தித்திக்கும் தைப் பொங்கல் ரெசிபி!

0
38486

பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவில் முதலில் வருது கரும்பும் இனிப்பான பொங்கலாகவும் தான் இருக்கும். பண்டிகையின் போது முக்கிய உணவாக கருதப்படும் பொங்கல் நாம் பாரம்பரிய உணவுகளின் ஒன்று. சர்க்கரை பொங்கல் எப்படி செய்வதென்று பார்ப்போம்.

தித்திக்கும் தைப் பொங்கல் ரெசிபி!

பொங்கல் செய்ய தேவையானவை:

பச்சரிசி – 1/2 கிலோ
பாசிப்பருப்பு – 50 கிராம் (ஊற வைத்து கழுவியது)
பால் – 3/4 லிட்டர்
முந்திரி – 10
உலர் திராட்சை – 10
வெல்லம் – 600 கிராம் (பொடி செய்து கொள்ளவும்)
நெய் – 150 கிராம்
ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு மண் பானை அல்லது பொங்கல் வைப்பதற்கான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் பால் மற்றும் அரிசி கழுவிய நீரை பாத்திரம் முழுவதும் நிரப்ப வேண்டும். பாலானது நன்கு கொதித்து, பொங்கி வரும் போது, அதிலிருந்து சிறிது நீரை எடுத்து விட்டு, பிறகு அரிசி மற்றும் பாசிப்பருப்பை போட்டு, நன்கு கிளற வேண்டும்.
அதே சமயம் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி, முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு, வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அரிசியானது வெந்ததும், அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, உலர் திராட்சை மற்றும் சற்று தாராளமாக நெய் ஊற்றி பிரட்டி, பின் பொடி செய்து வைத்துள்ள வெல்லத்தை போட்டு, நன்கு கிளற வேண்டும். வெல்லம் கரையும் அளவுக்கு நன்கு நன்கு கிளற வேண்டும். பிறகு ஏலக்காய் பொடி தூவ வேண்டும். உங்களுக்கு வேண்டுமானால் தேங்காய் துருவலை சேர்த்துக்கொள்ளளாம்.
சுவையான சர்க்கரைப் பொங்கல் ரெடி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here