கைகள் மிருதுவா மெத்துன்னு இருக்கனுமா? இந்த மேஜிக் க்ரீம் ட்ரை பண்ணுங்க!!

0
1513

முகத்தை பராமரிக்கும் அளவிற்கு நிறைய பேர் கழுத்து கைகளை கவனிக்க மாட்டார்கள். குறிப்பாக கைகளை கண்டுகொள்ளவே மாட்டார்கள். விரல்கள் சுருக்கமாகவு,ம் உள்ளங்கைகள் சொரசொரப்பகவும் இருக்கும்.

நிறைய பெண்கள் பாத்திரங்கள் மற்றும் வீட்டு வேலைகளை செய்யும் போது, கைகள் கரடுமுரடாக மாறிவிடும். கைகள் சுருக்கமின்றி, மிருதுவான இருக்க தினமும் 5 நிமிடங்கள் நீங்கள் மெனக்கெட்டால் போதும். பட்டு போல் மெத்தென்ற கைகள் பெறலாம். அதற்கான இந்த DIY உங்களுக்கு உதவும். ட்ரை பண்ணுங்க.

ஸ்மூத்திங் க்ரீம் :

தேவையானவை :

தேங்காய் எண்ணெய்- 2 ஸ்பூன்
கோகோ பட்டர் – 1 டேபிள் ஸ்பூன்
பாதாம் எண்ணெய்- 1 ஸ்பூன்
எலுமிச்சை எசன்ஷியல் எண்ணெய் – 4 துளிகள்

தயாரிக்கும் முறை :

தேங்காய் எண்ணெயில் கோகோ பட்டரை சேர்த்து லேசாக சூடு படுத்துங்கள். பட்டர் உருகிய பின் அடுப்பை அணைத்து விடுங்கள். இதில் பாதம எண்ணெய் மற்றும் எலுமிச்சை எசன்ஷியல் எண்ணெயை கலந்து ஆற விட வேண்டும். இது ஆறிய பின் ஔர் ஜாரில் ஊற்றிக் கொள்ளுங்கள். இது க்ரீம் போல் மாறி விடும். இதனை இரவு தினமும் கை மற்றும் உள்ளங்கையில் பூசிக் கொண்டு மசாஜ் செய்து படுங்கள். இப்படி செய்து வந்தால் மிருதுவான அழகான கைகள் கிடைக்கும்.

மாய்ரைஸிங்க் க்ரீம் :

இந்த க்ரீம் கைகளுக்கு மட்டுமல்லாமல் பாதங்களுக்கும் பூசலாம். பாத வெடிப்புகள் மறையும், கரடு முரடான பாதங்கள் மென்மையாகும்.

தேவையானவை
தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன்
தேன் மெழுகு- 2 ஸ்பூன்
லாவெண்டர் எண்ணெய்- 8 துளிகள்

தயாரிக்கும் முறை :

தேங்காய் எண்ணெய் மற்றும் தேன் மெழுகு இரண்டையும் ஒன்றாக கலந்து அடுப்பில் சூடு படுத்தவும். மெழுகு உருகியவுடன் அடுப்பை அணைத்து, அதில் லாவெண்டர் எண்ணெயை 8 துளி சேர்த்து ஒரு கண்டெய்னரில் சேகாரித்துக் கொள்ளுங்கள். இதனை தினமும் காலை மாலை பூசி வந்தால் மெருதுவான சுருக்கமில்லாத அழகான கைகள் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here