உடலுக்கு நலம் தரும் 6 வகை ஆரோக்கிய துவையல்!! நிமிடத்தில் செய்திடலாம்!!

0
188

அலுவலகம் செல்பவர்களுக்கு என்ன சமைக்கலாம் என்பதே பெரிய வேலைதான். தினமும் இரவில் தரும் பெருங்குடைச்சல் நாளைக்கு என்ன செய்யலாம் என்ற கேள்வியே.

தினமும் சம்பார், குழம்பு வகைகள், தாளித்த உண்வுகள் என் செய்தாலும் அவை செய்ய்
நேரம் பிடிக்கும். அவசர உலகத்தில் எதையாவது அரைகுறையாக செய்து அல்லது
ரெடிமேட் உணவுவகைகளி வாங்கி ஒப்பேத்துவதுதான் பலரும் செய்கிறார்கள்.

ஆனால் என்றைக்காவது துவையல் செய்திருக்கிறீர்களா? வெறும் ஒரு நிமிடம் போதும். மிகவும் சத்துள்ளது. ருசி மிகுந்தது.

ஒவ்வொரு காய் அல்லது பருப்பு வகைகளிலும் துவையல் செய்யலாமம. சுடு சாதத்தில் துவையல் மற்றும் நல்லெண்ணெய் அல்லது நெய் கலந்து சாப்பிட்டாலே போதும். சத்தும் கிடைக்கும். ருசியும் அபாரமாக இருக்கும்.

இங்கு எந்த மாதிரியான துவையல் எப்படி செய்வது, என்ன நன்மை தரும் என
சொல்லப்பட்டுள்ளது. வாங்க சுவைக்கலாம். செய்யவும் ஈஸி. செம டேஸ்டி

கருவேப்பிலை துவையல் :

தேவையான்வை :

கருவேப்பிலை- ஒரு கொத்து
உளுத்த்ம்பருப்பு- 2 ஸ்பூன்
வரமிளகாய்- 5
புளி- சிறு நெல்லிக்காய் அளவு
உப்பு – தேவையான அளவு

 

செய்முறை :

கருவேப்பிலையை நன்றாக கழுவி சுத்தம் செய்து உருவிக் கொள்ளுங்கள். வாணிலியில்
கடுகு, உளுத்தபருப்பு வரமிளகாய் தாளித்து கருவேப்பிலையை மற்றும் புளியையும்
சேர்ட்து வதக்குங்கள். கருவேப்பிலை மொறுமொறுவென ஆனதும் அடுப்பை அணைத்து இவற்றை சிறிது நீரும், தேவையான உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரையுங்கள். துவையல் ரெடி.

நன்மை : ரத்த சோகைக்கு நன்மையளிகும். ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

எள் துவையல்

கறுப்பு எள் – அரை கப்,
பூண்டு – 2 பல்,
காய்ந்த மிளகாய் – 5,
தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்,
கறிவேப்பிலை – ஒரு பிடி உருவல்,
புளி – நெல்லிக்காய் அளவு, உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெறும் வாணலியை சூடாக்கி எள்ளை வறுத்துக் கொள்ளவும். உப்பு தவிர மற்ற
பொருட்களையும் வெறும் வாணலியில் வறுக்கவும். எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து, உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

நன்மை :

எள், இரும்புச்சத்து மிக்கது. கால்சியம் நிறைந்தது. பெண்களுக்கு கர்ப்பபை பலப்படுத்தும். எலும்புகள் பலமாகும்.

பருப்பு துவையல்:

தேவையானவை:
கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, தேங்காய் துருவல் – தலா 4 டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 8 (அல்லது தேவைக்கேற்ப),
பூண்டு – 2 பல்,
புளி – சிறு நெல்லி அளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வெறும் வாணலியை சூடாக்கி… கடலைப்பருப்பு, துவரம்பருப்பை சிவக்க
வறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு தேங்காய் துருவல், காய்ந்த மிளகாய், புளி, பூண்டு ஆகியவற்றை வறுத்து… பருப்புகள், உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும்.

நன்மை :

அதிக புரதம் நிறைந்தது. தசை வலிமைக்கு நன்மை தரும். குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்தது.

பீர்க்கங்காய் துவையல் :

தேவையானவை:

பீர்க்கங்காய் – கால் கப்,
தேங்காய் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – 4,
இஞ்சி – சிறிய துண்டு
கறிவேப்பிலை –
சிறிதளவு,
புளி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெயை சூடாக்கி உப்பு தவிர மற்ற எல்லாப்
பொருட்களையும் சேர்த்து வதக்கவும். ஆற வைத்து உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர்
விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.விருப்பப்பட்டால் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து துவையலுடன் சேர்க்கலாம்.

நன்மை :

நீர்ச்சத்து நிறைந்தது. நச்சுக்களை அகற்றும். இரும்புச் சத்து கொண்டது. வயிற்று நோய்களுக்கு மருந்தாகும்.

பிரண்டை துவையல் :

தேவையானவை:

நார் நீக்கி, துண்டுகளாக்கிய பிரண்டை – அரை கப்,

தேங்காய் துருவல் – கால் கப்,
காய்ந்த மிளகாய் – 6,

புளி – சிறு நெல்லி அளவு,
பூண்டு – 2 பல்,
நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விட்டு, கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள்
எல்லாவற்றையும் சேர்த்து (உப்பு நீங்கலாக) வதக்கவும். ஆறவிட்டு உப்பு சேர்த்து,
சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.

நன்மை :

பிரண்டை எலும்புக்கு பலம் தரும். பசியின்மை, வாய்க்கசப்பு போக்கும்.

வேப்பம்பூ துவையல் :

தேவையானவை:
வேப்பம்பூ – 2 கைப்பிடி அளவு,
உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
புளி – நெல்லிக்காய் அளவு,
காய்ந்த மிளகாய் – 8 (அல்லது தேவைக்கேற்ப),
வெல்லம் – சிறிய துண்டு,
நெய் – ஒரு டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

வாணலியில் நெய் விட்டு, வேப்பம்பூவை சிவக்க வறுக்கவும் இதனுடன்
உளுத்தம்பருப்பு, புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். இதில் உப்பு சேர்த்து,
சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக அரைக்கவும். கடைசியாக வெல்லம் சேர்த்து
அரைக்கவும்.

நன்மை :
வேப்பம்பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். வயிற்றில் பூச்சித் தொல்லை ஏற்படுவதை தடுக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here