சனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :

0
4986

சனி உங்கள் கடுமையான துன்பத்தையும் எளிதாக மாற்றும் அதிபதி. மரணமெ தருவிக்கும் சமயத்தில் சனி பகவனைன் அருளால் அதனை மாற்றி விடும் அற்புத தருணங்களி சனி பகவான் அருள்வர.

சனியின் தாக்கங்களிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது என்பது உண்மை ஆனால் உக்கிரமான துன்பத்திலிருந்து நம்மை காப்பாற்ற சனி அருள்வார்.
சின்ன் சின்ன எளிய பரிகாரங்களிய செய்து வந்தாலே உங்க்ளுடைய சனியின் தீவிர பாதிப்புகளிலிருந்து விடுபட்டு சனியின் பரிபூரண அருளைப் பெற முடியும்.

சனி தாக்கத்திலிருந்து விடுபட நீங்கள் செய்ய வேண்டிய எளிய பரிகாரங்களைப் பார்க்கலாம்.

எமனும் சனியும் சகோதரர்கள். எனவே காகத்திற்கு படைக்கும் எதற்கும் சனி மற்றும் எமன் இருவருமே மகிழ்வார்கள்.

  • தினமும் உலர் திராட்சையை காகத்திற்கு வைக்க வேண்டும்.
  • வன்னி மர பிள்ளையாருக்கு பச்சரிசி மாவு படைப்பது நல்லது. குறிப்பாக இதனை சனிக் கிழமையில் செய்வது நல்லது.
  • கறந்த பசும் பாலை சனிக் கிழமையில் சிவனுக்கு அபிசேஷம் செய்வதால் சனியின் நல்ல பலனைப் பெறலாம்.
  • காகத்திற்கு தினமும் முக்கியமாக சனிக் கிழமை எள்ளு கலந்த சாதத்தை வைத்து வந்தல சனியின் தாக்கம் குறைந்து நற் பலன்கள் தொடங்கும்.
  • சனிப் பிரதோஷம் மற்றும் மற்ற நாட்களில் வரும் பிரதோஷங்கள் சமயத்தில் சிவனை வணங்கி வந்தால் ஏழரைச் சனியின் வீரியம் குறையும்.
  • சனியின் பாதிப்பு இருப்பவர்கள் திரு நள்ளாறு சென்று வணங்கி வருவது நல்லது.
  • ஒவ்வொரு ராசிக்கும் சனியின் பாதிப்பு குறைய செல்ல வேண்டிய கோவில்கள் உள்ளன. அவற்றைப் பற்றி காணலாம்.

மேஷம் :

ஸ்ரீ பெரும் புதூரிலுள்ள ஸ்ரீ ஆதி கேசவ பெருமாள் கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும்.

ரிஷபம் :

விழுப்புரம், உளுந்தூர் பேட்டையில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

மிதுனம் :

கோவை, காரமடை அருகில் இருக்கும் இருளர்பதி என்னும் ஊரில் உள்ள சுயம்பு பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கடகம் :

திருக் கொள்ளிகாடு ஸ்ரீ அக்னீஸ்வரர் கோவிலில் அருள் பாலிக்கும் சிவ பெருமானை வணங்குவது இந்த ராசிக்காரர்களுக்கு நல்லது.

சிம்மம் :

ரிஷப ராசிக்காரகளுக்கு போலவே விழுப்புரம், உளுந்தூர் பேட்டையில் இருக்கும் பரிக்கல் லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு சென்று வந்தால் நன்மைகள் கிடைக்கும்.

கன்னி :

வேலூர் மாவட்டத்தில் உள்ள பெரிய மணலியில் இருக்கும் நாகரத்தினசுவாமி கோவிலுக்கு சென்று நாகேஸ்வர சுவாமியை வழிபட்டல சனி பாதிப்பு குறையும்.

துலாம் :

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள வெங்கனூரில் உள்ள விருத்தக்ரீஸ்வரரை வணங்கி வந்தால், சிறப்பான பலன்களை பெறலாம்.

விருச்சிகம் :

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் மற்றும் அபிராமியையும் வணங்கி வந்தால் சனியின் அருள் பார்வையை பெறலாம்.

தனுசு :

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகிலுள்ள குச்சனூரில் சுயம்புவாக அருள் தரும் சனீஸ்வரரை வணங்கி வருவது நல்லது.

மகரம் :

விழுப்புர மாவட்டம் கோலியனூரில் வாலீஸ்வரரை வழிபட்டு வந்தால் சிறப்பான பலன்களை பெறலாம்.

கும்பம் :

திரு நெல்வேலி கள்ளிடைக் குறிச்சியில் இருக்கும் ஸ்ரீ பூமாதேவி சமேத ஆதிவராகப் பெருமாளை வழிபடுவதால் நல்ல பலன்களை பெறலாம்.

மீனம் :

திருச்சி மாவட்டத்திலுள்ள இடையாற்று மங்கலத்தில் இருக்கும் லட்சுமி நாராய்ணனை வணங்கி வருவதால் சனியின் அருளைப் பெற முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here