ொளுத்தும் கோடை… சருமத்தை காக்க இதை டிரை பண்ணுங்க!

0
2029

 

கோடை காலத்துல அடிக்கிற உக்கிரமான வெயில் சருமத்தில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்பது அனைவரும் அறிந்ததே. காரணம் என்னவென்று கேட்டால் மற்ற காலத்தைக் காட்டிலும் கோடையில் வெயில் கொளுத்தி எடுக்கும் என்பதே. இயற்கையை கட்டுப்படுத்த நம்மால் முடியுமான்னு கேட்டா? கண்டிப்பா முடியாதுன்னு தான் சொல்ல முடியும். ஆனா, அடிக்கிற வெயிலில் இருந்து நம்மல காப்பாத்துறது நம்மால் முடியும் தானே.  நாம நம்ம கையில இருக்குற சாய்ஸ யூஸ் பண்ணிப்போம். சரி வாங்க எப்படி சருமத்தை காத்துக்கொள்ளலாம்னு பாக்கலாம்.

 

 

 

 

 

 

 

சன் ஸ்கிரீன் கண்டிப்பாய யூஸ் பண்ண வேண்டும். சிலர் சன் ஸ்கிரின் யூஸ் பண்றதா நெனஞ்சு போன வருஷத்துல இருக்குற மிச்ச மீதிய எடுத்து யூஸ் பண்ணுவாங்க. இப்படி பழைய சன் ஸ்கிரீன் இருந்துச்சுன்னா அத தயவு செஞ்சு குப்பைத்தொட்டியில் போட்டுருங்க. புதுசா சன் ஸ்கிரீன் வாங்கி பயன்படுத்துவது சிறந்ததாக இருக்கும்.

அதேபோல, மேக்-அப் பண்றத ரொம்பவே குறைச்சுக்கலாம். பொதுவாக உக்கிரமா இருக்கும் வெயில்ல போகும்போது நேச்சுரல் பியூட்டி தான் நமக்கு பெஸ்ட்டா இருக்கும். ஒரு வேளை முகத்திற்கு பவுடர் வேணும்னு தோனுச்சுன்னா, SPF இருக்குறாப்ல பாத்துக்கோங்க. அதேபோல உதடுகள் வறண்டு போகம இருக்குறதுக்கு லிப்ஸ் பாம் பயன்படுத்தலாம். SPF 15 இருக்குற லிப்ஸ் பாம் உங்க லிப்ஸ்க்கு ப்ரஸ்னஸ் கொடுக்கும்.

தண்ணீர் உங்கள் பெஸ்ட் ப்ரண்ட்

வெயில்ல போகும்போது உங்களோட பெஸ்ட் ப்ரண்ட்ட கண்டிப்பா கூட்டிட்டு போங்க. அதுக்காக உங்க ப்ரண்ட கூப்பிட்டு போக சொல்லல, இங்க பெஸ்ட் ப்ரண்ட்ன்னு சொல்றது குடி தண்ணீருங்க. ஆமா, ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் நீங்க 8 டம்ளம் தண்ணீர் குடிக்கனும். ஒருவேளை வாட்டர் கொண்டு போறதுக்கு சான்ஸ் இருந்துச்சுன்னா, தயக்கப்படாம வாட்டர் கேன்ல தண்ணீர் நிரப்பி கைகோட வச்சுக்கோங்க. தண்ணீர் உங்கள ஃபிரஸ்ஸா வச்சிருக்கதுக்கு மட்டுமில்ல, உடல் வறட்சி தடுக்குற வேலை மற்றும் உடல்ல இருக்குற தேவையற்ற நச்சு பொருட்களை வெளியேற்ற உதவுது.

கால்களை கண்டுக்காம விட்றாதீங்க

கால் பாதங்கள் டிரை ஆகுறத பாக்குறது கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கும். அப்டி இருக்குற பாதங்களை வெளில போய் தான் சரி பண்ணணும்ங்ற அவசியம் இல்ல. நாம வீட்டில இருந்தே அத ஈஸியா பண்ணலாமே. பாதங்களுக்கு என இருக்குற பிரத்யேக ஸ்க்ரப் பயன்படுத்தி அத போக்கலாம். வாரத்துல ரெண்டு அல்லது மூணு டைம் இத செஞ்சு பாருங்க. அப்றமாக வித்தியாத்த நீங்களே நோட் பண்ணுவீங்க.

சம்மர் டயட்

சம்மர் டைம்ல வழக்கமா சாப்பிடுற மாதிரி சாப்பிடாம கொஞ்சம் வித்தியாசம் காட்டனும். காய்கறி வகைகள், பழங்கள், பருப்பு வகைகள்  சேர்த்துக்கலாம். உணவுகளில் பச்சை மற்றும் வேக வைத்த காய்கறிகளை அதிகரிக்கனும். அதனால, எவ்வளவு முடியுமோ அவ்வளவு காய்கறிகளை உணவுடன் எடுத்துக் கொள்வது நலம். குறிப்பிடும்படியாக நட்ஸ் (Nuts) சாப்பிடுவது சருமத்திற்கு ரொம்பவே நல்லது. நமக்கு உடலுக்கு தேவையான அளவு கேல்சியமும் எடுத்துக்கனும். பழ ஜூஸ் வகைகளை மறந்துடாதீங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here