கால் நகத்தின் ஓரம் உடைந்து வலியை உண்டாக்குகிறதா? இத ட்ரை பண்ணுங்க!!

0
1843

கைவிரல் நகங்களை விட , கால் நகங்கள் சரிவர பெரும்பாலோனோர் பராமரிக்க மாட்டார்கள். அதிக அழுக்குகள் கால் நகங்களின் விரல்களில் படிந்திருக்கும். சிலருக்கு நகங்கள் சொத்தையாக காணப்படும்.

ஒரு சிலருக்கு கால் நகங்களின் ஓரத்தில் நகம் துண்டாகி பயங்கர வலியை தரும். போதிய இடமின்றி சரியாக வளராத நகங்கள், சதைக்கு நெருக்கடியை தருவதால் வீக்கம் மற்றும் வலி உண்டாகும்.நகங்களில் ஏற்படும் வலியை வீட்டிலேயே எப்படி போக்குவது எனப் பார்க்கலாம்.

பூண்டு :

பூண்டு-1 பல்
கற்றாழை ஜெல்- 1 ஸ்பூன்

பூண்டை நன்றாக தட்டி அதனுடன் கற்றாழை ஜெல்லை கலந்து பாத விரல்களில் தடவுங்கள். ஓரிரு நாட்களில் சரியகைவிடும். நகங்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

சமையல் சோடா :

சமையல் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை தூங்குவதற்கு முன் வலியுள்ள பாத நகத்தில் பூசுங்கள். நல்ல பலன் கிடைக்கும். நகத்தில் சொத்தை இருந்தல கூட குணமாகிவிடும்.

தேயிலை மர எண்ணெய் :

தேயிலை மர எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஆலிவ் எண்ணெய் கலந்து நகத்தில் நேரடியாக தடவுங்கள். இது வீக்கத்தைப் போக்குவதுடன், நகத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.

 

எலுமிச்சை சாறு :

எலுமிச்சை சாறு – 1 ஸ்பூன்
தேன்- கால் ஸ்பூன்

எலுமிச்சை சாற்றில் இருக்கும் ஆன்டிபயாடிக் பண்புகள் இந்த பாதி வளர்ந்த நகங்களுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. எலுமிச்சை சாறு பிழிந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து நகங்களில் தடவினால் விரைவிலேயே பலனைத் தரும்.

ஆப்பிள் சைடர் வினிகர் :

ஆப்பிள் சைடர் வினிகர் வீக்கத்தைக் கட்டுப்ப்படுத்தும். கிருமிகளை அழிக்கும். வலியை குறைக்கும்.

நீரை சுட வைத்து அதில் 1 ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரை ஊற்றி உங்கள் பாதங்களை முக்குங்கள். 20 நிமிடம் கழித்து கால்களை எடுக்கவும். ஓரிரு நாட்களில் குணமாகிவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here