன்படுத்தும் முறை

முதலில் ஆலிவ் எண்ணெயில் பாலை சேர்த்து நன்றாக கலக்கவும். பின்னர் அதில் பிரவுன் சர்க்கரையை போட்டு நன்றாக கலக்குங்கள். அதனை ஸ்கால்ப்பில் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். பின்னர் 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் தலையை அலசுங்கள். பிறகு எப்போதும் போல் ஷாம்பு கொண்டு தலையை அலசவும். 2 வாரங்களுக்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

முடி வளர்ச்சி தூண்ட :

தேவையான பொருட்கள்:

பழுப்பு சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்

ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்

ஆலிவ் எண்ணெய் – அரை கப்

பயன்படுத்தும் முறை

பழுப்பு சர்க்கரை மற்றும் ஓட்ஸ் ஆகிய இரண்டிற்கும், ஸ்க்ரப்பிங் தன்மை உண்டு. இதனை பயன்படுத்துவதால் தலையில் அடைந்திருக்கும் அழுக்குகள் வெளியேறுகிறது. இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. ஓட்ஸ் மற்றும் பழுப்பு சர்க்கரையை நன்றாக கலக்குங்கள்.

இதில் ஆலிவ் எண்ணெய்யை சேர்த்து கலக்கவும். இந்த கலவையை உங்கள் தலையில் தடவவும். 15 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். பிறகு தலையை குளிர்ந்த நீரால் அலசுங்கள். வாரத்திற்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

பொடுகை தடுக்க :

தேவையான பொருட்கள் :

பழுப்பு சர்க்கரை -2 ஸ்பூன்

எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்

ஜோஜோபா எண்ணெய் – 2 ஸ்பூன்

பயன்படுத்தும் முறை ;

மேலே கூறியவற்றை ஒன்றாக கலந்து தலையின் வேர்ப்பகுதியில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை செய்தாலே போதும். பொடுகுத் தொல்லை இனி இருக்காது. முடி ஆரோக்கியமாக
வளரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here