சுவையான, தரமான மாதுளம் பழத்தை தேர்வு செய்வது எப்படி?

0
1294

உலகின் தலைசிறந்த பழம் என்றால் அது மாதுளம் பழம்தான். முழுக்க முழுக்க மருத்துவ குணங்களால் நிரம்பிய பொக்கிஷம். ஒவ்வொரு முத்துக்களும் மனிதனுக்கு இரத்தத்தை உற்பத்தி செய்து கொடுக்க வல்லவை. ஆப்பிளை விட மிகுந்த சக்தி உடையது என பாகுபலி கட்டப்பாவை போல வீரவசனம் பேச முடியும். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த மாதுளையை தேர்வு செய்வதில்தான் இங்கே பலருக்கும் பிரச்சினை. வெளித்தோற்றத்தில் அழகாக இருக்கும் பழங்கள், உள்ளே அழுகி போயிருக்கும். அல்லது உள்ளே முத்துக்கள் போதிய வளர்ச்சி அடையாமல் இருக்கும். சொத்துப் பழமாகவும் விழுந்துவிடும்.

இனி கவலையே வேண்டாம். எப்படி சுவையான, தரமான மாதுளம் பழத்தை தேர்வு செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.

வெயிட்டா இருக்கணும்:
மாதுளம் பழத்தின் அளவு பருத்தும், நல்ல கனமாகவும் இருக்க வேண்டும். இப்படிப்பட்ட பழம்தான் உங்களுக்கு அதீத சுவையை விருந்தளிக்கும். விதையை சுற்றியுள்ள சதைப்பகுதிகள் உள்ளே நன்கு வளர்ந்திருக்கும் என்பதால் சாறும் அதிகமாக கிடைக்கும். பழம் ருசியானதாகவும் இருக்கும்.

சிவப்பா இருக்கணும்:
பழத் தோலின் நிறத்திற்கும் உள்ளே இருக்கும் பழத்திற்கும் சம்மந்தமே இல்லை. ஆனாலும் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும் பழம் சுவையுடைய பழமாக இருக்கும். தோலின் மீது மஞ்சள், இளஞ்சிவப்பு மற்றும் பிரவுன் நிறங்கள் காணப்பட்டால் அந்த பழத்தில் சுவை சற்று குறைவாகவே இருக்கும். மேலும் தோல் வளவளப்பானதாகவும் இருக்கும் பழம் நல்ல பழம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here