ஓட்டலில் ஜி.எஸ்.டி வசூலிக்கிறார்களே… அது நியாயமானதா என எப்படி கண்டுபிடிக்கலாம்?

0
203

நீங்கள் ஓட்டலில் சாப்பிடும் உணவுகளுக்கெல்லாம் உங்களிடமிருந்து வசூலின் பெயரில் பறிக்கப்படும் வரிகளைப் பற்றி விவரமாக தெரியுமா? பலருக்கும் அது பற்றிய சரியான புரிதலோ, விழிப்புணர்வோ இல்லை என்பதால் தான் ஓட்டல் முதலாளிகள் அதை வைத்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

கொள்ளையோ கொள்ளை:

சமீபத்தில் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தை பயன்படுத்திக் கொண்டு டீக்கும், காஃபிக்கும் கூட ஜி.எஸ்.டி. போட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஓட்டல் உரிமையாளர்கள். கையேந்திபவனில் கூட ஜி.எஸ்.டி, சார் என்று கூலாக விலையை ஏற்றிய கூத்து இந்தியாவின் பல பகுதிகளிலும் நடந்து கொண்டிருக்கிறது.

ஓட்டல்களில் நீங்கள் இப்படிதான் ஏமாற்றப்படுகிறீர்கள்... இனியாவது உஷாராக இருங்கள்!

ஜி.எஸ்.டி.

உண்மையில் ஜி.எஸ்.டி. வரியை ரசீதுடன் வசூலிக்கும் எந்த நிறுவனமும், ஓட்டலும், ஜி.எஸ்.டி. பதிவு எண்ணை ரசீதில் குறிப்பிட்டிருக்க வேண்டும். ரசீதில் இந்த பதிவு எண் இல்லையென்றால் அவர்கள் அப்பட்டமாக கொள்ளை அடிக்கிறார்கள் என்று அர்த்தம். உரிமையாளர் உங்களுக்கு கொடுக்கும் ஜி.எஸ்.டி. ரசீதில் ஜி.எஸ்.டி. எண்னை முதலில் சரிபார்க்கவும் நாம் தவறிவிடக் கூடாது.

எப்படி கண்டுபிடிப்பது?

அங்கேயே உங்களது மொபைல் போனில் டேட்டாவை ஆன் செய்து, https://services.gst.gov.in/services/searchtp என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள். அதில் தோன்றும் நிரப்பு பெட்டகத்தில் ஜி.எஸ்.டி. எண்ணை உள்ளீடு செய்யுங்கள். அந்த எண், நீங்கள் சாப்பிட்ட ஓட்டலின் பெயரை சரியாக காட்டினால் கட்டணம் செலுத்துங்கள். இல்லையென்றால் நேரடியாக நீங்கள் புகார் கொடுங்கள்.

சேவை வரி:

சர்வீஸ் டேக்ஸ் எனப்படும் சேவை வரியையும் நுகர்வு தொகையுடன் கூட்டி ரசீதில் குறிப்பிட்டு கட்டாயமாக வசூல் செய்து வருகிறார்கள். ஆனால் சட்டம் என்னவென்றால், நுகர்வோர்(வாடிக்கையாளர்கள்) தாங்கள் நுகரும்போது சிறந்த அனுபவத்தை பெற்றிருந்தால், அவர்கள் விருப்பப்பட்டால் சேவை வரியை செலுத்தலாம் என்பதுதான். இப்படி இருக்கும்போது எந்த இடத்திலும் உங்களது அனுமதியின்றி உங்களது பணத்தை விட்டுக் கொடுக்காதீர்கள். சேவை வரியை செலுத்துவது என்பது முழுக்க முழுக்க நுகர்வோர் உரிமை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here