சர்க்கரை வியாதியை நெருங்க விடாமல் காக்கும் முருங்கை இலைப் பொடி!! அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கோங்க!!

1
167

முருங்கையைப் பிடிக்காதவர்கள் எவராவது உண்டா, முருங்கைக் காய், முருங்கை இலைகள், முருங்கைப் பூ எல்லாமே ருசி மற்றும் அதிக சத்துக்களைக் கொண்டவை.
பொதுவாக அதிக சத்துக்கள் கொண்ட காய்கறிகளை குழந்தைகள் தொடவே மாட்டார்கள். ஓடிச் செல்வார்கள்.

ஆனால் முருங்கையை பிடிக்காத குழந்தைகள் இருக்க மாட்டார்கள். சாம்பாரில் ஊறிய முருங்கைக்காயை உறிஞ்சி சிலாகித்து சாப்பிடுவார்கள். தேங்காய் துறுவல் தூவிய முருங்கைக் கீரையை சாப்பிடுவது அத்தனை பலம் ருசியும் கூட. அது போல் முருங்கைப் பூவில் ரசம் வைத்து சாப்பிடுவரகள் உண்மையில் அமிர்தம் போலிருக்கும்.

இவ்வளவு ருசி கொண்ட முருங்கை இலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை வியாதியை தடுக்கலாம். ஆரம்ப நிலையில் இருக்கும் சர்க்கரை வியாதியை(pre-diabetes) குணப்படுத்தலாம். அதனை எப்படி பயன்படுத்துவது எனக் காணலாம்.

முருங்கையில் அதிகளவு விட்டமின்கள், மினரல் மற்றும் அமீனோ அமிலங்கள் உள்ளன. இதில் போதுமான அளவு விட்டமின் ஏ,சி, மற்றும் இ உள்ளது. மேலும், இதில்
கால்சியம், பொட்டாசியம் மற்றும் புரோட்டின் அடங்கியுள்ளது.

புண்களை ஆற்றும்:

முருங்கையின் இலைகள், விதைகள் மற்றும் வேர்ப்பகுதிகளுக்கு புண்களை ஆற்றும் தன்மை உள்ளது. இது புண்கள் மற்றும் இரத்தம் வெளியேறுவதை வேகமாக குறைக்க
உதவுகிறது.

கல்லீரல் பாதுகாப்பு :

முருங்கை இலையின் பொடி கல்லீரல் பாதுகாப்பிற்கும் உதவுகிறது. இது கல்லீரலில் ஏற்படும் விஷத்தன்மை, நச்சுத்தன்மை, மற்றும் சேதம் ஆகியவற்றை தடுக்க
உதவுகிறது.

மூளையை வளப்படுத்தும் :

முருங்கை இலையின் பொடியானது, மூளையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. இது வயதான பின் வரும் அல்சைமர் நோயை குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது. இதில் உள்ள விட்டமின் இ மற்றும் விட்டமின் சி ஆனது, ஞாபகத் திறனை பாதுகாக்க உதவுகிறது.

செல் சேதம் தடுக்கப்படும் :

உங்கல் உடலில் செல்கள் சேதாராககாமல் இருந்தால் பல மரபு நோய்கள், தொற்று நோய்கள், முதுமை தடுக்கப்படலாம். அவ்வகையில் முருங்கை இலை பவுடரில் உள்ள
ஆன்டி ஆக்ஸிடண்டுகள், செல்களில் ஏற்படும் சேதம், வீக்கங்களை குணப்படுத்துகின்றன. இதால அரஒக்கியமான வாழ்க்கைக்கு உத்திரவாதம்.

சர்க்கரை வியாதி :

முருங்கை மரத்தின் பட்டை மற்றும் முருங்கை இலைப் பொடி ரத்தத்தில் உள்ள குளுகோஸின் அளவை குறைக்கிறது.

இதயம் :

முருங்கை இலையின் பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. முக்கியமாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க உதவுகிறது.

சிறு நீர்த்தொற்று :

முருங்கை இலையில் கிருமிகளை எதிர்க்கும் திறன் இருக்கின்றது. சிறு நீர்த்தொற்று இருப்பவர்கள் முருங்க இலைச் சாறு அல்லது முருங்கை இலியயின் பொடியை நீர்ல்
கலந்து குடித்தால், சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்கள் குணமாகும்.

எப்படி பயன்படுத்துவது ?

நீங்கள் முருங்கை இலை பவுடரை டீ ஆக குடிக்கலாம். இது மிக சுவையானதாக இருக்கும். இந்த பவுடரை தினமும் அரை அல்லது ஒரு டீஸ்பூன் அளவிற்கு குடிக்கலாம்.

1 COMMENT

  1. நல்ல தகவல்கள் ௮ருமை…👍 பொடி ௪ெய்வது எப்படி என்று தெரியவில்லை …

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here