சென்னையில் 24 மணி நேரத்தில் இதையெல்லாம் செய்யலாம்! ட்ரை பண்ணுங்க…

0
12214

சென்னை… தென்னிந்தியாவின் நுழைவுவாயில். சோழமண்டல கடற்கரையில் ஆங்கிலேயன் கட்டியமைத்த செயின்ட் ஜார்ஜ் கோட்டையை சுற்றி உருவான எழில்மிகு நகரம் இது. சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமம் இன்று மிகப்பெரிய மெட்ரோ சிட்டியாக மாறியுள்ளது. சிங்காரச் சென்னை என செல்லாமாக அழைக்கப்படும் இந்நகரில் 24 மணி நேரத்தை எப்படியெல்லாம் பயனுள்ள வகையில் செலவிடலாம்? வாருங்கள் இங்கே பார்ப்போம்.

பீச் பம்ஸ்க்கு:
நீங்கள் கடற்கரை விரும்பிகளா இருந்தா நிச்சயமாக ஒரு நாள் முழுவதையும் மெரினாவிலும், சாந்தோம் மற்றும் எலியட்ஸ் பீச்சுலயும் ஸ்பென்ட் பண்ண முடியும். மெரினாவில் காலை 6 மணிக்கு ஒரு வாக் கொடுத்துட்டு, அப்படியே அங்க யோகா, ஜிம்னாஸ்டிக்ஸ், மெடிடேஷன்னு ஒரு ரவுண்ட் வர்லாம். ப்ரேக் ஃபாஸ்ட்க்கு நல்ல கார்பஸ் ஐட்டம்லாம் அங்கேயே கூட தருவாங்க. நேரா விவேகானந்தர் மடத்துக்கிட்ட வந்தா நம்ம பசங்க ஹிப் ஹாப்ல பட்டைய கிளப்பிக்கிட்டு இருப்பாங்க. 11 மணி வரைக்கும் அங்கேயே டைம் பாஸ் பண்ணலாம். அடுத்து நேரா ஸ்விம்மிங் பூல்க்கு போங்க. 2 மணி வரைக்கும் தண்ணில இருக்கலாம். அப்டியே பீச் கடைங்கல்லயே லன்ச் முடிக்கலாம். வறுத்த மீனும், கொத்து கத்தரிக்கா கொழம்பும் ருசில பிச்சிக்கிட்டு அடிக்கும். அடுத்து நேரா வண்டிய கொவலாங் பாய்ண்ட்க்கு விடுங்க. ஃபிஷ்ஷிங், பீச் ஸ்விம்மிங், சர்ஃபிங்ன்னு வாட்டர் ஸ்போர்ட்ஸ் எல்லாம் அங்க இருக்கு. அதையெல்லாம் முடிக்க மணி சாயுங்காலம் ஆறு ஏழுன்னு ஆகிடும். வரும்போது அங்கனயே டின்னரையும் முடிச்சிக்கிட்டு வர்லாம்.

கலா ரசிகர்களுக்கு:
பழைய பில்டிங்க பார்த்தா கண் அசந்து நிற்பவரா நீங்க? உங்களுக்குனே சென்னைல பல பில்டிங்க கட்டிவிட்டிருக்காங்க. அங்க எல்லாம் நீங்க போய் நிக்க வேண்டியதுதான். அண்ணாந்து பாத்துக்கிட்டே இருக்க வேண்டியதுதான். எல்லாம் பெரிய பெரிய பில்டிங்கு ப்பே. செயின்ட் ஜார்ஜ் கொட்டை, செயின்ட் மேரீஸ் சர்ச், சாந்தோம் சர்ச், கவர்மென்ட் மியூசியம், விக்டோரியா பப்ளிக் ஹால்ன்னு சுத்துனா ஒரு நாளே போயிடும். குறிப்பா கன்னிமாரா லைப்ரரிய மிஸ் பண்ணிடாதீங்க.

பக்தி மான்களுக்கு:
சாமி டாலரை பார்த்தாலும் கூட அந்த இடத்திலேயே விழுந்து கும்பிடும் பக்தி மான்களாக இருந்தால் சென்னை எங்கும் நீங்கள் துள்ளி ஓடலாம். மருவத்தூர் ஓம் சக்தி, மாங்காடு காமாட்சி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடு கருமாரி அம்மன்னு ஏகப்பட்ட கோயில்கள் கொட்டிக் கிடக்கு. சம்மர் சீசன் வேற. சித்திரை மாசம்னு நிறையா கோயில்கள்ல திருவிழா போடுவாங்க. இந்த நேரத்துல நீங்க வண்டிய எடுத்தாலும் மூணு வேளைக்கும் சோறு கிடைக்கும். ஒரு தெய்வீக ட்ரிப் போனா மாதிரியும் இருக்கும். தமிழ்நாட்டு அரசியல்வாதிங்க உருப்படனும்னு வேண்டிக்கிட்டு வாங்க.

தீனி பண்டாரங்களுக்கு:
சோறே கண்கண்ட கடவுள்னு ஒரு மகத்தான கொள்கையோட வாழ்ந்துக்கிட்டு இருக்குறவங்ககிட்ட வழவழன்னு கொளகொளன்னு பேசக் கூடாது என்பதால் இங்கே ஒரு லின்க்கை தருகிறோம். இதை க்ளிக் செய்து பார்த்து படித்து பயன் அடையவும் டாட்.

பார்ட்டி அனிமல்ஸ்க்கு:
ஐடி பொன்னோ, ஐயர் ஆத்து பொன்னோ என வித்தியாசம் பாக்காம பிக்கப் செய்துக்கிட்டு அலையும் ப்ளேபாய்களே.. தண்ணின்னா நீந்திக்கிட்டே வரும் குடிமகன்/மகள்களே… சாவு மோளத்துக்கு குத்தாட்டம் போடுபவர்களே… உங்களுக்கு என்ட்டர்டெயின்மென்ட் வழங்குவதற்காகவே இல்யூஷன்ஸ், ரேடியோ ரூம், ப்ளேன் பி, க்யூ பார், எஃப் பார், சாராஸ் பார், பே 146-ன்னு பல பார்ட்டி பசாரோட கதவுகள் உங்களுக்காகவே திறந்திருக்கின்றன. வீக் எண்டா ப்ளான் பண்ணி போயி, குடிச்சி கும்மாளம் போட்டுட்டு வர்லாம்.

எந்த இடத்தில் இருந்து பார்த்தால் சேலத்தை இப்படி பார்க்கலாம்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here