சருமத்தை குளிர் காலத்தில் பராமரிக்க வேண்டிய வழிகள்!

0
1215

வெயில் காலத்தை விட, குளிர் காலத்தில் சருமத்தை பராமரிப்பது கடினம். அதிக வறட்சி, சரும அலர்ஜி, சூர்க்கம், எரிச்சல், அரிப்பு எல்லாம் ஒரே சமயத்தில் சேர்ந்து விடும். இதற்கு சருமத்தில் எண்ணெய் பசை வற்றி வறண்டு போவதே காரணம்.

குளிர்காஅத்தில் உடலில் போதிய அளவு சூடு இருக்காது. மேலும் சூரியனின் கதிர்களும் சருமத்தில் படாத போது, சருமத்தின் அடியில் இருக்கும் செபேஸியஸ் சுர்ப்பி, செபம் என்ற எண்ணையை சுரக்காது. சற்று மந்தமாக அது இருக்கும். இதனால் சருமத்தில் எண்ணெய் சுரக்காமல் வறட்சி உண்டாகும்.

எண்ணெய் சுரக்காமல் விடும்போது சருமத்தில் எரிச்சல், அரிப்பு உண்டகும், சுருக்கங்களும் ஆங்காங்கே தோன்றி விடும். முகம் எப்போதும் பொலிவு இல்லாமல் டல்லாக காணப்படும்.

இதனை தடுக்க என்ன வழிகள் உள்ளன என பார்க்கலாம்.

இரு நேரம் எண்ணெய் :

உள்ளிருந்து எண்ணெய் சுரக்காததால், நம வெளிப் புறத்திலிருந்து அதற்கு போதுமான எண்ணெய் அளித்துக் கொண்டே இருக்க வேண்டியது அவசியம். எனவே தினமும் இரு வேளை காலை மற்றும் மாலையில் எண்ணெய் உடல் முழுவதும் பூசிக் கொண்டால், கை, கால்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு வராது. எண்ணெய் தேய்த்த பின்னே குளிக்க வேண்டும். இல்லையென்றால் எண்ணெயில்லாமல் சருமம் மேலும் வறட்சி ஆகி விடும்.

மாய்ஸ்ரைஸர் க்ரீம் :

குளித்து வந்த பின் ,முகத்திற்கு மாய்ஸ்ரைசர் க்ரீம் போட்டுக் கொள்வது குளிர் காலத்தில் மிக அவசியம். உடலிற்கு பாடி லோஷன் குளித்த பின் போட்டுக் கொள்ளுங்கள். இதனால் பல மணி நேரம் சருமம் வறட்சி இல்லாமல் இருக்க உதவும்.

வெதுவெதுப்பான நீர் :

பச்சைத் தண்ணி மற்றும் சுடு நீர் இரண்டுமே சருமதில் வறட்சியை உண்டாக்கும். ஆகவே வெதுவெதுப்பான நீரிலேயே குளிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

தேன் :

தேன் மற்றும் கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவ வேண்டும். இது சருமத்தில் எண்ணெய் பசிய அதிக நேரம் நீடித்திருக்க உதவும்.

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெயில் சிறிது கற்றாழை ஜெல்லை கலந்து முகத்தில் தடவுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து குளிக்கச் செல்லலாம்.

பாலாடை :

மிக எளிதான குறிப்பு இரவு, தூங்குவதற்கு முன். பாலாடை எடுத்து அதனுடன் சிறிது பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து வெறுமனே முகத்டை கழுவிக் கொண்டு தூங்கச் செல்லலாம். இப்படி செய்வதால் மறு நாள் காலையில் சருமம் வறட்சி இல்லாமல் இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here