மேக்கப் இல்லாமல் உங்க முகம் ஜொலிக்கனுமா? இதோ சூப்பர் வைத்தியங்கள்!

0
613

முகம் எப்போதுமே பளிச்சென்று எல்லாருக்கும் இருக்காது. எப்பவாவது ஃபேஸியல், மேக்க்ப என போடும் போதுதான் நம் முகம் ப்ரைட்டாக பார்க்கும் படி இருக்கும். மேக்கப் இல்லாமல் அல்லது ஃபேஸியல் செய்யாமல் நமது முகம் பளிச்சென்று இருக்குமா? இருக்க வைக்க முடியும்.

உங்கள் முகம் கண்கள்தான் உங்கள் இளமையின் அடையாளம். தொய்வு, சுருக்கங்கள், கரு வளையம் போன்றவை உங்கள் வயாதன தோற்றத்தைதான் வெளிப்படுத்தும். ஆகவே சருமத்தை எப்போதும் அகறையுடன் பராமரித்து நல்ல ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

சருமம் என்றும் பொலியாகவும், பளிங்கு போல் பளபளக்கவும் சில குறிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ள்து. அவற்றை பயன்படுத்த்ங்கள்!!

அரிசி கஞ்சி :

மிக எளிதான குறிப்பு, செய்யவும் எளிது, அற்புத பலனையும் இந்த அரிசி கஞ்சி தரும். சாதம் வடிக்கும் போது வரும் கஞ்சியை எடுத்துக் கொள்ளுங்கள். அது லேசான வெதுவெதுப்பாக கஞ்சியுட்ன சிறிது தேன் கலந்து முகம் மற்றும் கழுத்து போன்ற பகுதிகளில் தடவுங்கள். நன்றாக காய்ந்து முகம் விறைக்க ஆரம்பித்த பின் முகம் கழுவுங்கள். இப்படி செய்தால் முகம் உடனடியாக பளிச்சென்று மிளிரும். இது எல்லா சருமத்திற்கும் ஏற்றது.

குங்குமப் பூ :

குங்குமப் பூ துகள்கள் சில எடுத்து அதில் கொஞ்சூண்டு ரோஸ் வாட்டரை சேர்த்து அப்படியே சில நிமிடங்கள் வைக்கவும். பின் அதனை நன்றாக கரைத்து அதில் சிறிது பால் சேர்க்கவும். இப்போது நன்றாக கலக்குங்கள். இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த கலவையை முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள், முகம் பளிச்சென்று ஜொலிக்கும்.

முல்தானி மட்டி :

பளிச்சென்று முகம் எப்போதும் பளபளக்க உதவும் அருமையான டிப்ஸ் இது. ரோஸ் வாட்டர், முல்தானி மட்டி, மற்றும் சந்தனம், ஆகிய மூன்றையும் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். முல்தானி மட்டி மற்றும் சந்தனம் சம அளவு எடுத்து,அவற்றி ரோஸ் வாட்டரை தேவையான அளவு கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள்.

இந்த குறிப்பு மிகவும் உபயோகமாக இருக்கும். இந்த குறிப்பை வாரம் ஒரு நாட்கள் செய்து வந்தால் உங்கள் முகம் எப்போதும் பளிச்சென்று இருக்கும். சரும பிரச்சனைகளும் தீரும்.

தக்காளி :

டல்லான சருமம் பெற்றவர்களுக்கு தக்காளி மிகவும் அற்புதமான தீர்வு தரும். தக்காளியை மசித்து அதன் சாற்றினை முகத்தில் தடவி 5 நிமிடத்தில் முகம் கழுவ வேண்டும். தக்காளியை வறண்ட சருமம் இருப்பவர்கள் பயன்படுத்தும் போது நேரடியாக தக்காளியை மட்டும் பயன்படுத்தக் கூடாது. அதனுடன் தேன் அல்லது பால் கலந்து பயன்படுத்தலாம். இது உடனடியாக முகத்தை மிகவும் பளிச்சென்று மாற்றும். முயன்று பாருங்கள்.

கற்றாழை :

கற்றாழை இலையின் ஜெல்லை வழித்து எடுத்து அதனை நன்றாக அதன் மஞ்சள் நிறம் போக கழுவிக் கொள்ளுங்கள். இதனை நன்றாக மசித்து அதனுடன் ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள். குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன் வாரம் நாட்களாவது பயன்படுத்த வேண்டும். இப்படி செய்தால் என்றும் இளமையாகவும் பளபளப்பாகவும் ஜொலிக்கும் சருமம் பெறலாம்.

இந்த குறிப்புகள் உங்களுக்கு பயனுள்ளதாகவே இருக்கும் என்று நம்புகிறோம். இதனை உபயோகித்து, பயன் பெற்று உங்களுடைய அனுபவங்களை கமெண்டில் பகிருங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here