தினமும் 2 நிமிடங்கள் மட்டும் இதை உங்க மனைவிக்கு கொடுங்க! உங்க வாழ்க்கை தித்திக்கும்!!!

0
74

திருமண வாழ்க்கை என்பது காதல் வாழ்க்கை போல அல்ல.. திருமண வாழ்க்கைக்கும் காதல் வாழ்க்கைக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காதல் வாழ்க்கையில் கூட நீங்கள் எளிதாக சந்தோஷமாக இருந்து விட முடியும். ஆனால் திருமண வாழ்க்கையில் இருக்கும் ஏகப்பட்ட கமிட்மெண்டுகளை தாண்டி சந்தோஷமாக இருப்பது சற்று கடினம் என்று தான் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் நீங்கள் காதல் வாழ்க்கையினை விட திருமண வாழ்க்கையில் தான் அதிகமான சுகத்தினை அனுபவிக்க முடியும். திருமண வாழ்க்கை என்பது உறவுகளுக்கு இடையே ஒரு பாலமாக அமைய கூடியது. நிலையான ஒரு சொந்தமும் கூட.. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த திருமண வாழ்க்கை எப்போதுமே இனிமையாக அமைய நீங்கள் சில விசயங்களை செய்ய வேண்டியது அவசியமாகும். அவை பற்றி இந்த பகுதியில் காணலாம்.

ஒன்றாக சிரிப்பது

வார இறுதி நாட்களில் நீங்கள் உங்களது துணையுடன் சேர்ந்து பல ஆயிரங்கள் செலவு செய்து தான் வெளியில் சென்று இன்பம் காண வேண்டும் என்பது எல்லாம் இல்லை.. சில மணிநேரங்களை செலவிட்டாலே உங்களது திருமண வாழ்க்கை இனிக்கும். இருவருக்கும் பிடித்த நகைச்சுவையான படத்தை சேர்ந்து பார்த்து வயிறு வலிக்க வலிக்க சிரியுங்கள். சில நகைச்சுவை காட்சிகளை இருவரும் நடித்து காட்டியோ, அல்லது பேசியோ இருவரும் சிரித்து மகிழுங்கள்..

விவாதங்கள் வேண்டாம்

விவாதங்கள் உங்களது திருமண வாழ்க்கையின் இனிமையை கொஞ்சம் கொஞ்சமாக கெடுத்து விடும். எனவே எப்போதும் பொருமையாக பேச பழகுங்கள். முதலில் உங்களது துணையின் கருத்து என்ன என்பதை கேளுங்கள். அதன் பின் உங்களது மாற்றுக் கருத்தை தெரிவியுங்கள். என்றும் அமைதியாக பேசுங்கள். கத்தி பேசுவது சண்டையை வர வைக்கும்.

குறை கூறாதீர்கள்

எப்போது பார்த்தாலும் ஒருவர் மீது குறை கூறிக் கொண்டே இருந்தால், அவர் சோர்ந்து விடுவார். நீங்கள் அவரை அனைத்து விஷயங்களிலும் மாற்ற விரும்ப கூடாது. அவரது குறைகளை கூட, நீ இப்படி செய்தால் இதை விட நன்றாக இருக்குமே.. என்பது போல மனது புண்படாமல் கூறுங்கள்.. உங்களது மனதை அவர் புரிந்து கொள்வார்.

இப்படியும் பேசலாம்

உங்கள் துணையிடம் அவரது உணர்வுகளை தூண்டும் படி பேசுங்கள்.. அவரது அழகினை வர்ணிக்கலாம்.. அவரது கவர்ச்சியை வர்ணிக்கலாம். இவை உங்களுக்குள் மிகுந்த நெருக்கத்தை உண்டாக்கும்.

பழி போட வேண்டாம்

உங்களுக்கு கஷ்டமான சூழ்நிலைகள் வந்தாலோ அல்லது வாழ்க்கை போரடிப்பது போல தோன்றினாலோ நீங்கள் தான் அதனை சரி செய்து கொள்ள வேண்டும். அது உங்களது துணையால் தான் நேர்ந்தது என்று மனதளவில் கூட நினைப்பது என்பது கூடாது.

கேளுங்கள்

யாருக்குமே அவர் பேசுவதை எல்லாம் காது கொடுத்து கேட்பவரை மிகவும் பிடிக்கும். உங்களது துணை என்ன தான் சொல்கிறார்.. அவரது மனதில் என்ன தான் இருக்கிறது என்பதை காது கொடுத்து கேளுங்கள்.. அவர் உங்களிடம் சொல்லாமல் வேறு யாரிடம் தான் இதை எல்லாம் கூறுவார்…? முழு ஆர்வத்துடன் கேட்க வேண்டியது என்பது மிகவும் அவசியமாகும்.

சவால்களை ஏற்று செய்யுங்கள்

நீங்களும் உங்களது மனைவியும் சவாலான மற்றும் குழந்தை தனமான விசயங்களை ஏற்று ஒன்றாக செய்து முடியுங்கள். அது விளையாட்டாகட்டும், சமையலாகட்டும்.. எதுவாக வேண்டுமானலும் இருக்கலாம். இது போன்ற விசயங்கள் உங்களுக்கு இடையே நெருக்கத்தை உண்டாக்கும்.

விருப்பங்கள்

உங்களது துணையிடம் நமது எதிர்காலம் இப்படி எல்லாம் இருக்க வேண்டும்.. இதை எல்லாம் செய்ய வேண்டும்.. என்று கூறுங்கள். உங்களது எதிர்கால திட்டங்கள் அனைத்திலும் அவர் இருக்க வேண்டியது அவசியம். அவரது ஆசைகள் மற்றும் விருப்பங்கள் பற்றியும் கேட்டறிய வேண்டியது அவசியமாகும்.

தீர்வு

உங்களது துணைக்கு ஏதேனும் பிரச்சனை என்றால், அதனை கேட்டறிந்து அதற்கான தீர்வினை கொடுக்க வேண்டியது அவசியமாகும். இப்படி செய்தால் தான் நீங்கள் அவரது நம்பிக்கையை பெற முடியும்.

முத்தமிடல்

உங்களது வாழ்க்கை துணையிடத்தில் அடிக்கடி தீண்டல்கள் இருக்க வேண்டியது அவசியமாகும். முத்தங்கள் இடுவது, அணைத்துக் கொள்வது போன்றவை இருக்க வேண்டியது அவசியமாகும். அதுமட்டுமின்றி மிக நீண்ட நேரம் முத்தமிட்டால் இருவருக்குமிடையே ஆன நெருக்கம் அதிகரிக்கும். அதோடு வாழ்க்கை என்றைக்குமே தித்திக்குமாம்..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here