வெயில் காலத்துல தவறியும் இந்த 8 ஊருக்கு போயிடாதீங்க!! உக்கிரமா இருக்கும்

0
205

வெளியே போனாலே கொதிச்சு நம்மையே உருக்கிற அளவுக்கு பூமியின் வெப்பம் கூடிப்
போயிட்டே இருக்கு. ஏற்கனவே நம்ம ஊரெல்லாம் எல்லா பருவத்திலயும் சூடான
தட்பவெப்ப நிலை கொண்ட பகுதிதான். இதுல வெயில் காலமாவது, குளிர் காலமாவது
என சென்னை, மதுரைவாசிகள் புலம்புவது காதில் விழுது.

ஆனா பாருங்க. நம்ம ஊரெல்லாம் ஒன்னுமில்லை ங்க்ற மாதிரி சில ஊர்ல எல்லாம்
வெயில் புளந்து கட்டும். லீவுக்கு போகனும்னா இந்த ஊரைப் பத்தி எல்லாம் கொஞ்சம்
எச்சரிக்கையா வெயில் காலம் இல்லாத சமயமாத்தான் போகனும். அப்படி உங்களுக்கு
அந்த ஊரைப் பத்தி தகவல் தெரிஞ்சுக்க இந்த கட்டுரையைப் படிங்க!

ரெண்டசின்ட்லா- ஆந்திரா :

ஆந்திரான்னாலே ஹாட் தான் . அதுலேயும் டெண்டசின்ட்லா ங்கற சின்ன கிராமம்
குண்டூர் மாவட்டுத்துல இருக்கு. வெயில் காலத்துல சர்வ சாதாரணமா 45 டிகிரி
தொடுமாம். 2012 ஆம் ஆண்டு அதிகபட்சமா 52 டிகிரி வெயிலாம். வெளில தலைக்காட
முடியாத ஊரா இருக்கும்போல.

 

ராஜ்கர்ஹ்- ராஜஸ்தான் :

மே, ஜூன் மாசத்துல வெயில் உக்கிரமா இருக்குமாம். 50 டிகிரி வரை வெயில்
இருக்குமம. பகல் சமயத்துல இந்த ஊர் பாலைவனமா இருக்குமாம். குளிர்காலத்துல
அப்படியே எதிர்பதம் உறை நிலை வரை குளிர் போகும்.

 

தல்தோங்கஞ்ச்-ஜார்கண்ட் :

இந்த நகரத்தை மதினி நகர் ன்னும் சொல்வாங்களாம். இங்க அதிகபட்சம் 48 டிகிரி வரை வெயில் பதிவு ஆயிருக்கு. ரொம்ப புழுக்கமான சீதோஷ்ணம் கொண்ட நகரம்.

புபனேஸ்வர் :

ஒடிசாவின் தலை நகரமான புபனேஸ்வரில் மே, ஜூனில் பொதுவா 40 டிகிரி இருக்கும்.
அதிக பட்சம் 45 டிகிரி பதிவாயிருக்காம். மதியானம் எல்லாம் நினைச்சலே பயங்கரம்.

திருப்பதி – ஆந்திரா :

திருப்பதி வெங்கடாசலபதி கோவில் உலகப் பிரசித்திப் பெற்றது. அதுவும் ஏப்ரல், மே
மாதங்களில் கூட்டம் ரொம்பவும் அதிகமா இருக்கும். வெயிலும் சளைக்காம
கூட்டத்தோட் போட்டி போடும், 35-40 டிகிரி வரை வெயில் உக்கிரமா இருக்கும்.

நாக்பூர் :

மகராஷ்ட்ராவின் இரண்டாவது தலை நகரமான நாக்பூரில் உச்சபட்சமாக 48 டிகிரி வரை வெயில் பதிவாகியிருக்கு. பொதுவா வெயில் காலத்துல 40 டிகிரி வரை வெயில் சும்மா நடை போடும்.

அஹ்மதாபாத்-குஜராத் :

அஹமதாபாத்தில் இந்த வருஷம் 48 டிகிரி வெயில். இதுவரை 4 பேர் வெயில்ல
இறந்திருக்காங்க. வேலைக்கு போறவங்க எல்லாம் தெய்வம்.

ஸ்ரீ கங்கா நகர்- ராஜஸ்தான் :

இந்த ஊர்ல சராசரியா வெப்பம் 48 டிகிரி வரைக்கும் இருக்கும். அதிகபட்சம் 50 டிகிரி
வரை தொட்ருக்கு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here