வெரிகோஸ் நரம்பை குணப்படுத்தனுமா? முக்கியமா இத ஃபாலோ பண்ணுங்க!!

0
1345

வெரிகோஸ் நரம்பு என்பது கால் மற்றும் தொடையில் ஆங்காங்கே நரம்புகள் சுருண்டு திருகிய நிலையில் இருக்கும். இதனை கவனிக்காமல் விடும் போது நரம்புகள் வலை போல் மேலும் சிக்கலாகி கால் தொடை முதல் கால் வரை படர ஆரம்பிக்கும்.

ரத்த ஓட்டம் பாதித்து, அடிக்கடி மரத்துப் போகும்.  பின் அடிக்கடி ரத்தக் கசிவு ஏற்படும். இறுதியில் அறுவை சிகிச்சை வரை கொண்டு போய் விடும். ஆகவே எதையும் ஆரம்பத்திலேயே கண்டு கொண்டால் பிரச்சனையை எளிதாக தீர்க்கலாம்.

ஏன் வெரிகோஸ் நரம்பு உண்டாகிறது ?

வெரிகோஸ் நரம்பு வருவதற்கு முக்கிய காரணம், ஒரே நிலையில் அதிக நேரம் இருப்பது. அதாவது நெடு நேரம் அமர்ந்த நிலையிலேயே இருந்தால் நரம்புகளில் ரத்த ஓட்டம் தடைப் பட்டு நரம்புகள் திருகிக் கொள்ளலாம். அல்லது அதே போல் அதிக நேரம் நின்று கொண்டிருந்தாலும் வெரிகோஸ் நரம்பு ஏற்படும். இது நரம்பு நாளங்கள் வீக்கம் அடைவதால் ரத்தம் ஒரே இடத்தில் தங்கி இவ்வாறு வெரிகோஸ் உண்டாகிறது.

தடுப்பது எவ்வாறு ?

அடிக்கடி கால்களுக்கு அசைவு தரும்படி இருக்க வேண்டும். கால்களை அதிக நேரம் தொங்க வைத்து அமரக் கூடாது. அவ்வப்போது கால்களை ஆட்டிக் கொண்டே இருப்பது அவசியம்.

 

கால்களுக்கு பயிற்சி :

கால்களை மேலே தூக்கி வைத்துக் கொண்டிருப்பது நல்லது. இதனால் அதிக ரத்தம் கால்களுக்கு பாய்வதால் வீக்கம் அடைந்த நரம்புகளில் ரத்தம் தேங்குவது தடுக்கப் படுகிறது. கால்களை மேலெ , கீழே உயர்த்தி தாழ்த்தி பயிற்ச் செய்யும் போது வெரிகோஸ் நரம்புகள் குணமாகின்றன.

நடை :

தினமும் 20 நிமிடங்க கட்டாயம் நடப்பதை வழக்கப் படுத்தினால், வெரிகோஸ் நரம்புகள் மெல்ல இயல்பிற்கு வந்து குணமாகிறது. இது வெரிகோஸ் நரம்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.

தோப்புக் கரணம் :

தோப்புக் கரண்ம போடும்போது அல்லது அமர்ந்து எழுந்து பயிற்சி செய்யும் போது தொடை மற்றும் கால் தசைகள் வலுப்பெறுவதால் நரம்புகளையும் அவை வலுப் படுத்துகிறது. மேலும் வீக்கம் அடைந்த நரம்புகள் குணமாகும்.

மசாஜ் :

எண்ணெய் குறிப்பாக அரோமா எண்ணெய்களை கால்களில் தேய்த்து மசாஜ் தினமும் செய்தால் நரம்புகளில் தேங்கும் ரத்த ஓட்டம் சீராகும். மேலும் ரத்த ஓட்டத்தை துரிதப்படுத்துவதால் வெரிகோஸ் நரம்பு குணமாகும்.

இறுக்கமான உடைகள் :

இறுக்கமான உடைகள் போடுவதை தவிருங்கள். கால்களை இறுக்கும் டைட்ஸ், லெகிங்க்ஸ் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை மேலும் தசை மற்றும் நரம்புகளை பாதிப்பதால் வெரிகோஸ் நரம்பை இன்னும் தீவீரப் படுத்தும்.

ஊட்டச் சத்து :

ஒமேகா 3 அமினோ அமிலங்கள் அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இவை அதிக ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் நார்ச்சத்து கொண்டிருப்பதால், வெரிகோஸ் நரம்பை குணப்படுத்துகிறது.

குளிர் காலம் :

குளிர்காலங்களில் அதிக ரத்த ஓட்டம் உடலுக்கு இருக்காது. அப்போது அதிக நேரம் அமர்ந்தபடி இருப்பதை அவசியம் தவிர்க்க வேண்டும். இவைதான் வெரிகோஸ் நரம்பு உண்டாக முக்கிய காரணம்.

மது மற்றும் புகைப் பழக்கம் :

புகைப் பிடிப்பதும், மது அருந்துவதும் வெரிகோஸ் நரம்பை இன்னும் தீவிரப்படுத்தும். வெரிகோஸ் நரம்பை குணப்படுத்த நீங்கள் மருந்து எடுத்துக் கொண்டாலும் புகை மற்றும் மது அருந்தினால் அவை வேலை செய்யாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here