நவராத்திரியை எந்த ஊரில் எப்படி கொண்டாடுவரகள்?

0
2564

நவ ராத்திரி இந்தியவைல் பாரம்பரிய கலாச்சாரத்தை நினைவு படுத்தும் வகையில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. இதனை ஒவ்வொரு மா நிலத்திலும் ஒவ்வொரு பெயரிட்டு கொண்டாடுகிறார்கள்.

தமிழ் நாட்டில் நவ ராத்திரி, கர் நாடகா மற்றும் குஜராத் மா நிலத்தில் தசரா எனவும். மகராஷ்டிரா மற்றும் உத்திரப் பிரதேசங்களில் ராம் லீலா எனவும் கொண்டாடப்படுகிறது.

தமிழ் நாடு :

நமது தமிழ் நாட்டில் வீட்டில் கொலு வைத்து ஒன்பது நாட்களும் விரதம் அனுசரித்து கொண்டாடுவோம்.இறுதியான் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை கொண்டாடுவோம். விஜய தசமி அன்று பாடம் படிக்க ஏதுவான நாளாக அன்று பள்ளியில் சேர்ப்பது அனுகூலம் தரும்.

கர் நாடகம் :

கர் நாக்டகத்தில் மைசூர் அரண்மனையில் ஒன்பது நடகளும் கோலாகாலமாக பல வித நடனங்கள், யானை, குதிரை ஊர்வலங்கள், பட்டாசுகள் வெடித்து கோலாகாலமாக நடக்கும்.

குஜராத் :

குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரில் நவராத்திரியை முன்னிட்டு கார்பா நடனம் வெகு சிறப்பாக நடக்கும் அதற்காக ஒவ்வொரு தினமும் தங்களை அலங்கரித்து நடனங்கள் ஆடுவர்.

இந்த பண்டிகைக்காகவே பயிற்சிகள் பெற்று நடனங்கள் ஆடத் தொடங்குவரகள். அங்கே துர்கா பூஜை செய்து, பானகம், நிறைய இனிப்புகள் ஒவ்வொரு வீதியிலும் வினியோகித்து 9 நாட்கள் வரை கொண்டாடுவரகள்.

 

இறுதி நாளில் அசுர வதம் செய்யும் துர்கை அம்மனின் சிலையை தூக்கிக் கொண்டு நகர்வலம் வருவரகள். அப்போது பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்.

இந்த நவராத்திரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், துர்கை அம்மனின் வாகனமாக சிங்கத்தை அகமதாபாத்தில் சிங்கங்களைக் காப்போம்’ என்ற வாசகங்களை தங்களுடைய உடலில் பொறித்துக் கொள்பவர்களும் உண்டு.

மகராஷ்டிரா :

மகாராஷ்டிரா மாநிலங்களில் துர்கை சிலைகளுக்கு வர்ணங்கள் தீட்டி மகிழ்ந்து பெண்கள் பக்தியோடு அந்த சிலைகளை வணங்குவார்கள்.

உத்திர பிரதேசம் :

உத்தரப்பிரதேசத்தில் ராம் லீலா என்று பெயர். ராமாயண நாடகங்களை எல்லா ஊர்களிலும் அரங்கேற்றுவார்கள். விஜய தசமியன்று ராவணன் மற்றும் கும்பகர்ணன் உருவ பொம்மைகள் பொது இடங்களில் வைத்து எரித்து கொண்டாடி மகிழ்வார்கள்.

மேற்கு வங்கம் :

மேற்கு வங்கத்தில் நவராத்திரியை துர்கா பூஜா என்று அழைக்கிறார்கள். எல்லா வீதி தோறும் பந்தல்கள் அமைத்து அதில் அசுரனை வதம் செய்யும் துர்கா சிலை, லட்சுமி சிலை, சரஸ்வதி சிலைகளை உருவாக்கி வணங்கி வருவார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here