நீங்கள் குடிக்கும் காஃபியில் வெண்ணெய் கலந்தது குடித்தால் நம்ப முடியாத அதிசயம் நடக்கும்!

0
1474

உங்களுக்கு ஒரு வித்தியாசமான காஃபியை பற்றி சொல்லப் போகிறோம். அதாவது நீங்க இது வரைக்கும் புல்லர் ப்ரூஃப் கண்ணாடி கேள்விப் பட்டிருப்பீங்க. ஆனா அந்த கேட்டகிரில ஒரு காஃபியை கண்டுபிடிச்சிருக்காங்க.
‘புல்லட் ப்ரூஃப் காஃபி’ பேர்தாங்க கேட்டாலே மாஸ்ஸா இருக்கு. ஆனால் கான்செப்ட் வெரி சிம்பிள். நம்ம ஊர் வற-காஃபியில் கொஞ்சம் வெண்ணெயும், தேங்காய் எண்ணெயும் கலந்தா அதுக்கு பேர் புல்லட் ப்ரூஃ காஃபி.

புல்லட் ப்ரூஃப் காஃபி கேள்விப்பட்டிருக்கீங்களா? இதை படிங்க...

பால் வெண்மை நிறத்தழகி தமன்னாவின் காலை சிற்றுண்டிக்கு இந்த காஃபியைதான் எடுத்துக்கொள்வாராம். திரைத்துரையில் பல வருடங்களாக தன் அழகின் ரகசியத்தை பூட்டி பாதுகாத்து வந்தவர், சமீபத்தில் ஒரு எக்ஸ்க்லூசிவ் இண்டர்வியூவில் தன்னை மறந்து சொல்லிவிட்டார். தான் குடிக்கும் காஃபியில் வெண்ணெயை கலந்து குடிப்பதாக சொன்னார். அவர் கொடுத்த சின்ன க்ளூவை வைத்து கூகுளை அலசியபோதுதான் தெரிந்தது அந்த காஃபியின் பெயர் புல்லட் ப்ரூஃப் காஃபி என்று. தமன்னா, தீபிகா படுகோனே போன்ற ஹீரோயின்கள் மட்டுமல்ல டாப் ஹீரோக்களும் இந்த காஃபியைதான் குடிக்கிறார்களாம்.

தினமும் காலை நீங்கள் இந்த காஃபியை குடிக்க ஆரம்பித்த 20 நாட்களில் உங்கள் உடலில் இந்த மாற்றங்களெல்லாம் நடக்கும்.
* உங்களது உடலில் செயலியக்க ஆற்றல் அதிகரிக்கும்.
* முகம், சருமம் பொலிவு பெறும்.
* உடல் எடை குறையும்,
* தேவையற்ற கெட்ட கொழுப்புகள் கரையும்.
* முகத்தில் அழகு கூடும்.
* என்றும் இளமையுடன் இருப்பீர்கள்.

குறிப்பாக ஜிம் செல்பவர்கள் இந்த காஃபியை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் உடலில் கெட்ட கொழுப்பை சேர விடாமல் தடுப்பதால்தான் இதற்கு புல்லட் ப்ரூஃப் என பெயர் வைத்துள்ளார்கள் போல.

இந்த காஃபியை எப்படி தயார் செய்வது?

தேவையான பொருட்கள்:-

  • காஃபி தூள் – ஒரு ஸ்பூன்
  • சுத்தமான(உப்பு கலக்காத) வெண்ணெய் – 2 ஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் – அரை ஸ்பூன்

1. காஃபி தூளை சுடுதண்ணீரில் போட்டு எசன்ஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஒரு டேபுள் ஸ்பூன் அளவிற்கு வெண்ணையை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.

2. காஃபி எசன்ஸ், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் இம்மூன்றையும் மிக்சியில் போட்டு முப்பது நொடிகள் அடிக்கவும்.

3. இப்போது சுவையான காஃபி தயார்.

புல்லட் ப்ரூஃப் காஃபி சுவைக்கு நீங்கள் வெணிலா ஃபேவர் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை, தேன் எது கலந்தாலும் கொஞ்சம் கூட செட் ஆகாது. சர்க்கரை அல்லது இனிப்பு ஏதும் சேர்க்காமல்தான் குடிக்க வேண்டும். இல்லையென்றால் இவ்வகை காஃபியின் உண்மையான சுவை கெட்டுவிடும்.

புல்லட் ப்ரூஃப் காஃபியை குடித்த அடுத்த 3 மணி நேரத்திற்கு பசி எடுக்காது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here