உங்கள் நண்பரின் காதல் ப்ரேக்-அப் ஆக வேண்டுமா?…. இதை செஞ்சிப் பாருங்க! (Funny)

0
2696

[இந்த பதிவு யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எழுதப்பட்டது அல்ல. இது ஒரு Just For Fun பதிவு. அம்புட்டுதான்]

PC: wikihow

சிங்குல்ஸ் அமைதியா வாழ்ந்துகொண்டிருக்கும்போது, அவர்களை சுத்தியிருக்க லவ் பேர்ட்ஸ் எல்லாம் ஆட்டம்போடும். ஒவ்வொரு சிங்குலின் வாழ்க்கையிலும் இது வழக்கமானதுதான். அதிலும் சேரவே கூடாததெல்லாம் ஜோடி சேந்து ஆடும்போது அடிவயிறு பத்திகிட்டு எரியும். அதிலும் குறிப்பா நம்ம நட்பை துண்டிச்சிக்கிட்டு காதல் காக்காவா பறந்துகிட்டு இருப்பாங்க. அந்த காக்காவோட காதலை பிரிச்சி ப்ரேக்-அப் பண்ணணும்னா, சிங்குல்ஸ் நீங்க, அந்த அன்பருக்கு காதல் கவிதை எழுதிக் கொடுங்க. அத அப்படியே அவன் ஆளுக்கிட்ட நீட்டுவான். நம்ம ப்ளான் சக்ஸஸ் ஆயிடும்.

சில முரட்டுக் கவிதைகள்…

“உன் கால் கொலுசின் ஒலி கேட்டேன்…
எனக்கு மாட்டின் சலங்கை நினைவுக்கு வருகிறது…”

“நீ ஒரு மொக்கை ஃபிகர் என்பதை,
உன்னுடனே சுற்றிக்கொண்டிருக்கும் செவ்வாழை ஃபிகர்
சொன்னதே இல்லையா? உன்னிடம்…”

“உன்னை விட்டு பிரிந்துச் சென்ற கணம்
என்னிடம் ஏதோ தொலைந்ததாக உணர்ந்தேன்…
பாவி மக, பர்ஸ அடிச்சுட்டாள்.”

“அன்பே உன்னை பார்க்கையில்
என் கன்னம் சிவக்கிறதே!!
என்னா அடி…!!”

“காலையில் 7 மணி – நான்
உன்னை பார்க்கும் நேரம்
ஆனால் வருவது ஏழரை என
நானறியவில்லை’

“நீ எனக்காக சிந்திய கண்ணீர்
தித்தித்தபோது உணர்ந்தேன்
உன் குடும்பத்திற்கே
சரக்கை வியாதி என..”

“நீ பாடும்போதுதான்
நானுணர்ந்தேன்
பேய்களும் பாட வருமென்று…”

 

இந்த கவிதைகளை வச்சே உங்க நண்பனோட லவ்வ 50 சதவீதம் ப்ரேக் பண்ணிடலாம். மீதியை உடைக்க நீங்கள் சற்று கடுமையாகத்தான் உழைக்க வேண்டும்.

தமிழ் சினிமாவின் 5 க்யூட்டான காதல் ஜோடிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here