கரு வளையத்தைப் போக்க உதவும் அற்புத குறிப்புகள்!

0
1342

கருவளையம் போதிய தூக்கம் இல்லாமல் இருந்தால், அல்லது கண்களுக்கு அதிக அழுத்தம் தரும் வகையில் வேலைகள் செய்தால் கரு வளையம் எளிதில் வரும். மிக அதிக நேரம் மொபைல் டிவி பார்த்துக் கொண்டிருந்தால் கரு வளையம் உண்டாகும். கருவளையம் போக்கும் எளிய வீட்டுக் குறிப்புகளை இந்த கட்டுரையில் காணலாம்.

ஸ்பூன் குறிப்பு :

இரவில் ஒரு நல்ல ஸ்பூனை ஃப்ரிஜில் வைத்து விடுங்கள்.ம்று நாள் காலையில் எழுந்து ஃப்ரிஜில் இருந்த சில்லிடும் ஸ்பூனை கண்களில் ஒற்றி எடுக்க வேண்டும். அவ்வாறு 10 நிமிடமாவது செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் ரிசல்ட் கிடைக்கும்.

குளிர்ந்த பால் :

ஃப்ரிஜ்ஜில் வைத்த குளிர்ந்த பாலில் ஒரு பஞ்சை நனைத்து கண்களைச் சுற்றிலும் வைக்க வேண்டும். தினமும் காலை மற்றும் இரவில் இப்படி செய்தால் கரு வளையம் மறையும்.

உருளை சாறு :

உருளை சாறு எடுத்து, அதனை கண்களில் தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இது கருவளையத்தை விரைவில் போக்கும்.

விட்டமின் ஈ :

விட்டமின் ஈ கேப்ஸ்யூலிலிருந்து எண்ணையை பிரித்தெடுத்து அதனுடன் சிறிது விளக்கெண்ணய் கலந்து தினமும் இரவில் பூசிக் கொண்டு படுங்கள். இது கண்களில் இருக்கும் சூட்டை குறைத்து குளிர்ச்சி தரும். மேலும் கருவளையம் காணாமல் போகும்.

க்ரீம் டீ பேக் :

க்ரீன் டீ பேக்கை சுடு நீரில் போட்டு சில நிமிடங்கள் வைத்து பின்னர் அதனை குளிர்ச்சியாக்கி கண்களின் மேல் வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் தே நீர் டிகாஷன் தயாரித்து அதனை கண்களில் பஞ்சினால் தடவுங்கள்.இது கருவளையம் போக்கும். கண்களும் பளபளப்பாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here