கல்யாணமான பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முந்தானை முடிச்சு மந்திரம்!!!

0
75

திருமணமான பெண்கள் அனைவருக்குமே தங்களது கணவனின் அன்பை முழுமையாக பெற வேண்டும் என்றும், கணவன் எந்த நேரமும் தன்னையே நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற ஒரு தீராத ஆசையும் இருக்கும். இது நியாயமான மற்றும் பொதுவான ஒரு ஆசை தான்.

ஆனால் பல பெண்களுக்கு தனது கணவனை முந்தாணையிலேயே முடிந்து வைத்துக் கொள்ளும் அந்த இரகசியம் தெரியாமலேயே இருக்கிறது.. இந்த முக்கியமான விஷயம் ஒரு பெண்ணுக்கு தெரியாமல் இருக்கலாமா? இந்த பகுதியில் கணவனை ஈர்க்க பெண்கள் செய்ய வேண்டிய சில விஷயங்களை பற்றி விரிவாக காணலாம்.

மூன்று வார்த்தை

நான் உன்னை காதலிக்கிறேன் என்ற வார்த்தைக்கு மிகப் பெரிய சக்தி இருக்கிறது.. திருமணமான புதிதிலும், காதலிக்கும் போதும் அடிக்கடி சொல்லி திரியும் இந்த மூன்று வார்த்தையை நாம் காலப்போக்கில் மறந்தே போய்விடுகிறோம்.. என்ன தான் பிஸியான வாழ்க்கை என்றாலும் ஐ லவ் யூ என்று சொல்ல மறந்துவிடாதீர்கள்.. இந்த மூன்று வார்த்தை உங்களது கணவனின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். உங்கள் மீது காதலை அதிகரிக்கும்.

முத்தம் கொடுங்க…!

உங்க கணவருக்கு அடிக்கடி முத்தம் கொடுங்கள்.. உங்களுக்கு உதவி செய்தாலும், உங்களுக்கு பிடித்ததை செய்தாலும், அலுவலகத்திற்கு செல்லும் போதும் முத்தம் கொடுங்கள்.. காரணமே இல்லை என்றாலும் ஒரு முத்தத்தை கொடுத்து வையுங்கள்.. கரும்பு திண்ண கூலியா தேவை?

நம்புங்கள்

உங்கள் கணவரி மீது நம்பிக்கை வையுங்கள்.. அவரது முடிவுகள் மீது நம்பிக்கை இருக்கட்டும். அவர் ஒன்று சொன்னால் அது சரியாக தான் இருக்கும் என்று நம்புங்கள்.. ஒருவேளை தவறாக இருந்தால், உடனே வாக்குவாதம் எல்லாம் வேண்டாம்.. அன்பாக சொல்லி புரிய வையுங்கள். இதனால் கணவரை நீங்கள் மதித்து நடக்கறீர்கள் என்றும், தனக்கு வீட்டில் மதிப்பு, மரியாதை மற்றும் செல்வாக்கு இருக்கிறது என்றும் அவர் நினைத்துக் கொள்வார்.

வெட்டி பேச்சு வேண்டாம்

தனது பிறந்த வீட்டு பெருமையை பேசுவதை சில பெண்கள் விரும்புவார்கள்.. ஆனால் எந்த ஆணும் இதனை விரும்ப மாட்டான்.. என் பிறந்த வீட்டில் நான் எப்படி இருந்தேன் தெரியுமா? என் அம்மா, அப்பா என்னை எப்படி பார்த்துக் கொண்டார்கள் தெரியுமா? என்று உங்களது பிறந்த வீட்டு பெருமையை பேச ஆரம்பித்துவிடாதீர்கள். இது கண்டிப்பாக அவரை பாதிக்கும்..

வேண்டுமென்றால், என் கணவர் என்னை அப்படி பார்த்துக் கொள்கிறார், இப்படி பார்த்துக் கொள்கிறார்.. என்னை உள்ளங்கையில் வைத்து தாங்குகிறார் என்று புகழுங்கள்.. இது உங்களது கணவரை பெருமைப்படுத்தும். இதுவரை உங்களை நன்றாக கவனித்துக் கொள்ளவில்லை என்றாலும் கூட, இனி சூப்பராக பார்த்துக் கொள்வார்.

குழந்தையாக மாறுங்கள்

நீங்கள் எவ்வளவு தான் சீரியஸான பெண்ணாக இருந்தாலும் கூட, நீங்கள் உங்களது கணவரிடம் குழந்தையாக மாறிவிடுங்கள். குழந்தை தனமாக பேசுங்கள், கொஞ்சி விளையாடுங்கள்.. அவர் அலுவலகத்தில் என்ன தான் பிரச்சனையாக இருந்தாலும் அதை எல்லாம் மறந்து சந்தோசமாக இருக்க உங்களது குழந்தை தனம் உதவியாக இருக்கும்.

இதை மட்டும் செய்யாதீங்க…

உங்களது மாமியார், நாத்தனார் போன்றவர்களை அடிக்கடி குறை கூறிக் கொண்டே இருக்காதீர்கள். எந்த ஒரு ஆணுக்கும் தனது குடும்ப உறுப்பினர்களை குறை கூறினால் பிடிக்காது. அப்படி அவர்கள் குறையை நீங்கள் சொல்ல வேண்டும் என்றால், மென்மையாக மட்டுமே பேசுங்கள்.. கூச்சல் போட்டால் உங்களுக்கு தான் பிரச்சனை வந்து சேரும்.

மென்மையாக சொன்னால் தான் கணவர் எப்போதும் உங்கள் பக்கம் இருப்பார். இல்லை என்றால் கணவருக்கு உங்கள் மீது உள்ள மதிப்பு குறைந்துவிடும்.

சண்டையை மறக்கவும்

சண்டை இல்லாத குடும்பமே இருக்காது. இருக்கவும் முடியாது என்று கூறிவிடலாம். கணவன், மனைவி சண்டையை எப்போதும் மனதில் வைத்துக் கொண்டே இருக்க கூடாது. என்ன தான் சண்டை என்றாலும் அதை எல்லாம் மறந்துவிட்டு இயல்பாக நடந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

கட்டிப்பிடி வைத்தியம்

கட்டிப்பிடி வைத்தியத்திற்கு உண்மையாகவே அதிக பலன் உண்டு. எனவே தினமும் உங்களது கணவரை கட்டுபிடியுங்கள்.. இது உங்கள் இருவருக்கும் இருக்கும் நெருக்கத்தினை அதிகரிக்கும்.. உங்கள் மீது உள்ள அன்பை அதிகரிக்கும். குடும்பத்தின் மீது அக்கறையை அதிகரிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here