சிசேரியன் செய்த பின்னர் ஒரு பெண் என்ன செய்ய வேண்டும்?

0
1548

பிரசவ வலிக்கு பயந்து சிசேரியனே பரவாயில்லை என பல பெண்களும் நினைக்க ஆரம்பித்து விட்டனர். ஆனால் உங்களுக்கு உண்மை தெரியுமா நார்மலாக நடக்கும் சுகபிரசவத்தை விட இரு மடங்கு ரத்தப்போக்கு சிசேரியனில் உண்டாகும். பிரசவ வலி அந்த ஒரு மணி நேர வலிதான். குழந்தை பிறந்த ஓரிரு நாட்களில் நார்மலாகிவிடுவீர்கள். ஆனால் சிசேரியன் ஆனதுக்கு அப்புறம் நிறைய பாதுகாக்க வேண்டும்.

வலி :

தையல் போட்ட இடத்தில் அவ்வப்போது வலி வரும். பயப்படத் தேவையில்லை. எப்போதும் போல தாரளாமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்யலாம். ஆனால் பாரங்கள் தூக்கவே கூடாது.

சுத்தம் :

தையல் போட்ட இடங்களில் அவ்வப்போது சுத்தம் செய்து மருந்து போடவேண்டும். ஈரத்தோடு அப்படியே விடக் கூடாது. எப்போதும் தையல் போட்ட இடம் காய்ந்திருக்க வேண்டும். இல்லையென்றால் அங்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு ஏற்படும்.

Doctor removing gauze from Cesarean Section wound in the hospital.

ரத்தப்போக்கு :

ஸிசேரியன் செய்த பின் உங்கள் கருப்பை இயல்பு நிலைக்கு வர சில வாரங்கள் அல்லது மாதங்கள் ஆகலாம். அதுவரை பொறுமையாகத்தான் இருக்க வெண்டும். அந்த சமயத்தில் ரத்தப் போக்கு, இறந்த திசுக்கள் என உங்கள் பிறப்புறுப்பின் வழியாக வந்து கொண்டுதானிருக்கும். அதனைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை.

நீர் :

பிரசவம் ஆன பிறகு ரத்தப் போக்கினல கிருமிகள் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் அவ்வப்போது அதிகமாக நீர் குடித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.

உடலுறவு :

குழந்தை பெற்ற பிறகு குறைந்தது இரு மாதங்களாவது இடைவெளி இருந்த பிறகே உடலுறவு கொள்ள வேண்டும்.

உணவுகள் :

நல்ல உணவுகள், பழங்கள், கரபோஹைட்ரேட் நிறைந்த உணவுகள் அவசியம் சாப்பிடுங்கள். குழந்தைக்கு பால் மற்றும் உங்கள் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்க சமஊட்ட்ச்சத்து பெற வேண்டியது அவசியம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here