யம்மியான வாழைப்பழ கேக்!! புதுவித ரெசிபி- ஓவனில்லாமல் செய்லாம் வாங்க!!

0
945

கேக் என்றால் பிள்ளைக்ளுக்கு கொள்ளை ப்ரியம். ஏன் நமக்கும்தான். வெரைட்டியான க்ரீம் நிறைய கேக் சுவைத்து சாப்பிடுவது அலாதியான மகிழ்ச்சிதான். ஆனல கடைல சப்பிடலாம். ஆன அடிக்கடி சாப்பிடறது நல்லதல்லன்னு நீங்க கேள்விப்படுவீங்க. பத்தாதுக்கு நிறைய மைதா சேர்ப்பாங்க. ஆனா வீட்லயே ஹெல்தியா அதே சமயம் டேஸஸ்டாவும் கேக் பண்ணலாம்.

வீட்டில் கேக் செய்வதென்றால் பெரிய ப்ரோசஸோ என்று பலரும் அதனை செய்வதில்லை.ஆனால் மிகவும் எளிதுதான். இதற்கு நிறைய நேரமோ அல்லது மைக்ரோவேவ் வேண்டும் என்பதெல்லம இல்லை. வீட்டில் குக்கர் இருந்தாலே போதும்.

அதிலும் வாழைப்பழத்துல செய்ற இந்த கேக் சத்து அதிகம் உடலுக்கும் நல்லது, குழந்தைகளும் என்ஜாய் பண்ணுவாங்க்.

தேவையானவை :

முட்டை- 1
வாழைப்பழம்- 4
வெண்ணய்- அரைக் கப்
உப்பு- ஒரு சிட்டிகை
பழுப்பு சர்க்கரை- 1 ஸ்பூன்
சீஸ் – அரை கப்

தயாரிக்கும் முறை :

ஸ்டெப்-1

முதலில் நன்றாக பழுத்த 4 வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றை கூழாக ஆகும் வரை மசித்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் சீஸ் சேர்த்து மேலும் நன்றாக எல்லாம் சேரும் வரை கலக்க வேண்டும்.

ஸ்டெப்-2 :

அதன் பின் ஒரு கிண்ணத்தில் முட்டையை ஊற்றி நன்றாக அடித்து அதில் இந்த வாழைப்பழ கலவையை சேர்க்கவும். அதன் பின் வெண்ணெய், பொடித்த பிரவுன் சர்க்கரை போன்றவற்றை சேர்த்து இறுதியில் ஒரு சிட்டிகை உப்பை சேர்க்கவும்.

ஸ்டெப்-3 :

அதன் பின் ஒரு அகன்ற பாத்திரத்தில் வெண்ணெய் தடவி அதில் இந்த கலவையை ஊற்றுங்கள். குக்கருக்குள் தேவையான நீர் சேர்க்கவும். குக்கர் நீர் மாவுக்குள் இறங்காமல் இருக்க அடியில் ஒரு பாத்திரத்தை வைத்து அதன் மேல் இந்த மாவு பாத்திரத்தை வையுங்கள்.பின் குக்கரை மூடிவிடுங்கள்.

20 நிமிடங்கள் கழித்து குக்கரை திறக்கவும். ஆறிய பின் கேக்கை சதுரமாக வெட்டி சாப்பிடுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here