தோனியின் வெறித்தனமான #comeback.. சிஎஸ்கே-வால் இந்தியா வரலாற்று வெற்றி..!

0
1623

இந்தியா கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் சுமார் 70 வருடங்களுக்குப் பின் முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஒரு நாள் போட்டி துவங்கியது. முதல் இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தலா ஒரு முறை வெற்றிபெற்ற நிலையில் இன்று கடைசி ஒரு நாள் போட்டி துவங்கியது.

இந்தப் போட்டி தான் ஒருநாள் தொடரை கைப்பற்றக் கருவியாக இருக்கும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்புடன் இன்றைய போட்டி துவங்கியது. இன்று ஆரம்பம் முதலே இந்திய அணிக்கு அதிர்ஷ்டம் வீசிய காரணத்தால் கோலி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்து ஆட்டம் துவங்கியது.

48 ஒவர்களுக்கு ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை எடுத்து இந்திய அணிக்கு 231 ரன்களை வெற்றி இலக்காக வைத்து. இதனை எதிர்கொண்டு இறங்கிய இந்திய அணிக்கு முதல் 5 ஒவர்களிலேயே சருக்கியது.

ரோஹித் சர்மா 9 ரன்களிலும், தவான் 23 ரன்களிலும் அவுட் ஆகிவிட அணியின் கேப்டன் விராத் கோலி களத்தில் இறங்கினார். சுமார் 62 பந்துகளைப் பிடித்து 46 ரன்களில் அவுட் ஆகி ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.

இதன் பின் களமிறங்கி தல தோனியும் சிஎஸ்கே அணியில் முக்கிய நாயகனான கேதர் ஜாதவ் இருவரும் சேர்ந்து ஆட்டத்தைப் பட்டைய கிளப்பினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் முதல் முறையாக டெஸ்ட் தொடரையும், ஒரு நாள் தொடரையும் வெற்றிபெற்றுள்ளது இந்திய அணி. ஒரு நாள் போட்டியை வெற்றி அடைய சிஎஸ்கே அணி வீரர்கள் தான் காரணம் என்றால் மிகையாகாது.

மேலும் இந்தப் போட்டியின் மூலம் தோனி கம்பேக் ஆகியுள்ளார் எனத் தன் எதிரிகளுக்குக் காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here