எய்ட்ஸ் பற்றி நீங்கள் கேட்கும் 6 முக்கிய கேள்விகளுக்கான பதில் உள்ளே!

0
531
      சர்வதேச எய்ட்ஸ் விழிப்புணர்வு தின சிறப்பு பகிர்வு

ய்ட்ஸ் நோய் குறித்து நமது அரசுகள் பல விழிப்புணர்வுகளை தொடர்ந்து வழங்கி வருகின்றன. இந்தியா முழுவதும் இந்நோய்காக தனி பிரிவு செயல்பட்டுவருகிறது. நோய் குறித்து சந்தேகம் இருப்பின் அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு சென்று நோய்குறித்த தகவல்கள் தெரிந்து கொள்ளலாம், பரிசோதனை செய்துவும் கொள்ளலாம். இந்நோய்க்கு ஆளானவர்கள் மருந்துகளை உட்கொண்டு இயல்பான வாழ்கையை மேற்கொள்ளாலம். ஆனாலும் எய்ட்ஸ் குறித்து பல மூடநம்பிக்கைகள், தவறான புரிதல்கள் நிலவுகின்றன.

எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வுகள் நாடெங்கும் பரவியிருக்கிறதா? என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. நகர்ப்புறங்களை போல கிராமப்புறங்களிலும் சரியாக ஊடகங்களின் வாயிலாக விழிப்புணர்வு கடத்தப்பட வேண்டும். அப்படி என்றால் நகர்ப்புறங்களில் அனைவருக்கும் விழிப்புணர்வு சென்றடைந்து விட்டதா? இல்லை, இன்னும் 35 சதவீதம் பேருக்கு இது குறித்த ஐயப்பாடுகள், சந்தேகங்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அவர்களில் பெரும்பாலானோர் முக்கியமாக 7 கேள்விகளை முன்வைக்கின்றனர். அந்த கேள்விகளுக்கான பதில்களைதான் இங்கே கொடுத்துள்ளோம்.

எய்ட்ஸ் பற்றி நீங்கள் கேட்கும் 6 கேள்விகளுக்கான பதில் உள்ளே!

1. பால்வினை நோய்களுக்கான இலவச மருத்துவம் எங்கே கிடைக்கும்?
 • அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள “சுக வாழ்வு மையங்களில்”
 • இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 • அறிகுறிகளின் அடிப்படையில் சேர் தொகுப்பு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
 • ரத்தம் மற்றும் மருத்துவ பரிசோதனைகள் முற்றிலும் இலவசம்.
2. பால்வினை நோய்களை குணப்படுத்த முடியுமா?
 • நிச்சயமாக முழுமையாக குணப்படுத்த முடியும்.
 • ஆரம்ப நிலையிலேயே அறிகுறிகளின் அடிப்படையில் கண்டறிந்து எளிதில் குணப்படுத்தலாம்.
3. HIV தொற்றுக்கான பரிசோதனை எவ்வாறு செய்யப்படுகிறது?
 • பொதுவாக எல்லா பரிசோதனைகளும் HIVக்கான எதிர் அணு இருப்பதை கணிக்கத்தான் உள்ளது.
 • HIV தொற்று ஆரம்ப நிலையில் கண்டறிய போதிய எதிர் அணுக்கள் இருக்காது. இதை விண்டோ பீரியட் அதாவது மறை காலம் என்று அழைப்பர்.
 • இந்த சமயத்தில் பரிசோதனையில் HIV இருப்பதற்கான எவ்வித சாத்தியக்கூறுகளும் தெரிந்துகொள்ள முடியாது. இச்சமயத்தில் தொற்று உள்ள நபர் உடலுறவு அல்லது இரத்ததானம் கொடுக்கும்போது மற்றவர்களுக்கு HIVஐ பரப்ப முடியும்.
4. யாருக்கு எளிதில் HIV தொற்று ஏற்படும்?
 • பாதுகாப்பு உறை இல்லாமல் உறவு கொள்பவர்களுக்கு ஏற்படும்.
 • அடிக்கடி ரத்தத்தை தானமாக பெறுபவர்களுக்கு HIV தொற்று ஏற்படும்.
 • HIV தொற்றுள்ள தாய்க்கு பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படும்.
 • போதை ஊசி பயன்படுத்துதல், பச்சை குத்துதல் மூலம் பரவவும் வாய்ப்பு உண்டு.
5. HIV எவ்வாறெல்லாம் பரவாது? 
 • ஒன்று சேர்ந்து விளையாடுவது போன்ற சாதாரண பழக்கவழக்கங்களால் பரவாது.
 • HIV தொற்று உள்ள நபரின் இருமல், தும்மல் மூலம் மற்றவருக்கு பரவாது.
 • HIV தொற்று உள்ள நபர் பயன்படுத்திய பொருட்கள் மூலம் பரவாது.
 • HIV தொற்று உள்ள நபர் பயன்படுத்திய கழிவறையை பயன்படுத்துவதன் மூலம் பரவாது.
 • HIV கொசுக்கடி மூலம் நிச்சயமாக பரவாது.
6. HIV எவ்வாறு பரவும்?
 • பாதுகாப்பற்ற முறையில் பலருடன் உடலுறவு கொண்டால் HIV தொற்றுள்ள நபரிடம் இருந்து பரவும்.
 • பரிசோதிக்கப்படாத HIV உள்ள ரத்தத்தை செலுத்துவதன் மூலம் பரவும்.
 • HIV உள்ள கர்ப்பிணி பெண்ணிடம் இருந்து அவரது கருவில் உள்ள குழந்தைக்கு பரவும்.
 • கிருமி தொற்றுள்ள ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட ஊசிகளை பகிர்ந்து கொள்வதாலும் HIV பரவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here