ஏழரைச் சனியின் தாக்கம் குறைய செய்ய வேண்டிய பரிகாரம் இதுதான்!!

0
2771

ஏழரைச் சனியின் முதல் பகுதியை விரையச்சனி என்பார்கள். அதாவது சனி உங்கள் ராசிக்கு இடம் பெயரும் காலம் இரண்டரை வருடங்கள். தங்கும் காலம் இரண்டரை
வருடங்கள். உங்கள் ராசியை விட்டு செல்லும் காலம் இரண்டரை வருடம். மொத்தம் ஏழரை வருடங்கள்.

இதில் வரும் காலமான விரையச் சனி , தங்கும் காலம் ஜென்மச் சனி மற்றும் செல்லும் காலத்தை கழிவுச் சனி என்பார்கள். இதில் கடைசி இரண்டரை வருடங்கள் கடந்து போன ஐந்தாண்டுகளை விடச் சற்று தொல்லைகள் குறைவாக இருக்கும்.

ராசிக்கு 12ம் இடத்தில் மொத்தன் ஏழரையாண்டுகள் தன் கட்டுப்பாட்டிற்குள் மனிதனை சிக்க வைத்து ஆட்டிப் படைக்கும் சனி பகவான் பிடியிலிருந்து, தப்பிக்க வழி உண்டா
என ஒவ்வொரு மனிதரும் தவிப்பது இயல்பு.

ஊரு விட்டு ஊரு போவது, மனையாள் மதிக்காதது, பிள்ளைகள் சொன்னபடி கேட்காதது, தொழில் நஷ்டம், பணக்கஷ்டம், அவமானம் போன்ற அனைத்து இன்னல்களிலிருந்தும் தப்பிக்க செய்ய வேண்டிய பரிகாரத்தைப் பார்ப்போம்.

பரிகாரம்-1 :

சனிக்கிழமை நாளில் ராகு காலத்தில் பைரவருக்கு வடைமாலை, வெற்றிலை மாலை சாத்தி புனுகு பூசி, கறிவேப்பயிலை சாதம், பாகற்காய் கூட்டு, பால் பாயசம்
படையலிட்டு இரும்பு அகல் விளக்கில் இலுப்பை எண்ணெய் தீபமீட்டு அர்ச்சனை செய்து வர ஏழரைச் சனியின் பிடியிலிருந்து விடுபடலாம்.

பரிகாரம்- 2 :

ராசி 12ல் சனியிருக்கும் போது தேங்காயில் நெய் தீபம் ஏற்றவும். ராசியில் சனி இருக்கும்போது எலுமிச்சை பழத்தின் நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும், ராசிக்கு 2ல் சனி
இருக்கும்போது சாம்பல் பூசணியில் தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள்.

பரிகாரம்-3 :

தாயாருக்கு தோஷம் ஏற்பட்டால் அதைப் போக்க, திங்கட் கிழமை சங்கடஹர சதுர்த்தி உள்ள நாளில் பைரவருக்கு நந்தியாவட்டை மலர் மாலை அணிவித்து புனுகுப்பூசி ஜவ்வரிசி பாயாசம், அன்னம் படையலிட்டு அர்ச்சனை செய்து வந்தால் தாயாருக்கு ஏற்பட்ட துன்பங்கள் விலகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here