மாதவிடாயை கோளாறுகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் ஒரு அற்புத பாட்டி வைத்தியம்!!

0
62

மாதவிடாய் கோளாறுகள் பெண்களுக்கு வரும் பல கவலைகளில் இதுவும் ஒன்று. மாதவிடாய் வந்து விட்டால், ஐய்யோ வந்துவிட்டதே என சோகமாக இருப்பதும், வரவில்லையென்றால் ஐயய்யோ இன்னும் வரவில்லையே என கவலைப்படுவதும் ஏறக்குறைய எல்லாரும் அனுபவப்பட்டதுண்டு.

ஏன் இன்னும் வரவில்லை. ஏதாவது பிரச்சனையோ எனப் பயப்பட்டு, வந்த பின் அப்பாடா என நிம்மதி பெருமூச்சு விடுவதும்
நடந்திருக்கும்..

சரியாக 28-30 நாட்களுக்குள் வருவது நல்ல ஆரோக்கியத்தின் அறிகுறி. சில சமயம் பருவ கால மாறுபாடுகளாள் ஓரிரு நாட்கள் தவறுவதுண்டு. ஆனால் எப்போதும் சீராக இல்லாமல், 2, 3 மாதங்களுக்கு ஒரு முறை மாதவிடய வருவது, வந்தால் தொடர்ச்சியான ரத்தப் போக்கு, இவற்றை கண்டுகொளாமல் இருப்பது சரியல்ல.
தக்க சமயத்திற்கு தீர்வு காண வேண்டும்.

சீராக மாதவிடாய் வரவில்லையென்றால் இங்கே சொல்லப்பட்டிருக்கும் பலன் தௌர்ம் நாட்டு வைத்தியங்களை முயற்சித்துப் பாருங்கள். இவையெல்லாம் அந்த காலத்தில் அனுபவங்களால் நம் பாட்டிகள் கையாண்டு எந்த பக்கவிளைவுகளும் இல்லாமல் குணப்படுத்திய வைத்திய முறைகள்.இவைகளும் பலன் தரவில்லையென்றால் நீங்கள் மருத்துவரை நாட வேண்டும்.

சீரற்ற மாதவிடாய்க்கு :

50 கிராம் கருஞ்சீரகத்தைப் பொன் நிறமா வறுத்துப் பொடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் அதே அளவு பனைவெல்லத்தை சேர்த்து ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.தினமும் இதில் நெல்லிக்காய் அளவு எடுத்து, காலை, மாலை என இரு வேளைக்கு தின்று நீர் குடித்தால் சீரற்ற மாதவிடாய் சரியாகும்.

வெள்ளைப்படுதல் நிற்க :

10 கிராம் வால்மிளகை எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். இதில் 5 தேக்கரண்டி தேன் கலந்து வைக்கவும். இந்த கலவையிலிருந்து, அரை ஸ்பூன் எடுத்து தினமும் இரு வேளை சாப்பிட்டு வந்தால் வெள்ளைப்படுதல் முழுமையா குணமா விடும்.

வல்லாரை :

வல்லாரை சூரணம் நாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும்., அதனை வாங்கி, தினமும் அதனை கால் ஸ்பூன் எடுத்து, நெய் விட்டு குழைத்து சாப்பிட்டு வந்தால்… மாதக்கணக்கில் வராத மாதவிடாய் ஒழுங்கா வரும்.

கர்ப்பப்பை வலுவாக்க :

பதின்ம வயதிலிருந்தே பெண் குழந்தைகளுக்கு உளுந்தக்களி செய்து கொடுத்து வந்தால் கர்ப்பப்பை மிகவும் வலுவாக இருக்கும். பிற்காலத்தில் வரும் கர்ப்பப்பை பிரச்சனைகளை தடுக்கலாம். இடுப்பெலும்பு வலிமையடையும். வெள்ளைப்படுதல், சீற்ற மாதவிடாய், வயிற்று வலி போன்றவை இருக்காது.

உணவுகள் :

பூசணிக்காய், பூசணி விதைகள், சுரைக்காய், முருங்கைக்காய், முருனியக்கீரை, அதிக புரதமுள்ள சோயா, மக்காசோளம் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் ஹார்மோன் பிரச்சனைகள் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here