சர்க்கரை வியாதி இருக்கா? நீங்க கற்றாழையை எப்படி சாப்பிடனும் தெரியுமா?

0
436

சர்க்கரை வியாதி ஒரு குணப்படுத்த முடியாத வியாதி. இதை வியாதி என்பதை விட உடலில் ஏற்படும் திடீர் மாற்றத்தால் உண்டான வினை என்று கூறலாம்.
சர்க்கரை வியாதியை நிரந்தரமாக கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அப்படி செய்தா காபி, சர்க்கரை போட்டு குடிக்கலாம். மற்றவர்கள் எப்படி இருக்கிறார்களோ அப்படி சாப்பிடலாம்.

 

ஆனால் நீங்கள் கவனித்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால், எல்லாமே குறைவாக கலோரிகளை எரிக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும். இதனால் சக்கரை அளவை ரத்தத்தில் கட்டுக்குள்
வைக்கலாம்.

சர்க்கரை வியாதிக்கு கற்றாழை தரும் நன்மைகள்!!

வெந்தயம், பாகற்காய் போலவே கற்றாழையும் அற்புத பலன்களை சர்க்கரை வியாதிக்கு தருகிறது. கற்றாழை எல்லா இடங்களிலும்
கிடைக்கும் எளிமையான உணவுப் பொருள். அது சர்க்கரை வியாதி வராமல் தடுக்கிறது. வந்த நோயை கட்டுக்குள் வைக்கவும்
உதவுகிறது என ஆயுர்வேத மருத்துவம் கூறுகின்றது. அதனை எப்படி சாப்பிடலாம் என பார்க்கலாமா?

கற்றாழையை சாப்பிடும் முறை :

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ள வேண்டும். குறைந்தது 7முறை தண்ணியில் கழுவினால் அதிலிருக்கும் மஞ்சள் நிற வழவழப்புத் தன்மை மறைந்துவிடும், மஞ்சள் நிற வழவழப்புத் தன்மை வயிற்றிற்கு எரிச்சலை
தருவதால்தான் அதனை பலமுறை கழுவி நீக்கி விடுகிறோம். பின்னர் அந்த ஜெல்லை எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த ஜெல்லை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிடுங்கள். இது சக்தி வாய்ந்தது அல்லது ஜூஸாகவும் குடிக்கலாம். அதனை எப்படி செய்வது என
பார்க்கலாம்.

தேவையானவை :

கற்றாழை முழு இலை-1
நீர்- 3 கப்

செய்முறை :

கற்றாழை இலையை இரண்டாக பிரித்து அதிலிருக்கும் ஜெல்லை ஒரு ஸ்பூனால் வழித்து எடுத்துக் கொள்ள வேண்டும். அதனை நன்றாக கழுவியதற்குப் பின் மிக்ஸியில் அடித்து குழைத்துக் கொள்ளுங்கள். பின்னர் நீர் கலந்து மீண்டும் மிக்ஸியில் சுற்றவும்.

நன்றாக இரண்டும் கலக்கும் வரை அரைத்துக் கொள்ளவும். கற்றாழை ஜூஸ் ரெடி. இதில் 1 ஸ்பூன் இஞ்சி சாறு கலந்து குடியுங்கள். காலை மாலை என இரு வேளை குடிக்கவும்.

கற்றாழையின் நன்மைகள் :

  • இப்படி தினமும் கற்றாழை ஜூஸ் குடிப்பதால் இன்சுலின் செயல்தன்மை அதிகரிக்கின்றது. இதனால் குளுகோஸ் அளவு கட்டுக்குள்
    இருக்கும்.
  • கற்றாழையில் இருக்கும் நார்சத்து விரைவில் நீரில் கரையும் தன்மை கொண்டது. இதனால் குளுகோஸின் அளவு ரத்தத்தில் குறைக்கும். இது இயற்கையான வழியில் ரத்தத்தில் குளுகோஸ் அளவை குறைக்கிறது.
  • கற்றாழை சாப்பிடத் தொடங்கியவுடன் சில மாதங்களிலேயே 50% சர்க்கரை அளவை ரத்தத்தில் குறைக்கும். இதிலுள்ள லெக்டின் ரத்தத்தில் குளுகோஸ் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here