2018 முதல் உங்கள் சம்பளத்தை வாங்குனதும் இந்த 8 விஷயங்களை செய்யுங்க!

0
767

ணத்தை கையாளுவதும் கூட ஒரு கலைதான். ஆனால் கடினமான காரியம். ஏன் கடினம் என்றால், பண மதிப்பு, பொருளாதார மாற்றங்கள், தேவை, சந்தை காரணிகள் என பல காரணங்களை சொல்லலாம். இன்று ஒரு உறுதியற்ற பொருளாதார மண்டலத்தில் வாழும் நாம் திட்டமிட்டு மட்டுமே பணத்தை செலவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

இந்த பணத்தை, உங்களது வருமானத்தின் மூலம் கிடைக்கும் பணத்தை சரியான திட்டமிடல் மூலமாக மட்டுமே சேமிப்பில் கிடைத்த முடியும். இந்த சேமிப்பால் மட்டுமேதான் உங்களுடைய எதிர்கால இலக்குகளை தொட முடியும். நினைத்த நேரத்தில் பணம் கூட கிடைத்துவிடுகிறது. ஆனால் பலருக்கும் எட்டாக்கனியாக இருப்பது என்னவோ இந்த சேமிப்புதான். கிடைக்கும் பணத்தை சேமிக்க என்னதான் வழி? எப்படித்தான் ஓடும் பணத்தை பிடித்து வைப்பது? என்ற கேள்விகளுக்கெல்லாம் பதில் தருகிறார் கட்டுரையாளர்.

1. பட்ஜெட்:
பணத்தை சேமிப்பது என்று வந்தாலே நீங்கள் ஒரு கஞ்சனாக மாரிவிடதான் வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் நீங்கள் பட்ஜெட் தாக்கல் செய்து கொள்ளுங்கள். காலை உணவு முதல் இரவு நேர ஆம்லெட் வரை ஒரு தொகை அழுத்தத்திற்குள் கொண்டுவர வேண்டும். ஒவ்வொரு நாளில் இருந்து வார அளவிற்கு பட்ஜெட் நடத்துங்கள். எந்த இடத்திலும் உங்களை நீங்களே விட்டுக்கொடுத்துக் கொள்ளாதீர்கள்.

2. முதலீடுகள்:
உங்களது சேமிப்பு வெறும் பணக் குவியலாக மட்டும் இருந்தால் போதும் என நினைக்கிறீர்களா? அப்படி நினைத்தீர்கள் என்றால் உங்களது எண்ணங்களை தயவு செய்து மாற்றிக்கொள்ளுங்கள். உங்களது சேமிப்பை முதலீடுகளாக மாற்ற முயற்சியுங்கள். பங்குச்சந்தையில் முதலீடு செய்ய வேண்டாம். வீட்டிற்கு அசையும் சொத்துக்களோ, அசையா சொத்துக்களோ வாங்கிடுங்கள். உயர்ந்த நோக்கங்களை குறி வைத்துக் கொண்டே இருங்கள். சரியான முறையில் முதலீடு செய்தால் உங்கள் பெயரை உங்களது கொள்ளுப் பேரப்பிள்ளைகள் வரை சொல்லும்.

3. செலவு செய்யுங்கள்:
உங்களது சம்பளத்தில் இருந்து நீங்கள் செய்யும் முதல் செலவே சேமிப்பாக இருக்க வேண்டும் என்பதை நிர்ணயித்துக் கொள்ளுங்கள். மியூச்சுவல் ஃபண்ட், இன்சூரன்ஸ், குழந்தைகளுக்கான கல்வி சேமிப்பு என அனைத்து சேமிப்பிற்காகவும் முதலில் பணத்தை செலவிடுங்கள். கடன் செலவுகளை இறுதியாக பிரித்து செலுத்திடுங்கள். உங்களது தன்னம்பிக்கை உயரும். சேமிப்பாளன் என நெஞ்சம் நிமிர்த்திடுவீர்கள்.

4. கார்டுகள்:
எவ்வளவு பெரிய நீண்ட வரிசை என்றாலும் அந்த வரிசையில் நின்று ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்திடுங்கள். உங்கள் தேவைக்கு ஏற்ப மட்டும் பணம் எடுக்க வேண்டும். அந்த பணத்தைக் கொண்டே நீங்கள் செலவு செய்ய வேண்டும். டெபிட்/க்ரெடிட் கார்ட்கள் உங்களது செலவுகளுக்கு தாராளமான பாதையை உருவாக்கிவிடும். மொபைல் ஆப்ஸ்கள் பயன்படுத்தினால் உங்களது பணம் விரயமாவது உங்களுக்கு தெரியவே தெரியாது. அந்த பணத்தின் எடை, அதன் சக்தியை உணர வழியே கிடையாது.

5. சின்ன சின்னதாய்:
அவசிய அத்தியாவசிய தேவைகளுக்கான பணத்தை ஒதுக்கீடு செய்த பின்னர், கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பதை பாருங்கள். மீதமுள்ள பணத்தில் என்னென்ன செலவுகள் செய்யலாம்? என்னென்ன செலவுகள் செய்யக்கூடாது என திட்டமிட்டுக்கொள்ளுங்கள். சின்ன சின்ன செலவுகள்தான் உங்களை நிராயுதபாணியாக மாற்றும் என்பதால் அவற்றை எப்படி தடுக்கலாம் என யோசியுங்கள்.

6. தினச்செலவு:
தினச்செலவுகள் சிறுவகை செலவுதான் என்றாலும் உங்கள் பர்ஸை கரைத்துவிடும் ஆற்றல் இதற்கு உண்டு. அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான பாலை மட்டும்தான் நாம் தினம் வாங்கப் போகிறோம். காய்கறிகள், பழங்கள், பண்டங்களை எல்லாம் வாரத்திற்கு ஒரு முறை என வகுத்துக்கொண்டு வாங்கி பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

7. அவசர சேமிப்பு:
உங்களது சம்பளத்தில் இருந்து குறிப்பிட்ட அளவு பணத்தை எடுத்து, ஆட்டத்தின் மேலே இருக்கும் பெட்டியிலோ அல்லது ஸ்டோர் ரூமில் உள்ள ஒரு பிளாஸ்டிக் டப்பாவிலோ சேமித்து வைக்க தொடங்குங்கள். இந்த பணம் அவசரத்திற்கு மட்டுமே ஒதுக்கிய பணம். இதை நீங்கள் எக்காரணத்தை கொண்டும் வேறு எந்த காரணங்களுக்காகவும் தொடவே கூடாது. அவசரம் என்றால் மட்டுமே அதில் நீங்கள் கை வைக்க வேண்டும்.

8. அனாவசிய செலவுகள்:
முன்பே சொன்னது போல உங்களுக்கு எந்த பொருள் தேவையோ அதை மட்டுமே வாங்குங்கள். செல்ஃபோன், எலக்ட்ரிக் சாதனங்கள், இருசக்கர வாகனங்கள் என எதிலும் உங்களுக்கு தேவைப்படாததை வாங்கி இ.எம்.ஐ. கடிவாளத்தை பொருத்திக் கொள்ளாதீர்கள். உங்களது பணத்தை வங்கிகள் ஏப்பம் விடும் அளவிற்கு செய்து விடாதீர்கள்.

மேற்கூறிய 8 வழிமுறைகளை எல்லாம் இந்த 2018ம் ஆண்டில் இருந்து ‘நியூ இயர் ரிசொல்யூஷனாக’ எடுத்துக்கொண்டு ஒவ்வொன்றாக நிறைவேற்றுங்கள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் உங்களது கணக்கில் பல லட்சங்கள் குவிந்திருக்கும். மாத இறுதி நாட்களைக் கண்டு அஞ்சாமல் நிம்மதியாகவும், தைரியமாகவும் கடந்து செல்வீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here