முருகனுக்கு காவடி எடுப்பதற்கான உண்மையான காரணங்கள்..!

0
1000

மனம் முழுவதும் முருகனையும் தோலில் காவடியை சுமந்து அவனது சன்னதியை நடந்தே வந்து காணும் போது நம்மை தேடிவந்த துன்பங்கள் விலகி நன்மைகள் வந்து சேரும். முருகனை மனதில் வேண்டி நினைத்த காரியம் சிறப்பாக செயல்படவும் அல்லது அவனது அருளால்  நல்லப்படியாக நினைத்த காரியம் நடந்தாலோ உன் சன்னதிக்கு காவடி எடுத்து வந்து தரிசிப்பது வழக்கம். பலரும் முருகனை மனதார வேண்டி காவடி எடுக்கிறார்கள். இந்த காவடியை முருகனுக்கு எதற்காக எடுக்கப்படுகிறது என்பதன் உண்மையான வரலாறு அறிந்திருக்க வைப்பில்லை.

முருகனுக்குக் காவடி எடுப்பதற்கான காரணங்கள்..!

அகஸ்திய முனிவரின் சீடர்களில் ஒருவரான இடும்பனை அழைத்து, தனது வழிபாட்டிற்காக கயிலை சென்று அங்கு முருகனுக்கான கந்த மலையிலுள்ள சிவசக்தி சொரூபமான சிவகிரி, சக்திகிரி எனும் இரு குன்றுகளை கொண்டு வரும்படி கூறினார். அகஸ்தியரின் கட்டளையை நிறைவேற்ற இடும்பனும் கயிலைச் சென்று இவ்விரு குன்றுகளையும் இருபுறமும் தொங்கவிட்டபடி, கட்டி எடுத்துக் கொண்டு வருகிறார்.
இடும்பன் வழி தெரியாமல் திகைத்துக் கொண்டியிருந்தார், அப்பொழுது முருகன் அரசனைப் போல் தோன்றி, இடும்பனை ஆவினன் குடிக்கு அழைத்து வந்து சற்று ஓய்வெடுத்துச் செல்லும்படி கூறினார். இடும்பனும் தான் தோலில் கட்டி தொங்கவிட்ட சிவகிரி சக்திகிரியை இறக்கி வைத்து நன்கு ஓய்வெடுத்துக் கொள்கிறார். பிறகு புறப்படும் போது காவடியைத் தூக்க முடியாமல் திண்டாடுகிறார் இடும்பன்.

ஏன் தூக்க முடியாமல் போனது இதற்கு முன் எளியதாக இருந்தது தற்போது என்ன ஆனது என்று சுற்றிப் பார்க்கும் போது, சிவகிரியின் மேல் ஒரு சிறுவன் கோவணத்துடன் கையில் ஒரு தாடியுடன் நிற்பதைக் கண்டான். இடும்பனும் அந்த சிறுவனை மலையிலிருந்து கீழே இறங்கும்படி வேண்டினான். ஆனால் அந்த சிறுவன் இந்த மலை ‘தனக்கே சொந்தம்’ என்று உரிமை கொண்டாட, இவருவருக்கும் வாக்கு வாதம் அதிகமானது. இதில் கோபமுற்ற இடும்பன் அச்சிறுவனைத் தாக்க முயன்றார்.

முருகனுக்குக் காவடி எடுப்பதற்கான காரணங்கள்..!

அப்போது இடும்பன் வேறற்ற மரம் போல் கீழே சரிந்து விழுந்தான். இதைக் கண்ட அகஸ்தியர் மற்றும் இடும்பன் மனைவியுடன் சென்று முருகனை வேண்ட, சிறுவன் தனது ஆண்டியின் திருவுருவில் இருந்து முருகன் தனது கடவுளாக கட்சியளித்து, இடும்பனுக்கு அருளாசி புரிந்ததுடன் இடும்பனைத் தனது காவல் தெய்வமாகவும் நியமித்தார். அப்போது முருகன், இடும்பன் போல் காவடியேந்தி தன் சன்னதிக்கு எடுத்து வருபவர்களுக்கு அருள் பாலிப்பதாக வாக்களித்தார். முருகன் இவ்விரு குன்றுகளையும் திருவாவினன்குடியில் நிலைபெறச் செய்யவும், இடும்பனுக்கு அருளவும் விரும்பி இந்த திருவிளையாடலை நிகழ்த்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here