நிரந்தரமாக உதட்டின் மேல் வளரும் முடியை போக்க இதை வாரம் 2 முறை செய்ங்க!!

0
4044

பொதுவாகவெ 10 சதவீத பெண்களுக்கு உதட்டின் மேல் மெலிதாக மீசை வளரும்.. சிலருக்கு வெளியில் அந்த அளவுக்கு தெரியாதது போல் மெலிதாக தோன்றும் இந்த முடிகள் சிலருக்கு அதிகமாக இருக்கும். இது சாதரணப் பிரச்சனைதான். எளிதில் தீர்க்கக் கூடிய பிரச்சனைதான். இதற்காக நீங்க எப்பவும் உட்கனது மூட் அவுட் ஆகத் தேவையில்லை.

பல காஸ்டலியான பொருட்களை பயன்படுத்தி அந்த முடிகளை போக்க நினைத்து வெறுத்துப் போயிட்டீங்களா? இதையெல்லாம் சரி செய்ய பல எளிய வழிமுறைகள் உண்டு. இதனை பயன்படுத்தி உதட்டின் மேல் உள்ள முடிகளை முற்றிலும் போக்கலாம். ஆனால் நீங்கள் வேக்ஸிங், த்ரெட்டிங்க் போன்றவற்றை பயன்படுத்தத் தொடங்கினால் இன்னும் முடி வளர்ச்சி அதிகம் ஆகிவிடும் என்பதை மறந்துவிடுங்கள்.

இங்கே சொல்லப்பட்டுள்ள குறிப்புகளை வாரந்தவறாமல் பயன்படுத்தினால் உதட்டின் மேல் முடிவளரும் முஇட் வளர்ச்சியை முற்றிலும் தடுத்துவிடலாம். ட்ரை பண்ணிப் பாருங்க.

முட்டை:

தேவையான பொருட்கள்:

1 முட்டை (வெள்ளை கரு மட்டும்)

1 ஸ்பூன் கார்ன் மாவு

1 ஸ்பூன் சர்க்கரை

செய்முறை:

முட்டையின் வெள்ளை கருவை, கார்ன் மாவு மற்றும் சர்க்கரையுடன் சேர்க்கவும் .பேஸ்ட் பதம் வரும் வரை நன்றாக கலக்குங்கள்

உதட்டின் மேல் பகுதியில் இதனை தடவவும். நன்றாக காய்ந்ததும் அந்த கலவையை உரித்து எடுக்கவும்.

ஒரு வாரத்தில் 2 முறை இதனை செய்யலாம் . ஒரு மாதத்திற்குள் நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவு :

தேவையான பொருட்கள்:

கடலை மாவு – 1 ஸ்பூன்

கஸ்தூரி மஞ்சள்-1 ஸ்பூன்
நீர்

செய்முறை:

கஸ்தூரி மஞ்சள் கரகரவென இருக்கும்படி பார்த்து வாங்குங்கள். அதனை கடலைமாவ மற்றும் நீருடன் கலந்து பேஸ்ட் போலாக்கி உதட்டின் மேல் தடவ வேண்டும். பின்நன்றாக காய விடவும். காய்ந்தவுடன் முடிகள் இருக்கும் பகுதியில் மேல் நோக்கி ஸ்க்ரப் செய்து அந்த கலவையை நீக்கவும்.வாரத்திற்கு 2 முறை இதனை செய்யலாம்.

கோதுமை மாவு:

தேவையான பொருட்கள்:

1 ஸ்பூன் கோதுமை மாவு

1 ஸ்பூன் பால்

1 சிட்டிகை மஞ்சள் தூள்

செய்முறை:

மேலே சொன்ன எல்லா பொருட்களையும் சேர்த்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளுங்கள். இதனை உதட்டின் மேல் தடவ வேண்டும். நன்றாக காய்ந்த பின் ஸ்க்ரப் செய்து அவற்றை நீக்குங்கள். இரு நாட்களுக்கு ஒருமுறை செய்யுங்கள்.

மேலே சொன்ன எல்லா வழிகளுமே நல்ல பயன்களை தருபவை. அவற்றை விடாமல் தொடர்ந்து செய்தால் நிரந்தரமாக பூனை முடிகளை நீக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here