சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் இளம் நடிகர்கள் யார் தெரியுமா?

0
67

சினிமாவில் நடிப்பது எல்லாருக்குமே ஒரு கனவாக இருக்கும்., காரணம் குறுகிய காலத்தில் புகழ், பணம், எல்லாமே வருவது சினிமாவில் மட்டும்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால் அதே சமயம், திறமை மற்றும் அழகு இருந்தால் மட்டும்போதாது.
அதிர்ஷ்டமும் சம அளவு இருந்தால் மட்டுமே இந்தத் துறையில் ஜொலிக்க் முடியும்.

அதனால்தான் அவர்கள நட்சித்திரங்களாக நம்மை எப்போதும் பிரமிக்க வைக்கிறரகள். அவர்கள் அந்த உயரத்திற்கு வருவது அத்தனை எளிதல்ல. நிறைய உழைக்க வேண்டும். திடீரன உச்சத்திற்கும் அழைத்துச் செல்லும், அதே நேரம் அதல பாதாளத்திற்கும் தள்ளிவிடும் இந்த சினிமா. அப்படி எத்தனையோ பேரை நாம் பார்த்திருக்கிறோம். எனவேதான் சினிமாவில் அதிர்ஷ்டமும் தேவை.

இன்று மாதச் சம்பளம் அம்பதாயிரம் வாங்குவதே பெரிய விஷயமாக இருக்கும்போது, கோடிக்கணக்கில் அசால்ட்டாக வாங்கும் இன்றைய இளம் நடிகர்களைப் பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஆர்யா

ஆர்யா படங்களில் சமீபமாக எந்த படமும் ஓடவில்லையென்றாலும், அவரது பாஸ் என்கின்ற பாஸ்கரன், அவன்-இவன் போன்ற படங்கள்
அவரை இன்னும் சினிமா உலகில் தக்க வைத்திருக்கின்றது. காமெடி, சீரயஸ் என எல்லா வேடங்களுக்கும் பொருத்தமானவர். ஒரு படத்திற்கு 4-6 கோடி வாங்குகின்றார்.

சிம்பு :

சிம்பு சிறு வயதிலிருந்து நடித்தாலும் ப்ளாக் பஸ்டர் படமாக விடிவி மட்டும் இருந்ததென சொல்லலாம். அவரது மற்ற படங்கள் ஓரளவு நல்ல பெயரையே அவருக்கு தந்தது. ஒரு படத்திற்கு 7 கோடி வாங்குகிறார்.

கார்த்தி :

இவரும் வெர்சடைல் நடிகர்தான். எல்லா படங்களும் ஓரளவு நன்றாகவே போனது. ஒரு படத்திற்கு 8-10 கோடி வாங்குகிறார். மெட்ராஸ், கொம்பன், தீரன் என நல்ல படங்களை அளித்திருக்கிறார். ஒரு படத்திற்கு 8-10 கோடி சம்பளம் வாங்குகின்றார்

தனுஷ் :

தனுஷ் நடிப்பினல மட்டும் உயர்ந்தவர். பாலிவுட் வரை கால்பதித்துள்ளார். பல சுமாரான பையன்களின் ரோல் மாடலாக இருப்பவர் என்று சொல்லலாம். 10- 15 கோடி சம்பளம் வாங்குகின்றார்.

விக்ரம் :

விக்ரம் உடலை வருத்தி பல அவதாரங்கள் எடுக்கும் அகசாய சூரன். வெற்றி தோல்விகளுக்கிடையில் நடிப்பை நோக்கி மட்டுமே செல்பவர். படத்திற்கு 15 கோடி வாங்குகிறார்.

சூர்யா :

ஆரம்பத்தில் இவரின் படங்கள் சரியாக ஓடவில்லை. காக்க காக்க படத்திலிருந்து அவரின் க்ராஃப் ஏறியது. கஜினியில் இன்னொரு முகம் தெரிந்தது. நல்ல படங்களை இன்னும் தருவார் என எதிர்பார்க்கலம. இவரின் சம்பளம் 25 கோடி.

அஜித் :

அஜித்தின் அளவிற்கு யாரும் தோல்விகளை தழுவவில்லை. இருந்தாலும் இன்றும் இவர்தான் முண்ணனி ஹீரோ . இதெப்படி என்பது பலருக்கு புருவம் உயர்த்தச் செய்யும். ஒரு படத்திற்கு 25-30 கோடி வரை வாங்குகின்றார்.

விஜய் :

இவரது பெரும்பாலான படங்கள் 150 நாட்களுக்கும் அதிகமாக ஓடியவை. டேன்ஸ், இளமை மாறா முகம் இவருடைய ப்ளஸ். இவருக்கென குழந்தை ரசிகர்கள் ஏராளம். கேரள மக்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக இருப்பவர் விஜய்தான். ஒரு படத்திற்கு 30 கோடி வாங்குகின்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here