பொடுகுத் தொல்லை ரொம்ப அதிகம் இருக்கா? இதோ அதனை போக்கும் எளிய வழிகள்!!

0
1165

பொடுகு வராமால் யாருக்கும் இருக்காதும். நாம் எல்லாருமே அடிக்கடி பொடுகினல பாதிக்கப்பட்டிருக்கும் குறிப்பாக சிறு வயது குழந்தைகளுக்கு அதிக வறட்சியால் ஏற்படுவதுண்டு. குறிப்பாக குளிர்காலத்தில் அதிக வறட்சியினால் பூஞ்சை நமது தலையில் தாக்கும்போது வெள்ளையாக செதில் செதிலாக உதிரும்.இவை முடியின் வேர்க்கால்களிய பலவீனப்படுத்தும். இதனால் முடி உதிர்தல் அரிப்பு உண்டாகும்.

பூஞ்சை தாக்குதலினால் மேலும் கூந்தல் வறட்சியாகும். சிலர் பொடுகு இர்ந்தல கூந்தலுக்கு எண்ணெய் வைக்கக் கூடாது இதனால் இன்னும் பொடுகு அதிகமாகும் என்பார்கள். ஆனால் அது தவறு. எண்ணெய் வைக்காமல் போனால் கூடுதலாக முடி வறட்சி அதிகமாகி இன்னும் முடி உதிர்தல் அதிகமாகி மோசமாகும்.

எண்ணெய் ஸ்கால்ப்பில் மட்டுமாவது இருக்கும்படி தலையில் தேய்த்துக் கொள்வது நல்லது. பொடுகிறெகன் ஷாம்பு மார்க்கெட்டில் விற்றாலும், அவை தற்காலிகமாகத்தான்நிவாரணம் தரும். ஆனால் அதிலுள்ள ரசாயனங்கள் தலைக்கு கெடுதல் தருபவை. ஆகவே முடிந்த வரை இயற்கையான மருத்துவப் பொருட்களையே பயன்படுத்துங்கள். பொடுகிறாக தீர்வு உங்கள் பராமரிப்பில்தான் இருக்கிறது. எந்த மாதிரியான பொருட்கள் பொடுகைப் போக்க உதவும் என பாக்கலாம்.

தேங்காய் பால் :

கெட்டியான தேங்காய் பால் எடுக்க வேண்டும். நீர் கலக்காத முதல் முறை வரும் தேங்காய்ப் பாலை எடுத்து தலையில் தேய்த்து 20 நிமிடம் வரை ஊற வைத்து அதன் பின் தலை முடியை அலச வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் பொடுகு மறைந்து விடும். முடியும் ஆரோக்கியமாக வளரும். தேங்காப் பாலில் உள்ள புரதம் முடி வளர்ச்சியை தூண்டுவதுடன், நல்ல கண்டிஷனராகவும் இருக்கிறது.

பூண்டு எண்ணெய் :

பூண்டு பொடுகிற்கு எதிரி. பூண்டு எண்ணெயிலுள்ள சல்ஃபர் முடி வளர்ச்சியை வேகமாக தூண்டும். அதனை எப்படி தயாரிப்பது எனப் பார்க்கலாம். பூண்டை பொடிப் பொடியாக நறுக்கி ஆலிவ் எண்ணெயில் போட்டு காற்று பூகாதவாறு இறுக்கமாக மூடி வையுங்கள்.

2 வாரங்கள் கழித்து அந்த எண்ணெயைக் கொண்டு தலைக்கு மசாஜ் செய்து வந்தல ஓரிரு நாட்களிலேயே பொடுகு மறைந்து விடும். தொடர்ந்து இந்த எண்ணெயை பயன்படுத்தி வந்தல முடியும் அடர்த்தியாக வளர்வது உறுதி.

பூண்டு மாஸ்க் :

பூண்டு 4 பல் எடுத்து அரைத்து அதில் சம அளவு நீர் கலந்து தலை முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி செய்தால் விரைவில் பொடுகு மறையும். பூண்டிற்கு பதிலாக வெங்காயமும் சேர்த்தால் நல்ல பலன் முடி வளர்ச்சியும் அதிகரிக்கும்.

கற்பூரம் :

கற்பூரத்தை பொடித்து இளஞ் சூடான ஏதாவது ஒரு எண்ணெயில் கலந்து அதனை தலை முடியில் தேய்த்து குறிப்பாக ஸ்கால்ப்பில் படும்படி தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் மூன்று நடகள் செய்தால் ஒரே வாரத்தில் பொடுகு மறைந்துவிடும். பொடுகு மேற்கொண்டு வருவதும் தடுக்கப்படும்.

வேப்பிலை :

வேப்பிலையைக் கண்டால் வைரஸே பயந்து போகும் போது இந்த பூஞ்சை போகாதா? எந்த வித கிருமித் தொற்று உங்கள் முடியில் அல்லது சருமத்தில் இருந்தாலும் வேப்பிலை மாயமாக்கி விடும். வேப்பிலையை அரைத்து பால் கலந்து தலை முடியில் தேய்த்து அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். வாரம் ஒரு முறை செய்யுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here