சூப்பரான முட்டைகோஸ் சூப் தயாரிப்பது எப்படி?

0
4168

முட்டைகோஸ் வைத்து பொரியல், கூட்டு, மிஞ்சி போனால் நூடுல்ஸ் என பயன்படுத்தி சமைப்போம். முட்டை கோஸ் நிறைய சத்து நிறைந்தது, உடல் எடை குறைய வைக்கும் முக்கிய உணவு முட்டை கோஸ் .

முட்டைக் கோஸில் எப்போதும் ஒரே மாதிரியான உணவுகளை  சமைப்பதினாலேயே குழந்தைகள் அவற்றை ஒதுக்கி வைத்து விடுவார்கள்.

எலும்புகளை பலப்படுத்தும் மற்றும் பற்களில் சொத்தை வராமல் தடுக்கும் கால்சியம் அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு அவசியம் தர வேண்டிய உணவு இது.

இது சர்க்கரை வியாதி, ரத்தக் கொதிப்பு, என பல நோய்களுக்கு  எதிரியானது. அதிலும் புற்று நோய்க்கு மிகப் பெரிய எதிரி. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸெடென்ட் புற்று நோய், சர்க்கரை வியாதி மற்றும் உடல் பருமனை தடுக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
முட்டைக் கோஸ்

முட்டைக் கோஸ் சிறு நீரக கற்களை வரவிடாமல் தடுக்கிறது. சிறு நீரகத்தையும் வலுப்படுத்தும்.

இத்தனை அற்புதங்களை கொண்டுள்ள முட்டைகோஸை அடிக்கடி சாப்பிடுவது நல்லது. அவ்வகையில் உங்களுக்ககா முட்டைகோஸில் எப்படி சூப் செய்யலாம் என சொல்லப்பட்டுள்ளது. செய்து பார்த்து கமெண்ட் இடவும்.

தேவையானவை :

முட்டை கோஸ்- 1
மிளகுப் பொடி- 2 ஸ்பூன்
பெரிய வெங்காயம்- 6
தக்காளி- 6
செலரி- ஒரு கட்டு
உப்பு- தேவையான அளவு.

தயாரிக்கும் முறை :

முதலில் மேலே சொல்லப்பட்டுள்ள எல்லா காய்களையும் நீளமாகவும், சன்னமாகவும் அரிந்து கொள்ளுங்கள். பின்னர் தேவையான அளவு நீர் ஊற்றி வேக விடுங்கள். தேவையான உப்பு போடவும்.

அடுப்பை குறைந்த தீயில் வைத்து அரை மணி நேரம் வேக விடுங்கள். அதன் பின் அடுப்பை அணைத்து மிளகுத் தூள் கலந்து விடவும். இப்போது சுவையான முட்டை கோஸ் சூப் ரெடி. உங்களுக்கு விருப்பம் இருந்தால் இதில் குடை மிளகாய், கேரட் போனற்றவற்றையும் சேர்க்கலாம்.

இன்னும் கெட்டியான பதத்தில் தேவை என்றால், சோள மாவை கரைத்து கடைசி கொதியில் சேர்த்துக் கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here