சில வாரங்களில் உங்கள் தொப்பையை குறைக்க வைக்கும் நீர்!

0
1267

தொப்பையை குறைக்க வைப்பது நிறைய பேருக்கு கனவாகவே இருக்கிறது. என்ன செய்தாலும் தொப்பை குறையாமல் அடம் பிடிக்கிறதா? அதற்கு மாங்கு மாங்கென உடற்பயிற்சி, கடுமையான டயட் எதுவுமே ஒத்து வரலைன்னு கவலைப்படறீங்களா? இந்த தொப்பை பிரச்சனை உங்களுக்கு மட்டுமில்லை. 80 சதவீத இந்திய மக்களோட பிரச்சனை. அதுக்கு அருமையான தீர்வு ஒன்று இருக்கிறது. மிக மிக எளிதான குறிப்பும் கூட.

கொள்ளு :

கொள்ளு மிக அதிக புரத்ச் சத்துக் கொண்ட ஒரு பயிறு வகை. கொளுத்தவனுக்கு கொள்ளு என்ற பழமொழிக்கு ஏற்றாற் போல், கொள்ளு கொழுப்பை குறிப்பாக வயிற்றுக் கொழுப்பை குறைக்கும் ஆற்றல் படைத்தது. எப்படியான விடாப்படியான கொழுப்பையும் கரைக்கும் தன்மை பெற்றது.

பூண்டு :

கொழுப்பை கரைப்பதில் கொள்ளுக்கு இணை பூண்டுதன. கொழுப்பை ரத்தத்தில் இருந்தாலும் அதனை எளிதில் அழிக்கும் தன்மை கொண்டது. ஆகவே பூண்டு கொள்ளுடன் சேரும் போது மிக வேகமாக கொழுப்பு மற்றும் தொப்பை குறையும்.

தேவையானவை :

கொள்ளு – 1 கப்
பூண்டு – 5

தயாரிக்கும் முறை :

சுத்தம் செய்த கொள்ளுவை பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை பொடி செய்து கொள்ளுங்கள். பூண்டை அதே ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இரண்டையும் சேர்த்து ஒரு சுற்று சுற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த பொடி ரெடி

இதனை ஒரு மூடியுள்ள ஜாரில் சேகரித்துக் கொள்ளுங்கள். இத்னை இரு வாரங்கள் பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை :

ஒரு பாத்திரத்தில் ஒரு கப் நீரை எடுத்து அடுப்பில் சூடு படுத்துங்கள். கொதி வரும் போது, அதில் இந்த பொடியை ஒரு ஸ்பூன் சேர்த்து , கொதிக்க வையுங்கள். 5 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இதனை லேசான சூட்டில் குடிக்க வேண்டும். வாரம் இரு நாட்கள் குடித்தால் விரைவில் தொப்பை குறைவதை கண்கூடாக பார்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here