உடல் எடையை ஜிம் போகாமலே டயட் இல்லாமலே குறைக்க 6 டிப்ஸ்

0
1235

உடல் எடையை குறைக்க நீங்கள் பெரிதாக மெனக்கெட்டு ஜிம், கடுமையான டயட் எல்லாம் இருக்கத் தேவையில்லை. இந்த வீடியோவில் சொல்லி இருக்கும் இந்த 6 ட்ரிக்ஸ் பயன்படுத்திப் பாருங்க. ஈஸியா உடல் எடையை குறைக்கலாம்.

உடல் எடையை குறைக்க எவ்வளவோ பிரம்ம பிரயத்தனமாய் நிறைய பேர் முயற்சிப்பார்கள். இதில் பல வழிகள் தோல்வியில் அடைந்திருக்கலாம். பலர் கை நிறைய செலவழித்து, உடல் எடையை குறைக்க மருந்துகள் வாங்கி பக்க விளைவுகள் பெற்றது மிச்சம்.

ஜிம், ஏரோபிக், டேன்ஸிங் என எந்த விஷயமும் நீங்கள் போய் இதற்காக கஷ்டப்படத் தேவையில்லை. இந்த 6 டிப்ஸ் மட்டும் பயன்படுத்துங்க.

டிப்ஸ்-1

உங்க தட்டு அளவை குறைச்சு பயன்படுத்துங்க.

நாம் பெரிய தட்டை பயன்படுத்தும் போது அதற்கு தகுந்தாற் போல் உணவும் போட்டுக் கொள்வது இயல்பு. அதற்கு பதிலாக சிறிய தட்டை பயன்படுத்தினால் அளவும் குறைவாக பயன்படுத்துவோம். இதனால் பசியுணர்வு நாளுக்கு நாள் கட்டுப்படும்.

டிப்ஸ்-2

பசி எடுக்கும் போது முதலில் நீர் குடிக்கவும்.

உங்களுக்கு பசி உண்டாகும் போது, முதலில் நீர் குடித்து விட்டால் அதிகம் சாப்பிடத் தோணாது. இல்லையென்றால் மூச்சுப் பிடிக்க, வயிறு முட்ட சாப்பிட்டு விட்டு, பீம் பாய் மாதிரி விடுகிறோம்.

Editorial Summer and Game Day Recipes: Kansas City

டிப்ஸ்- 3 :

நொறுக்குத் தீனியை கண் முன் வைக்காதீங்க.

நொறுக்கு தீனியை கண்டாலே சிலருக்கு ஆசை வந்து விடும். கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிட்டு விடுவார்கள். அதனால் நொறுக்குத் தீனியை உங்க கண் முன் காட்டாமல் எங்காவது ஒளித்து வைத்தி விடுங்கள். இதனால் அடிக்கைட் உங்கள் கண் பார்வையில் அது இருப்பது தவிர்க்கப்படும்.

டிப்ஸ்-4 :

சமச்சீர் உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும்.

எல்லா சத்துக்கள் இருக்கும்படி உணவுகள் எடுத்துக் கொள்வது மிக அவசியம். இதனல கொழுப்போ கார்போஹைட்ரேட்டோ உடலில் அதிகம் சேராமல் சமமாக சேர்க்கும் போது தனிச்சையாக உடல் எடை குறையும்.

டிப்ஸ்- 5 :

உணவை பாகம் பிரித்து சாப்பிடுங்கள்.

உணவை ஒரே சமயத்தில் போட்டுக் கொண்ட பின், அதனை பாகம் பிரித்து குழம்பு, ரசம், என்று போட்டு சாப்பிடுவதால் எல்லா உணவுகள் சாப்பிட்ட திருப்தியும் இருக்கும். இன்னொரு முறிய சாதமும் போட்டு அதிகமாக சாப்பிட மாட்டோம்.

 

டிப்ஸ் – 6 :

சாப்பிடும்போது கவனச் சிதறலை தவிருங்கள்.

நாம் வேடிக்கை பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ அளவுக்கு அதிகமாகவே நாம் உணவை சாப்பிட்டு விடுவோம். ஆகவே கூடிய வரை உங்கள் கவனத்தை சிதற விட்டு, உணவை சாப்பிடாதீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here