மாவு அரைக்காமலேயே இட்லி நிமிடத்தில் செய்யலாம்! எப்படி?

0
2197

வாரம் ஒரு நாளைக்கு மாங்கு மங்குன்னு உட்காந்து இட்லி செய்வதெல்லாம் சரியான நச்சு வேலை.

கடைல மாவு வாங்கினா கட்டுப்படியாகுமா? அதுவும் வேலைக்கு போறவங்களுக்கு சண்டே ஒரு நாள்தான் ரெஸ்டே. அந்த நாளுக்குள்ள எத்தனை எத்தனை வேலை. இதுல இட்லிக்கு மாவு அரைக்கனும்னறதெல்லாம் சலிப்பான பொழப்புதான். அதுக்குதாங்க இந்த ரெசிபி நீங்க அரைக்க வேணியதில்ல இன்ஸ்டென்டா இதை செஞ்சுக்க்லாம். எப்படின்னு பாருங்க.

தேவையானவை :

அவல்- 1 கப்
இட்லி ரவை- 1 1/2 கப்
தயிர் – 2 கப்
சமையல் சோடா- 1 சிட்டிகை
உப்பு- தேவையான அளவு
நீர்- 2 கப்

செய்முறை :

முதலில் அவலை ஒரு கப் எடுத்து ஒரு கப் தயிர் கலந்து 5 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

ஊறிய பின்னர் அவலை நன்றாக மசிக்க வேண்டும். மேலும் ஒரு கப் தயிரை சேருங்கள்.


அதனுடன் இட்லி ரவையை ஒன்னரை கப் சேர்க்க வேண்டும். இட்லி ரவை என்பது குருணை ரவை.

அதன் பின் நீர் கலந்து மாவு பதத்திற்கு மிக்ஸ் செய்து, அதில் சமையல் சோடா ஒரு சிட்டிகை மற்றும் உப்பு கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை அப்படியே 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும்.

எல்லாம் கலந்து நன்றாக மாவு ஊறி கெட்டியாக இருக்கும். ரொம்ப கெட்டியாக இருந்தால் சிறிது நீர் சேர்த்துக் கொள்ளலாம்.

மாவு கெட்டியாகத்தான் இருக்க வேண்டும். ஊற்றும் போது விழும் அளவு நீர்த்தன்மை இருப்பதும் அவசியம். பின்னர் இட்லி தட்டில் எண்ணெய் தடவி , ஒரு கரண்டியால் மாவை ஊற்றி ஆவியில் வேக விடுங்கள்.15 நிமிடங்கள் கழித்துப் பார்த்தால் இட்லி ரெடி.

இந்த இட்லி வழக்கமாக ஊற்றும் அரிசி மாவை விட மிக மிருதுவா மல்லிகைப் பூப் போல இருக்கும் . அதிகம் நீர் ஊற்றி விட வேண்டாம். பின் சரியாக வராது. இதற்கு உங்களுக்கு விருப்பமான சட்னி செய்து சாப்பிடலாம். ஹெல்தியும் கூட.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here