ஆண்களின் சருமம் நிறம் பெற- 2 மினிட் மின்னல் வேக குறிப்புகள்!!

0
2781

பெண்களுக்கு இருக்கும் அழகுக் குறிப்புகள் போல் ஆண்களுக்கு இருப்பதில்லை. அத்தனை நேரம் பெண்களைப் போல் செய்து கொள்ள ஆண்களுக்கு பொறுமையில்லை என சொல்லலாம். அதிகம் வெயிலில் அலைவது ஆண்கள்தான்.

இருப்பினும் இப்படி கண்டுகொள்ளாமல் இருப்பதால் முகத்தில் கருமை, மங்கு, முகப்பருக்கள், கருந்திட்டுக்கள் என முகத்தில் உண்டாகிவிடுகிறது.
சருமத்தில் படியும் இறந்த செல்களை அகற்றாமல் விரைவில் முதுமையான தோற்றத்தை பெற்றுவிடுவரகள்.

உங்களுக்கு நேரமும் பொறுமையுமில்லையென்றால் இந்த மின்னல் வேக குறிப்புகள் உங்களுக்கு  உதவும். முயற்சித்துப் பாருங்கள்.

காய்ச்சாத பால் ;

காய்ச்சாத பாலை சிறிது பஞ்சினால் நனைத்து முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவுங்கள். 2 நிமிடத்தில் காய்ந்துவிடும். பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். இது இன்ஸ்டன்ட் ப்ளீஸ் செய்வதால் முகம் இயற்கையாக் நிறம் பெறும்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாற்றில் அரை ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள் 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். வாரம் மூன்று நடகள் செய்தால் ஓரிரு வாரத்தில் முகத்தில் உள்ள கருமிய மறைந்துவிடும்.

வாழைப்பழம் மற்றும் தயிர் :

வாழைப் பழத்தை தயிரில் கலந்து அதனை பேக்காக போடுங்கள். 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் முகத்தில் பொலிவு பெறும். இறந்த செல்கள் அகன்று முகம் பிரகாசமாக மிளிரும். நிறம் கூடும்.

தேன் மற்றும் சர்க்கரை :

தேனில் நாட்டுச் சர்க்கரை கலந்து முகத்தில் தேய்த்து லேசாக மசாஜ் செய்யவும். பின் காய்ந்ததும் குளிக்க போகலாம். வாரம் இரு நாட்கள் இப்படி செய்யலாம்.

உருளைக் கிழங்கு சாறு :

உருளைக் கிழங்கு வேக வைத்த நீர் அல்லது உருளைக் கிழங்கின் சாறு எடுத்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவுங்கள். தினமும் அல்லது ஒரு நாள்விட்டு ஒரு நாள் செய்து வந்தால் நல்ல நிறம் தரும்.

தக்காளி :

தக்காளியை அரை துண்டாக்கி, அதனை முகத்தில் தடவி 2 நிமிடம் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்திற்கு இயற்கையாய் ப்ளீச் செய்யும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் தக்காளியுடன் சிறிது பால் கலந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here