சுருக்கங்கள் மறையனுமா? ஒரு துண்டு பீட்ரூட் எடுத்துக்கோங்க!!

0
1046

30 வயது ஆரம்பிச்சதும் பல பேருக்கு முகத்துல சுருக்கமும், தொய்வும் ஆரம்பிக்குது. ஐய்யயோ வயசாயிடுச்சேன்னு உடனே அடிமனசுல லேசாக கீறல் விழுந்த மாதிரி அப்போப்போ என்ன செய்யலாம்னு வழியைத் தேடறவங்க நிறைய பேர்.

எதையும் ஆரம்பித்திலேயே கவனிச்சா சுருக்கங்கள் வருவதை தள்ளிப் போடலாம். மேக்கப் இல்லாமலே 50 வயதாகியும் சில பேர் இளமையா இருப்பது அவர்கள் சருமத்திற்கு தரும் அக்கறையால்தான்.

நீங்கள் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் உங்கள் சருமத்திற்கு மெருகூட்டும். அப்படியான குறிப்புகள் இங்கே சொல்லப்பட்டுள்ளது. படித்து பயன்பெறுங்கள்.

பீட்ரூட் துண்டு :

பீட்ரூட்டை அரைத்து அதனை முகத்தில் தடவுங்கள் 5 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். தினமும் இப்படி செய்தால் முகத்தில் சுருக்கங்கள் மறைந்து சருமம் ஜொலிக்கும். சருமம் இளமையாகும்.

சந்தனப் பொடி :

சந்தனப் பொடி, ரோஸ் வாட்டர் மற்றும் சிறிது பால் மூன்றும் கலந்து முகம், கை, கழுத்து போன்ற பகுதிகளில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளியுங்கள். சில வாரங்களில் 5 வயது குறைவாக தெரிவீர்கள்.

சுடு நீர் :

சுடு நீரில் குளிப்பதை தவிருங்கள். இவை சரும துவாரங்களை சுருங்கச் செய்வதோடு விரைவில் சுருக்கங்களை தந்துவிடும். அதிக நேரம் சுடு நீரில் குளிப்பதாலும் சுருக்கங்கள் உண்டாகும். பச்சைத் தண்ணீரில் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்கவும்.

உணவு :

விட்டமின் ஏ, சி, ஈ அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிட்டு வந்தல சுருக்கங்கள் ஏற்படாது. ஏற்கனவே உண்டான சுருக்கங்களு நாளடைவில் மறைந்து இளமையான தோற்றத்தைப் பெறுவீர்கள்.

கேரட் சாறு:

கேரட் சாறு எடுத்து அதனை சருமத்தில் பூசிக் கொள்ள வேண்டும். இதனால் அழகான, வழுவழுப்பான சருமம் தோன்றும்.மேலும் நிறமும் மிளிரும்.

ரோஜா இதழ்கள் :

ரோஜா இதழ்களை அரைத்து அதனுடன் பாலாடையைக் கலந்து சருமத்தின் மீது பூசுங்கள். 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். முகத்தில் சுருக்கங்கள் மறைந்து புதுப் பொலிவுடன் உலாவுவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here