திடீர்னு கொத்து கொத்தா முடி கொட்டினா உங்க வாழ்க்கைல அதிர்ஷடம் கொட்டப் போகுதாம்-ஜோசியம் சொல்லுது!

0
41

கொத்து கொத்தா முடி கொட்டினா அது உடல் நலக் கோளாறா இருக்கலாம், கூந்தல் பராமரிப்பின்மையாக இருக்கலாம் அல்லது பருவ நிலை மாறுபாடாக இருக்கலாம்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். ஆனா அதோடு மட்டுமில்லாம உங்கள் எதிர்காலத்தை சொல்லப் போகும் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பது தெரியுமா? அதோடு கூர்ந்து கவனியுங்கள். திடீரன கூந்தலின் தன்மை சிலருக்கு மாறும்.

லேசான சுருட்டையாக மாறும், அல்லது நேராக மாறும். கடினமானதாக மாறும் அல்லது மிருதுவாக மாறும். இத்தனைக்கும் எப்போதும் போலத்தான் நீங்கள் உங்கள் கூந்தலை பராமரித்துக் கொண்டிருப்பீர்கள். ஆனால் இப்படி திடீரென மாறுவதற்கு ஜோதிட சாஸ்திரத்தில் பல காரணங்களை கூறுகின்றனர். அவற்றை தெரிந்து கொள்ள இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்.

திடீரன முடி உதிர்தல் :

உங்களுக்கு நல்ல முடி வளர்ச்சி இருக்கும். எப்போதுமில்லாமல் திடீரன காரணமில்லாமல் முடி உதிர்தல் ஆரம்பித்திருக்கும். அதுவும்
சிலருக்கு கொத்து கொத்தாக ஆரம்பித்திருக்கும். என்னவென்றே தெரியாமல் புலம்ப ஆரம்பித்திருக்கிறீர்களா? அப்படியென்றால் உங்களுக்கு எதிர்காலத்தில் ஏதோ அதிர்ஷ்டம் அடிக்கப் போகுது என்று அர்த்தமாம். என்ன செய்தும் உங்கள் முடி உதிர்தலை கட்டுப்படுத்த முடியவில்லையென்றால் உங்களுக்கு ஏதோ ஒரு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வரப் போகுதென அர்த்தம்.

நடுச் சொட்டை ;

உச்சியில் திடீரென சொட்டை விழுந்தால் நீங்கள் பணக்காரர் ஆகப் போகிறீர் என்று அர்த்தமாம். நீங்கள் தொடங்கியுள்ள காரியம், வியாபரம் போன்றவற்றில் வெற்றி காணப்போகிறீர்கள் அல்லது நேர்மறையான நிகழ்வுகள் நடக்கப்போகுதென்று அர்த்தம்.

முன்தலை சொட்டை :

திடீரன நெற்றியிலிருந்து உங்களுக்கு சொட்டை ஆரம்பித்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம். ஆனால் சிறிது நேரம் பிடிக்கும். உச்சியில் முடி இருந்து இருப்பக்கங்களிலும் சொட்டை விழுந்தால் செய்த காரியத்தை முடித்தாலும் அதன் வெற்றிக் கனியை சுவைக்க முடியாமல் போகும்.

அதாவது காலம் தாழ்த்தியே உங்களின் வெற்றியை நீங்கள் அடைய முடியும் என்பதாகும்.

முடியின் நுனிப் பிளவு :

முடிகளின் நுனி வெடித்திருந்தால் உங்களுக்கு குழப்பங்கள் அதிகம் உண்டாயிருக்கும். செய்த காரியத்தை எப்படி முடிப்பது எனத் தெரியாமல் இருப்பீர்கள். உங்களின் உடல் நிலையும் லேசாக பாதிக்கும்.

கடினமான முடி :

திடீரென முடி கடினமாகவும் வறட்சியாகவும் மாறினால் உங்களுக்கு சில பிரச்சனைகள் தலைதூக்க ஆரம்பிக்கப் போகுதென்று அர்த்தமாம். ஆனால் அதனை சமாளிக்கும் மன தைரியமும் உங்களுக்கு வந்துவிடும் என்றாலும் முன்னெச்செரிக்கையாக இருக்கவே இந்த விஷயம் சொல்லப்பட்டுள்ளது.

சில்க்கியான பளபளப்பான முடி :

காரணமேயில்லாமல் மிருதுவாகவும், மிகவும் பளபளப்பாகவும் கூந்தல் மாறினால் நிறைய பாஸிடிவான எண்ண்ங்களும், நிகழ்வுகளும் நடந்தேறும்.

அடர்த்தியில்லாத முடி :

முடி அடர்த்தி இல்லாமல் இருப்பவர்கள் மிகவும் உணர்வுபூர்வமாக இருப்பார்கள். நேர்மயுடன் தாராள மனப்பான்மையுடனும் இருப்பார்கள்.

அடர்த்தியான முடி :

அட்ர்த்தியான முடி இருப்பவர்களுக்கு நல்ல ஆரோக்கியமான உடல் நிலை இருக்கும். எப்போதும் புது உத்வேகத்துடனேயே இருப்பார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here