ருசியான பலாப்பழத்தை தேர்ந்தெடுப்பது எப்படி..?

0
645

வெளியே முட்கள் போன்ற அமையும் உள்ளே இனிமையான  சிறியவர்கள் முதல் பெரியவர்கள் என அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியதாக உள்ளது பலாப்பழம். அதிக அளவு சத்துகள் அடங்கியுள்ளன பலாப்பழத்தில். பல நோய்களுக்கு இனிப்பான மருந்தாக பலாப்பழம் உள்ளது.

பலாப்பழத்தை கொண்டு ஸ்பெஷல் ரெசிப்பி செய்தும் சாப்பிடுவார்கள். அவைகளும் மிகவும் ருசியாகவும் இருக்கும். மார்ச் மாதம் தொடங்கியதும் கடைகளில் அதிகம் காணப்படக் கூடியவையாகவும், கோடை காலத்துக்கு ஏற்ற பழமாகவும், சாப்பிட வேண்டிய பழமாகவும் உள்ளது.

சுவையான பலாப்பழத்தை எப்படி தேர்வு செய்வது..?

மஞ்சள் நிறம்:

பலாப்பழத்தை எப்படி தேர்வு செய்ய வேண்டும் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வைப்பில்லை. நல்ல பழமாக உள்ளதா எப்படி கண்டுப்பிடிப்பது என்ற குழப்பமான மனநிலையிலே வீட்டுக்கு வாங்கி வருவீர்கள். பலாவை அறுத்தால் இன்னும் பழுக்காமல் இருக்கும். அல்லது பழங்கள் அழுகி இருக்கும். பிறகு ருசியான பழத்தை சாப்பிடமுடியாமல் வருத்தம்தான் படுவீர்கள்.

நீங்கள் பலாப்பழத்தில் உள்ள சுளையை மட்டும் வாங்கினால் அதை அங்கே சாப்பிட்டு பார்த்து வாங்குங்கள். அதை பார்த்தால் நல்ல மஞ்சள் நிறத்தில் இருந்தால் அவற்றை நன்கு  பழுத்து இனிப்பாகவும் ருசியாகவும் இருக்கும். நீங்கள் முழுப்பலாவையும் வாங்குகிறீர்கள் என்றால் நீங்கள் கட்டாயம் படித்து தெரிந்துக் கொள்ளுங்கள்.

சுவையான பலாப்பழத்தை எப்படி தேர்வு செய்வது..?

தட்டிப் பார்க்கவும்:

பலாவை பொறுத்தைவரையில் நீங்கள் தட்டிப்பார்த்து தான் வாங்க வேண்டும். தட்டும் போது சத்தம் குறைவாக கேட்டால் அது இன்னும் சரியாக பழமாகவில்லை. விரலால் தட்டும் போது சத்தம் நன்கு வாந்தால், அவை பழமாக உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here