கூந்தல் பட்டு போல் மாறனுமா? இதோ சூப்பர் ஐடியா!!

0
3847

சாலையில் நாம் சிலரை பார்த்திருப்போம். சில்க் போல் பளபளவென சொன்னால் சொன்னபடி கேட்கும் கூந்தல். அதுவே அவர்களுக்கு தனி அழகை தரும். அவர்களுக்கு மட்டும் எப்படி இந்த மாதிரியான முடி என்று நாம் ஏக்கமாக பார்க்காமல் இருந்திருக்க மாட்டோம்.

சிலருக்கு கூந்தல் நன்றாக அடர்த்தியாக, நீளமாக இருந்தாலும், முடி பொலிவே இல்லாமல் இருக்கும். வறட்சியாக அல்லது மங்கி காணப்படும். அத்ற்கு முக்கிய காரணம் அவர்கள் கண்டிஷனர் பயன்படுத்தாமல் இருப்பதுதான்.

கண்டிஷனர் என்றால் கடைகளில் விற்கும் கண்டிஷனர் கிடையாது. இயற்கையாக எவ்வளவோ பொருட்கள் கண்டிஷனராக பயன்படுத்தப் படுகிறது. அவற்றை தேடி பயன்படுத்திங்கள்.கூந்தல் பட்டு போல் மின்ன இங்கே சில அருமையான பலன் தரும் குறிப்புகள் சொல்லப்பட்டுள்ளது. அவற்றை பயன்படுத்துங்கள்.

மூலிகை எண்ணெய் :

கற்றாழை ஜெல்- கால் கப்

வேப்பிலை- ஒரு கைப்பிடி

எண்ணெய்- 1 கப்

தயாரிக்கும் முறை :

கற்றாழை ஜெல் மற்றும் வேப்பிலையை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஏதாவது ஒரு எண்ணெயை , நல்லண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய்
எடுத்து மிதமான தீயில் காய்ச்சுங்கள்.

சூடானதும், இந்த அரைத்த விழுதை எண்ணெயில் இடவும். நுரை மற்றும் சலசலப்பு அடங்கியவுடன் அடுப்பை அணைத்து, அந்த எண்ணெய் ஆறியவுடன் எடுத்துக் கொள்ளுங்கள். இது முடியை வேகமாக வளர வைப்பதுடன் சூப்பர் மிருதுவாக உங்கள் கூந்தல் இருக்க உதவும்.

எண்ணெய் மாஸ்க் :

இந்த குறிப்பை ஒரு முறை பயன்படுத்துங்கள். அந்த வாரம் முழுதும் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

தேவையானவை :

பாதாம் எண்ணெய்- கால் கப்
ஆலிவ் எண்ணெய் – கால் கப்
முட்டை- 1
தேன்- 2 ஸ்பூன்.

தயாரிக்கும் முறை :

முதலில் இரண்டு எண்ணெய்களையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். பின் முட்டையை எடுத்து அந்த எண்ண்யையில் ஊற்றி க்ரீம் போல் கலக்கிக் கொள்ளுங்கள். அதன் பின் 2 ஸ்பூன் தேன் சேர்க்க வேண்டும்.

இந்த கலவையை தலை முடியில் வேர் முதல் நுனி வரை தடவுங்கள். முக்கால் மணி நேரம் கழித்து தலை முடியை ஷாம்பு கொண்டு அலசுங்கள். இது உங்கள் வறண்ட பொலிவில்லாத முடிக்கு அற்புத தீர்வாக அமையும். மேலும் இது கூந்தல் நன்றாக வளரவும் உதவும். பாதாம் எண்ணெய் கூந்தல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் மிருதுவான கூந்தலுக்கும் உத்திரவாதம் தரும்.

வெந்தய மாஸ்க் :

தேவையானவை :

வெந்தயம்- 5 ஸ்பூன்
சீராம்- 3 ஸ்பூம்
கருவேப்பிலை- 1 கைப்பிடி

தயாரிக்கும் முறை :

வெந்தயத்தை முந்தைய நாள் ஊற வைத்து மறு நாள், ஊறிய வெந்தயத்துடன், சீரகம், கரு வேப்பிலையை கலந்து , ஊற வைத்த நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை தலை முடியில் தடவி மாஸ்க் போல் தமை முழுவதும் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் கழித்து தலைமுடியை ஷாம்பு இல்லாமல் வெறுமனே அலச வேண்டும்.

இது கூந்தலை பட்டு போல் ஆக்கும். அடர்த்தியாக இல்லாதவர்கள் இந்த மாஸ்க்கிய வாரம் 3 நாட்கள் பயன்படுத்தினல முடி அடர்த்தியாக வளரும். ஆனால் நன்றாக நேரம் எடுத்து அலசுவது முக்கியம். இல்லையென்றால் முடி முழுவதும் ஒட்டிக் கொண்டு இருக்கும்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here